சென்னைக்கு என்று பல அடையாளங்கள் உள்ளது. தலைமையகம், மெரீனா கடற்கரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என சென்னையின் அடையாளங்கள் நீண்டுகொண்டே செல்லும். அதில் ஒன்றுதான் மழைக்காலங்களில் சென்னை தண்ணீரில் மிதப்பது.
ஒரு மணி நேரம் விடாது மழை பெய்தாலே போதும் “மீண்டு வா சென்னை” என போஸ்டர் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் மக்கள். அந்த அளவு சென்னையின் உள்கட்டமைப்பு வசதி மிக மோசமாக உள்ளது. இதற்குப் பின்னால் அளவுக்கதிகமான மக்கள் தொகை. நாளுக்கு நாள் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட விளைவுகள் என்ற அடிப்படையில் சென்னையின் நிலை என்பது பரிதாப நிலைதான்.
மழைக்காலங்களில்தான் இவ்வாறு சரி வெயில் காலங்களிலாவது நிம்மதியாக இருக்க முடியுமா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான பதில். ஆம் மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்கள் இன்னும் சில மாதங்களில் வெயில் காலம் வந்தவுடன் குடிக்க கூட நீர் இல்லாத அளவு கடும் நீர் தட்டுப்பாட்டிற்கு ஆளாகிறார்கள். குடிநீர் மட்டுமல்லாது அடிப்படை தேவைக்கான நிலத்தடி நீருக்குக்கூட கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பணம் கொடுத்து அன்றாட தேவைகளுக்கு கூட நீர் வாங்கும் அளவுதான் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது.
இந்நிலையில்தான் வழக்கம் போல மழையின் காரணமாக சென்னை மிதக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக களத்திற்கு சென்று மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பார்வையிட்டுள்ளார். களத்திற்கு வந்து பார்வையிடுவதால் மழை வெள்ளம் தேங்காமல் முற்றிலுமாக தடுத்துவிட முடியுமா? இதானால் ஏற்படக்கொடிய அழிவுகளை முழுமையாக தடுத்துவிட முடியுமா என்றால் இல்லைதான். ஆனால், வழக்கம் போல தனது வீடு உடைமைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிடும் மீண்டும் முஸ்லீம் பாய்களும் சமூக ஆர்வலர்களும் வந்துதான் நமக்கு உணவு கூட வழங்க வேண்டும் என்று ஆதரவற்று இருக்கும் மக்களுக்கு நிச்சயமாக ஸ்டாலின் அவர்களின் வருகை ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
உடனடியாக களத்திற்கு வந்து உங்களுடன் நான் இருக்கிறேன் என்று மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை வழங்குவதுதான் ஒரு தலைவருக்கான அடையாளம். அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். ஆனால் இதோடு நின்றுவிடாமல் இனி வரும் காலங்களில் இவ்வாறு மழை நீர் எங்கும் தேங்காமல் மக்கள் மழை வெள்ளத்தில் மிதக்காமல், வெயில் காலங்களில் குடிநீருக்கு அலையாமல் ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்வதுதான் ஸ்டாலில் ஒரு தலைவராக சென்னைக்கு ஆற்ற வேண்டிய கடமையாக உள்ளது.
பாதிப்பு ஏற்பட்டு மக்கள் எங்கே எனது தலைவர் என்ற கேட்டு கேட்டு ஓய்ந்த பிறகு பொறுமையாக விமானத்தில் வந்து பாதிப்புகளை பார்வையிடும் தலைவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் களத்தில் நிற்பவந்தான் தலைவன் என்ற விதியைத்தான்.