பச்சிளம் நரம்புகளை அறுப்பதற்கு
இரும்பு ஆயுதங்கள் சுமந்திடும்
உம் கைகளுக்கு முன்னால்
சிறு கற்கள் கொண்டு
உம் இரும்பு துப்பாக்கிகளைத்
தொடை நடுங்கச்செய்யும்
தூஃபான் நாங்கள்
நூறு கட்டிடங்கள் துளைத்து
இறங்கும்
உம் வெடி குண்டுகளின் கதறல்கள்
எங்களின் நெஞ்சைக் கிழிப்பதற்கு
முன்னால்
எம் “அக்ஸா”வில்
எம் பாங்கொலிகள் கொண்டு
உம்மை உருக்குலைத்திடும்
தூஃபான் நாங்கள்
அநீத கவசங்கள் அணிந்துவிட்டாய்
அநீதத்தால் எம் நிலங்களைச் சுரண்டிவிட்டாய்
உம் நெற்றியின் சிறு மயிர்
“அக்ஸா”வின் சுவர்களைத்
தொடுவதற்கு முன்னால்
எம் தாய்மார்களின் அழுது
வறண்டு போன குரல்களால்
எம் சிதிலமடைந்த கட்டிகளால்
அநீதி இழைக்கப்பட்ட எம் அறச்சீற்றத்தால்
உம் அநீதக் கவசங்களை உடைத்து
சுதந்திர கொடி ஏற்றும்
தூஃபான் நாங்கள்
உலக ஊடகங்கள் அநீதியின் பக்கம் நின்றுகொள்ளட்டும்
கோழை வல்லரசுகள் உம் கால்களை நக்கிக்கொள்ளட்டும்
குழந்தைகள் குருதி உறிஞ்சுவதற்கு ஆயுதங்கள் பதமாக்கப்படட்டும்
உலகின் அநீதிகள் யாவும் உம் ஆடைகளின் மேல் பைகளுக்குள் சொருகிக் கொள்ளட்டும்
எம் நீதவான்களுக்கெல்லாம் நீதவான் அல் ஆதிலின் “அபாபீல்” படைபலம் கொண்டு
சிறு சிறு கூர்தீட்டப்பட்ட கற்கள் ஏவி
உம்மை என்றும் அழித்தொழிக்கும்
தூஃபான் நாங்கள்
தூஃபான் நாங்கள்
“அல் அக்ஸா”வின் தூஃபான் நாங்கள்
புயலாய் பிரளயமாய் பெருமழையாய்
திரண்டு வருவோம் சுதந்திர அக்ஸாவை நாங்கள் முத்தமிட்டே தீருவோம்
“தூஃபான் அல் அக்ஸா” எனும் போர்
வெற்றியடைந்து
குழந்தை கொலையாளிகளின் முகங்களைக் கிழிக்கட்டும்
பாகுபாடில்லா பேதமில்லா வயது வித்தியாசமில்லா ஷுஹதாக்களின்
குருதிச் சொட்டுக்கள்
அக்ஸாவின் விடுதலையை எட்டாமல்
உலக முஸ்லிம்களின்
“அல்லாஹ் அக்பர்” எனும் தூஃபான் படைகள் ஓயாது