- தமிழகம் முழுக்க நடக்கும் CAA எதிர்ப்புப் போராட்டங்களில் முஸ்லிம்கள் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை அமைப்புகள், இயக்கங்களுக்கு அப்பால் சாமானிய மக்களே அணிதிரண்டு நடத்தி வருகின்றனர்.
- இந்தப் போராட்டம் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அநீதிக்குள்ளாகி, வஞ்சிக்கப்பட்டு வந்ததன் எதிரொலி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
- இதை வெறும் CAAக்கான எதிர்ப்பாக மட்டும் எப்படி நம்மால் சுருக்கிப் புரிந்துகொள்ள முடியாதோ, அவ்வாறே வெறும் பாஜக எதிர்ப்பாகவும் இதைச் சுருக்கிவிடக் கூடாது. ஏனெனில், ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பாஜக-வுக்கு மாற்றாக காங்கிரஸையோ திமுக-வையோ கொண்டு வருவதற்காகத்தான் இவ்வளவுமா?
- இத்தனை ஆண்டுகாலமாக இங்குள்ள மையநீரோட்டக் கட்சிகள்தாம் நம்மை விளிம்புநிலைக்குத் தள்ளின; இப்போது பாஜக ஒருபடி மேலே போய் நம்மைத் துடைத்தெறியப் பார்க்கிறது. அவ்வளவுதான்.
- இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் எழுச்சி நாம் அரசியல்படுவதற்கும், நாம் இழந்த உரிமைகளை சமரசமின்றிப் போராடிப் பெறுவதற்கும் வழிவகுக்கட்டும்.
-அஹ்மத ரிஸ்வான்