கடல் யானை சோம்பலாய் காணாது உன்னையே தாண்டிடாத ஆதங்கம் கண்டு
மெய்யினை காத்திட அறத்தினை சூழ்ந்திட கூட்டறிக்கையில் உன் விரல் பேசும் எதிர்வினை
அறம் அறுத்து துன்பம் தறிக்க சதிகள் களவாடும்
தனியாய் உயர்வது தரமாய் காணாது அரணாய் காண்பது குமுவாய் வினைவது
சாந்திகன் அடைகாத்து கொடியது விலகிட
அகிம்சை கண்டிட காந்தியம் வேண்டாம்
கொள்ளையன் அடங்கிட அகிம்சை போதும்
துரோகி அழிந்திட சூத்திரம் போதும்
நண்டாய் உருவெடுத்த தேள் கொடியது
அதன் உயிர் கொல்லும் விஷம் போதும்
தரகர் சேர்க்கும் எண்ணம் அனுமதியில்லை
தடை துளைக்கும் அறிவு அறனில்லை
பணம் தடுக்கும் சம்பவம் நியாயமில்லை உயிர் உழைக்கும் உழைப்பிற்கு கூலியில்லை
அறம் காணும் விருப்பம் பயனில்லை
நம் அறிவு அறமாய் அலரட்டும்
நம் வாழ்வுரிமை கைக்குள் அடங்கட்டும்
உயர்ந்து நிற்க முகங்கள் வேண்டாம் தடிகள் வேண்டாம்
அறம் போற்றும் கழகம் போதும்…
-முஹம்மது ஃபைஜ்,நான்காம் ஆண்டு மாணவன்,அஸ்ஸலாம் இஸ்லாமிய கல்லூரி