இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR) ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவ்’ என்ற தலைப்பின் கீழ் கொண்டாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைகின்ற வரை சுதந்திரத்திற்காக வேண்டி எல்லாம் இழந்து போராடிய பல தியாகிகளை புறந்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியத் தொகை பெற்று ஆங்கேலேயர்களின் செருப்பு நக்கியாக வாழ்ந்த, காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்படுவோம் என்றவுடன் பயந்து உண்ணா நோன்பிருந்து தற்கொலை செய்துகொண்ட, தனக்குத்தானே ‘வீர்’ பட்டத்தை சூட்டிக் கொண்ட கோழை சாவர்க்கரின் புகைப்படத்தை சேர்த்திருக்கிறார்கள்.
இந்தியாவின் வரலாற்றை முற்று முழுதாக காவி மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சங்பரிவார் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களுடைய இருப்பை நிலை நிறுத்துவதற்காக காலம் காலமாக வரலாறுகளை மாற்றியமைப்பது பார்ப்பனியம் செய்து கொண்டிருக்கும் வேலை. இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனியம் இந்தியாவின் வரலாற்றை தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்தார்கள்.
அதனுடைய விளைவாக இந்த நாட்டின் ஆதிகுடிகளின் பங்களிப்பை எல்லாம் மறைத்து விட்டு, வேதகாலத்தில்தான் இந்த நாடு முன்னேறியது என்றும் அவர்கள்தான் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்கள் என்றும், இந்த நாட்டின் ஆதிகுடிகளான நாகர்களும் திராவிடர்களும் ஆற்றலோ அறிவோ திறமைகளோ இல்லாத சூத்திரர்கள் எனவும் மாற்றியமைத்தார்கள். வரலாற்றை கட்டமைத்தார்கள்.
அதேபோன்ற ஒரு நிலையைதான் சமகால இந்திய வரலாற்றிலும் அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 1925 இல் ஆரம்பித்த ஆர் எஸ் எஸ் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எந்தப் பங்கையும் செலுத்தியது கிடையாது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்காதது மட்டுமல்ல ஆங்கிலேயர்களுக்கு ஒத்திசைவாக நடந்து கொண்டார்கள் என்பதுதான் வரலாறு. ஆங்கிலேய மகாராணிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள் என்ற வரலாற்றை நாம் மறந்துவிடலாகாது. நாம் மோத வேண்டியது ஆங்கிலேயர்களுடன் அல்ல. முஸ்லிம்களோடுதான் என்று தங்கள் தொண்டர்களுக்கு போதித்தவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான கோல்வால்கர்.
இந்தியா இரண்டாக பிளவு பட வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் இந்துத்துவவாதிகள். முகமது அலி ஜின்னா இவர்கள் விரித்த வலையில் விழுந்த நபர். இந்தியா இரண்டாக பிளவுற வேண்டும் என்று ஜின்னாவுக்கு முன்பாகவே கோரிக்கை வைத்தவர்தான் இன்று வீரசாவர்க்கர் என்று சொல்லப்படக்கூடிய கோழை சாவர்க்கர். சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த வரலாறுதான் ஆர்.எஸ்.எஸ். வரலாறு.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின், தியாகிகளின் குறிப்பாக முஸ்லிம் மற்றும் முற்போக்கு சிந்தனையுடையவர்களை மறைக்கும் வேளையில்தான் பாசிச பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. 12 காலம் சிறைவாசம் அனுபவித்த, சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை மிகச் சிறப்பான முறையில் கட்டமைத்து முன்னெடுத்துச் சென்ற, சுதந்திர இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் அம்சமாகவும் சுதந்திர இந்தியாவில் அறிவு பின்புலமாகவும் இருந்த அபுல்கலாம் ஆசாத், பகத்சிங்குடன் தூக்கு மேடை ஆரிய அஸ்பகுல்லாகான், அலி சகோதரர்கள், மாவீரன் திப்பு சுல்தான், மௌலானா உபைதுல்லா சிந்தி போன்ற எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகளை இருட்டடிப்பு செய்கிறது பாசிச பாஜக அரசு. ஆதிவாசி மற்றும் சந்தல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எங்கே? பெண் போராளிகள் ஒருவர் கூட இல்லையா?
இவர்கள் அனைவரின் தியாக வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கி இருக்கிறது. அது மட்டுமன்றி கேரளாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்த வாரியம் குன்னது குஞ்சஹம்மது ஹாஜி, ஆலி முஸ்லியார் உட்பட மாப்பிள்ளா போராளிகள் 384 பெயரை தியாகிகள் பட்டியலில் இருந்து எடுத்து இருக்கிறது இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR). சுதந்திர போராட்ட வரலாறு தங்களுடைய வரலாறாக இருக்க வேண்டுமென்று சொன்னால் அதற்காக கூடிய போராடிய உண்மையான போராளிகளின் வரலாறை மறைக்க வேண்டும். அதற்குத்தான் இந்த ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவை’ பாஜக பாசிச பாஜக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அடுத்த தலைமுறை மக்களிடையே வரலாறுகளை சரியான முறையில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு இந்த தலைமுறைக்கு இருக்கிறது. இதை நாம் சரியாக கையாளவேண்டும். ஒவ்வொரு வட்டார அளவிலும் வரலாறுகளை சேகரிக்க வேண்டும். ஆவணப்படுத்தத் வேண்டும். சிறந்த வரலாற்று நிபுணர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும்.
– கே எஸ் அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்