“பொலிவியாவின் ஆண்டஸிலிருந்து(Andes) நாங்கள் பலஸ்தீனத்திற்கு அனைத்து விதமான ஆதரவையும் மரியாதையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துகிறோம்.
சர்வதேச சமூகம் கண்ணியமாகவும், தைரியமாகவும் போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பலஸ்தீனம் சுதந்திரமாகவே நிற்கும் எப்போதும் சுதந்திரமாகவே இருக்கும். எந்த சக்தியாலும் பலஸ்தீன மக்களின் ஒளியையும் விருப்பத்தையும் அணைக்க முடியாது.
இந்தப் போராட்டத்தில் அவர்கள் தங்களது நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள் அமைதியையும் சுதந்திரத்தையும் வெற்றி கொள்வார்கள். பாலஸ்தீன மக்கள் தங்களது அடையாளம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் நிலத்திற்காக நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நவீன காலத்தில் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் குண்டு வீச்சுகள் மற்றும் போர் ஆகியவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் அதே நேரத்தில் குடிமக்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் மீது சியோனிச ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்திய குற்றங்களை மறக்க முடியாது அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
அதுவே உலகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். உலக மக்கள் அனைவரும் பாலஸ்தீன மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
பாலஸ்தீனம் சுதந்திரம் ஆகட்டும்..✌️””
–டேவிட் சோக்ஹுவாங்கா
துணை ஜனாதிபதி,
பொலிவியா