கோவிட்-19ம் உச்ச நீதிமன்றமும்
சாதாரண காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் முக்கியமானது என சவாசமாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால், நெருக்கடியான நேரங்களில், அரசியல் நிர்ணயச் சட்டம், அதனை செயல்படுத்திடும், வழிமுறைகள், அதனை செயல்படுத்திட வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் அக்கறை அனைத்தும் சோதிக்கப்படுகின்றன.
இந்த சோதனைகளில் நமது உச்ச நீதிமன்றம் வெகுவாகவே தோற்றுப்போய்விட்டது.
கோவிட்-19 காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வீழ்ச்சி அவமானமானது.
இந்த ஆய்வு, நமது உச்ச நீதிமன்றம் எப்படி ஓர் அவவேளையில் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், மக்களையும் ஒட்டுமொத்தமாகக் காலை வாரிவிட்டது என்பதைப் பற்றியதே!
உச்ச நீதிமன்றத்திற்கு வரும் சில வழக்குகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டனவாக இருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது நீதிபதிகள் முழு விஞ்ஞானிகளாகவோ, மருத்துவர்களாகவோ, இருக்க வேண்டாம் என யாரும் எதிர்பார்த்திட வேண்டாம்.
ஆனால், அவர்கள் – நீதிபதிகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியும் – அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் கொள்கைகளைப் பற்றியும் அவற்றின் நோக்கங்களைப் பற்றியும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இந்த விவகாரங்களில் நீதிபதிகள், அதிகாரவர்க்கத்தின் அபிலாஷைகளை மனதில் வைத்துக் கொண்டு, மேலே சொன்னவற்றில் சாதாரண அறிவுகூட இல்லாதவர்களைப் போல் நடந்து கொள்வதும் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
அதிகாரத்தின் ஆசைகளை நிறைவேற்றாமல், நீதியின் பக்கம் நிலைத்து நிற்கும் நீதிபதிகளை அதிரடியாக இடமாற்றம் செய்வது.
கஷ்மீர் மக்களை கண்ணை மூடிக்கொண்டு கைது செய்து, அவர்கள் மீது “ஊபா” UAPA-ஐ பாய்ச்சியது, அந்த மக்களையும், மக்கள் தலைவர்களையும், கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அடைத்து வைப்பது, அது குறித்த வந்த மனுக்களையும் ஊதாசீனம் செய்வது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களை துவம்சம் பண்ணிய போது, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வது ஆகியவை சில மனசாட்சியுள்ள வழக்கறிஞர்களை வழக்கறிஞர் தொழில் மீதே விரக்திக் கொள்ளச் செய்வது. இவர்கள், மனித உரிமைகளுக்காக வாதாடி, வழக்காடி வந்தவர்கள்.
கஷ்மீர் மக்கள் விவகாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆள்கொணர் மனுக்கள் கையாளப்பட்ட விதம், நமது அரசியல் சாசனத்தின் முக்கியமான பிரிவுகளை கொலை செய்துவிட்டது. உச்ச நீதிமன்றம் எனலாம். அதேபோல் அரசியல் கட்சிகள் அரசியல் கடன் பத்திரங்களைக் கொடுத்து பணம் வாங்கலாம் என்ற மோடி அரசின் விதிகள், விசித்திரமானவை. பெரிய, பெரிய கம்பெனிகளிடமிருந்து பணங்களைப் பிடுங்கிட இந்தக் கடன் பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இப்படிப் பிடுங்கப்பட்ட பணங்களைப் பற்றிய எந்த விவரத்தையும் வெளியே சொல்லிட வேண்டாம். யாரிடமும் கணக்குக் காட்டிட வேண்டாம் என்ற விதிகள் முறையற்றவை என நீதிமன்றம் வந்தபோது உச்ச நீதிமன்றம் அதனை கண்டு கொள்ளாமல் மறுத்தது. காரணம் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தான் அதிகமான நிதியைத் திரட்டி இருந்தது. இந்தக் கடன் பத்திரங்கள் வழி!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒரு பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அந்தப் பெண் ஊழியர் புகார் செய்தார். அதனை அதே உச்ச நீதிமன்ற நீதிபதியே விசாரிப்பேன். தீர்ப்பு வழங்குவேன் என அடம்பிடித்தார். இந்தக் கேடுகெட்ட நிலையை என்னவென்பது.
தரத்தில் தாழ்ச்சியும், வீழ்ச்சியும் என்பது நமது நீதித்துறைக்கே பொருத்தமான சொல்லாட்சியாக மாறிவிட்டது. உச்ச நீதிமன்றம் எவ்வழியில் நடந்து கொள்கின்றதோ அவ்வழியே உயர் நீதிமன்றங்களும் நடந்து கொள்கின்றன. உச்ச நீதிமன்றம் வீழும்போது உயர் நீதி மன்றங்களும் வீழுகின்றன.
உண்மையைச் சொன்னால் பல உயர் நீதிமன்றங்கள், அதிகாரவர்க்கம் அநியாயமான சட்டங்களும், அவற்றைச் செயல்படுத்தும் திட்டங்களோடும், வந்தபோது, அவற்றை எதிர்த்து நீதி பக்கம் நின்றிருக்கின்றன. நாட்டில் ஓரளவுக்காவது நீதி நிலைக்க, இந்த உயர் நீதிமன்றங்கள் செய்த சேவையைக் கூட உச்ச நீதிமன்றம் செய்திடவில்லை.
ஒருவாதத்திற்காக “CAA” என்ற குடியுரிமைத் திருத்தச் சட்டமும், UAPA என்ற சட்டங்களுக்கும் புறம்பான செயல்களின் தடுப்புச் சட்டம், என்ன அரசியல் விவகாரம் என வைத்துக்கொள்வோம். கோவிட் – 19 காலத்தில் நடந்தவை எல்லாம், அடிப்படை உரிமைகள், அடிப்படை வாழ்வாதாரம், அடித்தட்டு மக்களின் உயிர் இவற்றோடு சம்மந்தப்பட்டவை. ஏராளமாக குடிமக்கள் – ஏழைபாழைகள் – வாழ்வா – சாவா என வினாடிகளைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த காலம்.
எமது கணிப்பில் CAA, UAPAயும் அரசியல் விவகாரமல்ல. அவை ஒரு சமுதாயத்தை பூண்டோடு ஒழிக்கத் திட்டங்கள்.
அதேபோல் புலம் பெயர்ந்து வாழ்க்கையைகத் தேடிவந்த மக்களின் வாடிய வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டப் பிரச்சனை. இவையெல்லாம் அரசியல் பிரச்சனைகள் அல்ல, அடிப்படை உரிமையோடு சம்மந்தப்பட்ட பிரச்சனை. அதாவது இவை ஏனைய எல்லா பிரச்சனைகளை விடவும், நெருக்கடிகளை விடவும், அவசரமானவை. நெருக்கடியானவை.
இந்த நெருக்கடிகளிலெல்லாம் உச்ச நீதிமன்றம், அந்தப் பக்கமே திரும்பிப் பார்த்திட வில்லை.
கோவிட் – 19 என்பது ஒரு பேரிடர். அது எல்லோரையும் பாதித்தது. ஏழைகளைப் பொறுத்தவரை மரணிப்பதைத் தவிர வேறு வழிகள் எதுவுமில்லை; என்ற நிலை.
குறிப்பாக வறுமைக் கோட்டுக்கீழே வாழ்ந்தவர்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள் பெண்கள், தலீத்கள், ஆதிவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் Transgender – திருநங்கையர்கள். இவர்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தாம் மக்கள் தொகையில் 70% சதவிகிதத்தினர். இந்த மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கும்போது உச்ச நீதிமன்றத்தால் எதுவும் செய்திட இயலவில்லை என்றால், இந்த உச்ச நீதிமன்றம் இருந்தென்ன? இறந்தென்ன?
உச்ச நீதிமன்றத்திற்கு சில வரம்புகள் இருக்கலாம். ஆனால், பட்டினியால் செத்த சுண்ணாம்பான இந்த மக்களின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகளை ஏறெடுத்தும் பார்த்திட மறுப்பது, எந்த விதத்தில் நியாயமானது.
உண்மையைச் சொன்னால், உச்ச நீதிமன்றம் – நீதித்துறை அதிகார வர்க்கத்தின் முன் முற்றாக சரணடைந்துவிட்டது. இது வெறும் நீதிதுறையின் தோல்வி மட்டுமல்ல, நீதிபதிகளின் தனிப்பட்ட தோல்வியும் கூட.
உச்ச நீதிமன்றம் மனது வைத்தால்
கொரோனா பெருந்தொற்று எதிர்பார்க்காத ஒன்றுதான். உச்ச நீதிமன்றம் தொடக்க காலத்தில், இந்த விவகாரத்தில் சற்று தயக்கம் காட்டியது நியாயப்படுத்தலாம். இதுக்கூட சரியில்லை.
இங்கேயும், உச்ச நீதிமன்றத்துக்கு எதுவும் தெரியாது என சொல்லிவிடுவதற்கு எதுவும் இல்லை. காரணம், மார்ச் 22 2020ல், மொத்த ஊரடங்குக்கு முன்னால், மார்ச்,16ஆம் நாள் (2020) உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து ஓர் நடவடிக்கையை எடுத்தது, அது, சிறையில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பிற்காக பிணையில் விடவேண்டியவர்களே விடலாம். சிறையில் கைதிகள் அடர்த்தியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதுகுறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்றும், எல்லா மாநில நீதி மன்றங்களுக்கும் ஆணையிட்டது.
மார்ச் மாதம் 23ம் நாள் (2020) அன்று இன்னொரு ஆணையைப் பிறப்பித்தது. இது எல்லா மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இன்னொரு ஆணையைப் பிறப்பித்தது.
அதில், விசாரணை – கைதிகளையும், தண்ணனைக் கைதிகளையும் விடுதலை செய்ய உயர் அதிகாரம் கொண்ட ஓர் குழுவை High Powered Committee. அமைத்து ஆலோசனைப் பெற வேண்டும். அதன்படி விடுதலை செய்திட வேண்டும் என்றும் கூறியது.
இந்த உயர் அதிகாரம் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைக் கைதிகளும், சிலபல தண்டனைக் கைதிகளும், விடுதலை செய்யப்பட்டனர். இதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உடனேயே செய்தன. காரணம் உச்ச நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் அழுத்தங்கள் வரும் என்ற அச்சத்தால். பலநூறு கைதிகள் விடுதலையெடந்தார்கள்.
யார், யாரை விடுதலை செய்தார்கள். அதில் நடந்த பாரபட்சங்கள் என்னென்ன என்பதில் நமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனால், ஒரு நீதிமன்றம் – உச்ச நீதிமன்றம் – மனது முன்வைத்தால் என்ன செய்யலாம் என்பதற்கான உன்னதமான எடுத்துக்காட்டு இது.
மீண்டும் ஏப்ரல் 13, ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதில் அசாம் தடுப்புக் காவல் முகாம்களிலிருப்பவர்களை உடனேயே விடுதலை செய்திட வேண்டும். குறிப்பாக மூன்றான்டுகள் தடுப்புக் காவல் முகாம்களில் இருந்தவர்கள் உடனேயே விடுதலை செய்யப்பட வேண்டும். அதேபோல் இரண்டாண்டுகள் தடுப்புக்காவல் முகாம்களில் இருந்தவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும், எனவும் உத்தரவிட்டது.
இத்தோடு நில்லாமல், இன்னொருபடி மேலே போய், தடுப்புக்காவல் முகாம்களிலிருந்து விடுபட இருந்த பிணை தொகையை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் 5000 ஐந்தாயிரமாக குறைந்தது.
இவையெல்லாம் பராட்டத்தக்கச் செயல்கள்.
மத்திய அரசு எதிர்த்தபோதும் உச்ச நீதிமன்றம் இவற்றைச் செய்தது பாராட்டத்தக்கது.
தோல்விகள்
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் பொறுப்புணர்வு தொடரவில்லை. நாட்கள் நகர நகர கோவிட் – 19 என்ற கொரனோ பெருந்தொற்றின் கோரப்பிடியில் அடித்தட்டு மக்கள் அகப்பட்டு, நொந்தார்கள். தெரிந்தார்கள். செத்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் தன் கடமையில் தவறிக் கொண்டே இருந்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகள், குழந்தைகளை வயிற்றிலே சுமந்த கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள் இவர்களெல்லாம் ஆயிரம் மைல்களை நடந்தே, நடந்துசென்று பலர் மடிந்தார்கள். இவர்கள் குறித்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வந்தபோது, உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களைக் கண்டுகொள்ளவில்லை. (மோடி அரசுக்கு அஞ்சி) இது வெறும் கால தாமதமான நீதி அல்ல, நிச்சயமாக இது உச்ச நீதிமன்றம் முற்றத்தைத் தன் பொறுப்பைத் தட்டிக் கழீத்த ஒன்று.
கைதிகள் விவகாரத்தை சுவோ மோஹோ (SUO MOHO) வாக, தானாக முன் வந்து, எந்த மனுவுமில்லாம், உச்ச நீதிமன்றம், கையிலெடுக்க முடியும் என்றால், ஏன் நடைபாதைகளில் நடந்து கொண்டிருந்த விவகாரத்தை தானே முன்வந்து எடுக்கக்கூடாது.
கைதிகள் விவகாரத்தைக் கையிலே எடுத்தபோது, லாக்டவுன் (Lock Down) என்ற – ஊரடங்குப் பிறப்பிக்கப்படவில்லை என்பதை நாம் கருத்திலே கொள்ள வேண்டும். ஆனால், பட்டினிப் பட்டாளமாக அடித்தட்டு மக்கள் புலம் பெயர்ந்து வயிறு பிழைக்க வந்தவர்கள்,
கர்ப்பிணிப் பெண்கள், குழுந்தைகள் விவகாரத்தை ஊரடங்கின் உச்ச கட்டத்தில் சுவோ மோஹா – வாக தானாக முன் வந்து எடுத்திருக்க வேண்டும், பொறுப்புள்ள நீதிமன்றம்.
ஆனால், என்ன நடந்தது?
உச்ச நீதிமன்றத்தில் அடுக்கடுக்காக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், அது கண்டு கொள்ளவில்லை. இதைவிட மனிதாபிமான மற்றதொரு செயல் அவனியில் இருக்கவியலாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
- மிகிர்தேசாய் Senior Council In Bombay High Court.
- தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது MA
வைகறை வெளிச்சம் ஆசிரியர்
SOURCE : வைகறை வெளிச்சம் | ஜனவரி 2021