பொய், பயம் இரண்டையும் வைத்து அரசியல் செய்வது அந்நாட்டு மக்களை கையாள்வதில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லேடனையும் அவரது குழுவினரையும், கோலியாத் ஆகவும் அமெரிக்கா அதைத் தாக்கும் உண்டிகோல் போலவும் செய்த ‘பய அரசியல்’ இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்திராத அளவுக்கு மக்களை கட்டுக்குள் வைத்திருந்தது.
ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்ட பிறகு, அமெரிக்கா 2002ல் அல்கைதாவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு பெயர் பட்டியலை தயார் செய்தது. 170 நபர்கள் கொண்ட இந்தப் பெயர் பட்டியலில் இருக்கும் 20 நபர்கள் ஏற்கனவே இறந்திருந்தனர், வெறும் ஏழே நபர்கள் தங்களின் வினோத குறிக்கோளுக்காக உயிர்த்தியாகம் செய்திருந்தனர். 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் 19 நபர்கள் அந்தக் குழுவில் இருந்து வெளியேறி இருந்தனர். அவர்களில் சிலர் வேறு சித்தாந்தத்தை உடைய குழுவில் இணைந்தார்கள், சிலர் கல்வி கற்க சென்றிருந்தனர், இன்னும் பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.
ஒசாமா பின்லேடன் தன் ஐந்து மகன்கள் உட்பட 120 பேர் கொண்ட ஒரு ஆதரவு குழுவை திரட்டி இருந்தார். இவர் தனது தீவிரவாத திட்டத்தை பல வருடமாக தீட்டி வருகிறார். அதன் ஒரு அங்கமாக 2002ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடனும் இவரது குழுவினரும் அல்கைதாவை விட்டு விலகினர். ஒசாமா பின்லேடன் அமெரிக்காவில் இருக்கும் செஷைர் நாட்டின் முன்னாள் திருச்சபை கவுன்சிலரான ஜேன்ஃபெலிக்ஸ் பிரவுன் என்பவரை திருமணம் செய்து நார்மெண்டியில் வசித்து வந்தார்.
அல்கைதா குறித்த இந்த கணக்கெடுப்பு உண்மையோ, இல்லையோ ஆனால் இதுவே தன்னுடைய அற்ப எதிரியான அல்கைதா மீது செப்டம்பர் 10 2001 வரை அமெரிக்காவின் கண்ணோட்டமாக (சுற்றறிக்கையாக) இருந்தது. அடுத்த நாள் (11 செப்டெம்பர் 2021 அன்று) இந்த குழு உலக வரலாற்றின் மாபெரும் குற்றமாக கருதப்படும் நிகழ்வை நிகழ்த்தியது.
3000 உயிர்களை காவு வாங்கிய இந்தக் குற்றச் செயல் கடவுளின் விருப்பம் என்ற கருத்து சுத்த முட்டாள்தனம்.
சவால்
இரட்டை கோபுரத் தாக்குதலை குறித்து ஆண்டு தோறும் நாம் துக்கம் அனுசரிக்கிறோம். இதில் நாம் சந்திக்கவிருக்கும் உண்மையான சவால் என்னவென்றால், 21ஆம் நூற்றாண்டில் பனிப்போரில் அமெரிக்காவை எதிர் கொண்ட சோவியத் யூனியன் நாடுகளுக்கு இணையான எதிரியாக அல்கைதாவை ஏன், எப்படி இந்த மேற்கு நாடுகள் தூக்கிப் பிடித்தன என்பதேயாகும்.
அல்கைதா பலவித குற்றங்களையும் பல கொலைகளையும் நடத்தி அதை ஒளிபரப்பியது மிகப் பெரும் குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை, அது கண்டிக்கப்பட வேண்டியதே. இருப்பினும், செப்டம்பர் 11 2001 இல் அல்கைதா உலகின் மிகப் பெரும் அச்சுறுத்தலா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆம், நாம் வாழும் இந்த உலகில் நம் மனித குலத்திற்கு இதைவிட பெரிய அச்சுறுத்தல்கள் நிறையவே உள்ளன.
உதாரணமாக, நாம் அனைவரும் சந்திக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று அணு ஆயுதம்.1983 இல் வெளியான The Day After எனும் திரைப்படத்தின் அசல் ஒளிபரப்பைக்கண்ட கோடிக்கணக்கான நபரில் நானும் ஒருவன். அந்தத் திரைப்படத்தில் போர் மூலமாகவும் அணு ஆயுத மூலமாகவும் ஏற்படும் அழிவு நாசம்,போன்றவை உலகையே அழிக்கும் அளவிற்கு இருந்தது மட்டுமல்லாமல் ராணுவம் பயன்படுத்தும் போர் முறையில் Mutual Assured Destruction MAD என்று சொல்லப்படும் அணு ஆயுதம் மூலம் போர் புரியும் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உறுதியான அழிவுக்குள்ளாகும் என்ற கோட்பாட்டையும் கண்டு யார்தான் அஞ்சி நடுங்க வில்லை. அந்தப் படத்தில் இறுதியில் உயிர் தப்பிய சிலர் தங்களது வானொலியை பயன்படுத்தி யாராவது இன்னும் உயிர் தப்பியுள்ளனரா? ஏதேனும் உதவி கிடைக்குமா? என்று பார்க்க முயற்சிக்கும் காட்சி மனதை நடுங்கச் செய்யும்.
அச்சுறுத்தல்கள் வரிசையில் நாம் பேராசை காரணமாக இந்த இயற்கையை சுரண்டி ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள், (சிதைவுகள்) இந்தத் தலைமுறையினர் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தாகும். 2021 வரை ஏறத்தாழ 60 லட்சம் உயிர்கள் பசியினால் மட்டும் இறந்துள்ளது. மேலும் இந்தப் பெருந் தொற்றுகாரணமாக மட்டும் கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து லட்சம் உயிர்களை இழந்துள்ளோம்.
இந்த இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்வு இவ்வளவு பெரிய பூதாகரமாக ஆக இரண்டு காரணங்கள், ஒன்று இது அமெரிக்காவில் நடந்தேறியது, இரண்டு இது தொலைக்காட்சி ஊடகங்களில் மிகப்பெருமளவில் ஊதி ஒளிபரப்பு செய்யப்பட்டதும்தான். உண்மையில் மனிதகுலம் சந்திக்கும் பேராபத்துகள் மற்றும் பேரழிவுகள் பெரும் மலைகள், பாறைகள்போல இருக்கும் நிலையில், இது ஒரு சிறிய கல்லேஆகும். கடந்த ஆண்டில் மட்டும் ஆப்கான் போரில் 19,044 உயிர்களும், யமன் நாட்டில் 19,056 உயிர்களும் சூறையாடப்பட்டு இருக்கின்றது. ஆனால் நாம் அமெரிக்க வெள்ளையர்கள் இதனை கண்டுகொள்ளாதது போல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது..
ஒரு சிறிய குழு இரட்டை கோபுர தாக்குதல் போன்ற பெரிய அழிவை ஏற்படுத்தியது உண்மையில் தனித்துவம் வாய்ந்தது கூட இல்லை. 1995இல்,‘ டிமதி மெக்வே’ என்பவர் ஒரு தனி நபராக இருந்து கொண்டு ஓக்லஹோமா எனும் நகரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தார். இந்தத் தாக்குதலில் 19 குழந்தைகள் உட்பட 168 நபர்கள் இறந்துள்ளனர். மேலும் 680 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் இந்த உலகில் முஸ்லிம்களில் மட்டுமே தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்ற பேச்சு அர்த்தமற்றது. இன்னும் சொல்லப்போனால் டிமதி மெக்வே ஒரு (தேச பக்தி) இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த இயக்கம் தங்களை தாங்களே ஒரு தேச பக்தி இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறது. இன்னும் இந்த இயக்கத்தில் வலது சாரி (பயங்கரவாத சிந்தனைத்) தத்துவம் பேசக்கூடிய ஆயிரக்கணக்கான குழுவினரை கொண்டு செயல்பட்டு வருகிறது. உண்மையில் இது அமெரிக்க அரசை உள்ளிருந்து கொண்டே அழிக்கக்கூடிய கவிழ்க்க கூடிய அளவிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகும். இவர்களைப் போன்றவர்கள் தான் டொனால்ட் ட்ரம்ப் போன்ற நபர்களை அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக தேர்வு செய்து அரசை கவிழ்க்க நினைக்கின்றனர்.
உண்மையில் நிலவும் பெரிய அச்சுறுத்தல்கள்
The Nation நிறுவனத்தின் விசாரணை நிதிக்குழு 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி அமெரிக்க மண்ணில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் மட்டும் 201 பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகள் நடந்துள்ளது. இதில் 115க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் வலதுசாரி குழுவினரால் நடத்தப்பட்டது, மேலும் இந்த தாக்குதல் முப்பத்தி மூன்று உயிர்களை பறித்துள்ளது. மறுபுறம் இஸ்லாம் மதத்தின் அடையாளத்தை பொய்யாக வைத்துக்கொண்டு அதன்பெயரில் பயங்கரவாத தாக்குதல்கள்63 நடத்தப்பட்டுள்ளது, இதில் வெறும் 8 உயிர்கள் மட்டுமே இழந்துள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கையில் உண்மை நிலை புரியவரும். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் 9 ஆண்டுகளில் 1,80,000 மேற்பட்ட கொலைகள் அரங்கேறி உள்ளது.
இரட்டை கோபுர நிகழ்வை மறக்கவோ மறைக்கவோ வேண்டும் என்று கூறவில்லை, எனினும் இதை பயன்படுத்திக்கொண்டு ‘இஸ்லாம் தீவிரவாதம்’ போன்ற ஒரு மாய பிம்பத்தை வைத்துக்கொண்டு 33 கோடி மக்களுக்கும் பேர் ஆபத்தைத் தரும் அச்சுறுத்தல் என அமெரிக்க அதிபர்கள் அரசியல் செய்வது சுத்த முட்டாள்தனமே. வெறும் சொற்ப நபர்கள் அறிவின்மையால் ‘முஸ்லிம்’ என்ற பெயரை வைத்துக் கொண்டு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நபர்களை சந்திக்க நேரிடும். ஆனால் பருவநிலை மாற்றம் மொத்த உலகத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் ஒரு அச்சுறுத்தல் ஆகும்.
இப்பொழுது நாம் பாதி தெளிவே அடைந்துள்ளோம். இனி நாம் சிந்திக்க வேண்டியது அமெரிக்கா போன்ற பெரும் சக்தி ஏன், எப்படி இஸ்லாமிய பயங்கரவாதத்தை மட்டும் தனது முக்கிய எதிரியாக எடுத்துக்கொண்டு மெக்வெய் நிகழ்த்திய குண்டு வெடிப்பு போன்ற தாக்குதலில் தலையிடாமல் குற்றவியல் நீதிமன்றங்களுடன் அந்த வழக்கை நிறுத்திவிட்டது.
நான் ஒசாமா பின்லேடன் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை, அவர் செய்தது மாபெரும் குற்றமே, அவரது கற்பனையான ஆட்சி மற்றும் சமூகம் இரண்டையும் உருவாக்க மக்களை படுகொலை செய்வது ஒரு போதும் உதவாது என்பதே நிதர்சனமான உண்மை.
மறுபுறம் அமெரிக்க அதிபர்கள் நம் வாழ்வை இன்னும் சிறந்ததாக அமைக்க அழைத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? என்று கேட்டால், அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு ஒரு பதில்.,
என் மகனின் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒரு முறை இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்துப் பேச நேர்ந்தது. அவர் பிரிட்டிஷ் கடற்படையில் இருபது ஆண்டுகள் பணபுரிந்தவர். உலகின் பல சிக்கல்களுக்கு இராணுவம் தீர்வளித்துள்ளது, எனவே இராணுவம் பாணியில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு அவரது கருத்தைக் கேட்க ஆவலோடு இருந்தேன். ‘கடந்த 100 ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் மட்டுமே பிரிட்டிஷ் தலையிடும் அளவிற்கு தகுதியான ஒரே மோதல் (விவகாரம்).’ இரட்டை கோபுர தாக்குதல் எல்லாம் ஒரு விஷயமே இல்லை போன்று கூறி என்னை வியப்பில் ஆழ்தினார். அநியாயம் இழைப்பவர்களை எதிர்த்து நிற்பவருக்கு நாம் தோள் கொடுத்து உதவ வேண்டும் என்பதற்காக இது போன்ற விஷயங்களுக்கு சொற்ப நபர்களை அழிக்க நம் பிள்ளைகளை அவர்கள் இடத்தில் ஊடுருவி அவர்களை அழிப்பது முட்டாள்தனம் தான். அவரது 20 ஆண்டு அனுபவம் முதிர்ச்சி அவர் பேச்சிலிருந்தே நன்கு அறிய முடிகிறது.
சமீபத்திய ஆப்கான் போர் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்று உள்ளோம். இப்போது ஆட்சியும் அதிகாரமும் தாலிபான்கள் கைகளில்தான் உள்ளது. இந்தப் போரில் மட்டும் சுமார் 2 லட்சத்து 41ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் முதல் லிபியா வரை உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் அரங்கேறிய நாச வேலைகளை ஒரு போதும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த இடத்தில் அமெரிக்கா வாக்களித்த சுதந்திர காற்று எங்கு உள்ளது?
நம்முடைய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஊடுருவல் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் வெறுப்பை தூண்டியது என்று வெறுமனே சொல்லிவிட்டு கடப்பது சரியாகாது. எல்லாவற்றுக்கும் மேல் நம்முடைய ஆக்கிரமிப்புகள் பொதுவாகத்தான் இருந்தது.
1776இல் இருந்து அமெரிக்கா சுமார் ஒரு இருபது ஆண்டுகளுக்கு உள்ளாகவே மட்டும் தான் எந்தப் போரிலும் பங்கேற்காமல் தனது வாழ்க்கையை அமைதியாக கடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அமெரிக்கா போருக்கு தயாராகும் பொழுது, அந்தப் போரை வைத்தும், அந்தப் போரின் நோக்கங்களை வைத்தும் அரசியல் விளம்பரங்கள் தான் செய்கிறது. நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில்கள் நாம் ஏற்று ஒப்புக்கொண்ட பல பயங்கரமான நாட்டுக் கொள்கைகள் வழியாக நமக்கு தெளிவாகிறது. இரட்டை கோபுர தாக்குதலில்முதலில் பலியானது சட்டமே ஆகும். சட்டம் அனைவருக்கும் சமமானதே எனும் உயர் கொள்கை வேரறுக்கப்பட்டது.
நமது கவனம் உடனே ஆப்கான் போர் மீது விரைந்து சென்று விட்டது. இரட்டைக் கோபுரத் வழக்கு நம்மை புலனாய்வு விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே ஒழிய நம்மை மென்மேலும் போருக்கு இழுத்துச் செல்லக் கூடாது. ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கைய்தா குழுவினர்களால் ஏற்படும் தீங்கு உலகத்திற்கே பேரழிவு விளைவிக்கக் கூடியது என்று உலகளாவிய பாசாங்கை அமெரிக்கா விட்டுவிடுமா என்ன? அதனை முதன்மைப்படுத்தவே நினைத்தது! நாம் ஏன் உயிர் தியாகத்தை பெருமையாக கருதும் இதுபோன்ற குழுவினருக்கு உயிர் தியாகி எனும் பட்டம் கொடுக்க உதவினோம்? அவர்களை அழித்து உதவினோம்?
ஜனவரி 11 2002 இல்,குவாண்டனமோ தடுப்பு சிறையை நிறுவினோம். முறையான விசாரணை எதுவும் இன்றி யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் அடிப்படையில் காலவரையறை இன்றி இந்த சிறையில் அடைத்து வைக்க முடியும். இதன் மூலம் அமெரிக்க பாதுகாப்பாக இருக்கும் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இது போன்ற சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாக நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். மேக்னாகார்டா (சட்டம் முன் எவ்வளவு பெரிய அரசராக இருந்தாலும், அரசாங்கமாக இருந்தாலும் குற்றம்செய்தால், தண்டனை உண்டு என்பதாகும். இது 1215ஆம் ஆண்டு இங்கிலா்தின்ஜோன் அரசரால் கொண்டுவரப்பட்டது.) போன்ற சட்ட ஒழுங்கை நாம் வீசி எறிந்து விட்டோம். நாம் சுற்றி வளைத்த முஸ்லிம்கள் ஜெனிவா தீர்மானத்தின் கீழ் உள்ள பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் இல்லை காரணம் அவர்கள் நம் போர் விதிகளை எல்லாம் மதிக்கவில்லை என்று நாம் கூறிக்கொண்டோம். ஹிட்லர் இலட்சக்கணக்கில் உயிர்களை வதை முகாம்களில் கொன்று குவித்ததை விடவா இவர்கள் செய்தது பெரிய கொடுமை. அதை ஒப்பிட்டுப்பார்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.
இது ஒருபுறம் இருக்க, இந்த உலகம்,சித்ரவதை செய்வது தவறென்று கூறஅதை மெல்ல மெல்ல எதிர்த்துக் கொண்டிருந்தது.இந்த எதிர்ப்பும்,போராட்டமும் 1985ல்ஐக்கிய நாடுகள் நடத்திய சித்திரவதை எதிர்ப்பு மாநாட்டில் உச்சம் பெற்றது.
தண்ணீரைக் கொண்டு சித்திரவதை செய்வது பின் அதை விசாரணை முறை என்றும் கூறுவதை இவர் ஹிட்லரின் (கெஸ்டபோ என்று அழைக்கப்பட்ட) நாஜி அரசியல் படை பயன்படுத்திய முறையாகும். டொனால்ட் ரம்ஸ்பெல்ட் என்ற அமெரிக்கா அரசு அதிகாரி இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, இந்த தண்ணீர் சித்திரவதையை கைதியிடம் உண்மையை வரவழைக்கும் ஒரு தந்திர வழிதான், சித்தரவதையெல்லாம் இல்லை என்று கூறி முடித்தார். இந்த கூற்றை கேட்டு நாம் உடனே நம் சித்தரவதை எதிர்ப்பு போராட்டம் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம், இல்லையா?. குவாண்டனமோ சிறை மற்றும் அபு கிரைப் சிறை போன்ற சிறைகளுக்கு சென்று பார்வையிட்டு அங்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்க நாம் நம் பிரிதிநிதி ஒருவரை அனுப்பினோம்.
அதே சமயத்தில் நாம் ஏற்கனவே இராக்கை கைப்பற்றியிருந்தோம். அரபு வசந்தகாலத்தில் வளர்ந்து வரும் ஜனநாயகத்தை ஆதரித்தது போல் நடித்து தக்க சமயத்தில் முதுகில் குத்தினோம். வடகிழக்கு சிரியாவில் இருக்கும் குர்திஸ் எனும் இடத்தில் இருந்த நம் விமானப் படை ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டோம். மேலும் துருக்கி அதிபர் எர்டோகன் அவர்களை நாம் போருக்கும் அழைத்தோம். இங்கு நாங்கள் எகிப்தில் செய்தது போலவே இராணுவப் பணிகளிலும் துடி துடிப்புடன் இருந்தோம்.
பின் நம் அரசியல் அமைப்பு சட்டப் பேராசிரியர், ஒபாமாவை சிறைவாசிகளை சித்திரவதை செய்வதை நிறுத்த சொன்னது, அதை சமன்படுத்தும் விதமாக அவர்களை விசாரணை ஏதுமின்றி கொள்ளத் தீர்மானித்தார். குவான்டனாமோ சிறையில் கிடந்து அழுகுபவர்களை வேட்டயாடும் ட்ரோண்களை பயன்படுத்தி அழித்தார்.
இறுதியில், போலித்தனம், பொய், ஆகியவற்றை வெறுப்பை வளர்க்கக்கூடிய ஆயதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் திட்டங்களும் விடுதலை, சுதந்திரம், நல்ல வாழ்வு பக்கம் தான் அழைத்துச் செல்கிறது என்பதையே நாம் ஒரு சாரார் வாழ்வை அழித்து அச்சுறுத்தியே மக்களை நம்ப செய்கிறோம். இது எவ்வளவு பெரிய போலித்தனம். நம் நாட்டுக் கொள்கைகள் எல்லா கொள்கைகளும், ஒப்பந்தங்களும் முஸ்லிம்கள் உட்பட நன்கு வாழ வேண்டிய நல்ல மனிதர்கள் பலரை அந்நியமாக்கி விட்டது. ஆக மொத்தம் நாம் மக்களை வெளிச்சமான நல்ல வாழ்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் உன்னத கடமையில் தோற்று விட்டோம்.
ஜோபிடன் கூறுகிறார் ‘அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளது. ஒப்பிடுகையில் ஒரு ஆப்கான் குடிமகனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ஒரு சராசரி ஆப்கான் குடிமகனின் தோராயமான ஆண்டு வருமானம் 500 அமெரிக்க டாலர்கள் ஆகும், 50,000 டாலர்கள் என்பது ஒரு சராசரி குடிமகன் நூறு ஆண்டு வருமானம் ஆகும். நமது வரிப்பணம் எங்கு சென்று கொண்டிருக்கிறது?
நம் மொத்த பணமும் காபூலில் நாம் ஆட்சி அமைக்கவும் ஆயுதம் தயாரிக்கவும் மட்டுமே சென்றுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வைத்து நாம் ஆப்கான் மக்களுக்கு என்ன செய்தோம்? ஒன்றுமில்லை என்பதே பதில்.
வரலாற்றை திரும்பி பார்க்கையில் நாம் கற்றுக்கொள்வது, வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் .கடந்த 20 ஆண்டுகள் நடந்த நிகழ்வை உணர்ந்து அதன் மூலமாக உண்மையான வரலாற்றையும் அதன் படிப்பினைகளையும்கற்கமுயல்வோம்.
கிலிவ் ஸ்டஃப்போர்ட் ஸ்மித்
மனித உரிமை வழக்கறிஞர்
அல் ஜஸீரா இணைய தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
தமிழில் : ரிஃபாசுத்தீன்