கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த வீடியோவில் இருந்தது அப்போது பதினோறு வயதே ஆகியிருந்த அஹத் தமீமி, தன்னுடைய தாய் மண்ணை ஆக்கிரமிக்க வந்த இஸ்ரேலிய படைவீரரை எதிர்த்து நின்ற ஒரு குழந்தைதான் அவள்.
இதோ அவளின் கதை…
அஹத் தமீமி சட்டவிரோதமாக இஸ்ரேலின் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நபி சாலிஹ் எனும் மேற்குக்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பாலஸ்தீனிய கிராமத்தில்தான் வளர்ந்தால். அவளின் சிறு வயதிலேயே இஸ்ரேலிய ராணுவத்தினரால் அவளின் சமூகம் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது அவர்களின் வாழ்வாதாரமான நன்னீர் ஓடைகள் முடக்கப் படுதல் மற்றும் அவளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளனர்.
எல்லா பாலஸ்தீனியர்களையும் போலவே, இஸ்ரேலால் மீண்டும் மீண்டும் அஹத்தின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் மற்றும் கொலை செய்யப்பட்டனர். ஒரு குழந்தையாக இருந்தபோதே இஸ்ரேலிய வன்முறையை எதிர்கொண்ட அஹதின் துணிச்சலான எதிர்ப்பானது, அவளை உலகெங்கிலும் உள்ள பல பாலஸ்தீனியர்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளானவர்களுக்கும் எதிர்ப்பின் சின்னமாக விரைவில் மாற்றியது.
அதே ஆண்டில்தான் அவளுடைய மாமா இஸ்ரேலிய படையினர் கொலை செய்துள்ளனர் மேலும் அவளுடைய சகோதரனையும் அவர்கள் கைது செய்ய முயற்சிக்கும் போது அவள் விரலை உயர்த்திய இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்த வீடியோ உக்ரைன் சிறுமி மற்றும் ரஷ்ய படை வீரனை தனியாக எதிர்த்து நிற்கின்றாள் என்று தவறாக முத்திரை குத்தப்பட்டு வைரல் ஆக்கப்பட்டுள்ளது)
மீண்டும் 2015 ல் அஹத்தின் 12 வயது தம்பியை இஸ்ரேலிய படைவீரர் ஒருவர் கழுத்தை பிடித்து அவனுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி அச்சிறுவனின் தலையை பாறையில் மோதியுள்ளார் அப்போது அஹத் மற்றும் அவளின் தாயும் இணைந்து அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.
2017 ல் அஹத்தின் உறவினர் ஒருவரின் முகத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டனர் இச்சம்பவத்தில் அவரின் மண்டையோட்டின் ஒரு பகுதியே வெளியேற்றப்பட்டது. இதே ஆண்டில் அஹத் தன்னுடைய குடும்பத்தை துன்புறுத்திய ஒரு இஸ்ரேலிய படை வீரனின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்காக இஸ்ரேலியரால் தன்னுடைய பதினாறாம் வயதிலேயே எட்டு மாத சிறைவாசத்தை சுவைத்துள்ளார்.
2017 ல் அஹத்தின் சகோதரன் இஸ்ரேலால் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றும் கடந்த ஆண்டு அவளின் உறவினர் ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் அனைவரும் என்னிடம் கேட்கின்றனர் எப்படி உனக்கு அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இப்படி தைரியமாகவும் துணிச்சலாகவும் போராட பலம் கிடைக்கின்றது என, நான் இந்த எதிர்நோக்கும் சம்பவங்கள் அனைத்துமே இப்படி என்னை பலமாக இருக்க உந்தித் தள்ளுகிறது.
அவள் 2018 ல் எழுதியது.
தமிழில் – ஹபீப் ரஹ்மான்