ராதிகா வெமுலா, தலித் உரிமைகள் ஆர்வலர் மற்றும் தலித் ஆராய்ச்சி மாணவர் மற்றும் தன்னுடைய தற்கொலையின் மூலம் 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட ரோஹித் வெமுலாவின் தாய் ஆவார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்ரா கலந்து கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, ராதிகா வெமுலா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் அவருடைய தேசம் தழுவிய பேரணி தெலுங்கானா தலைநகரத்திற்குள் நுழையும் போது இணைந்துள்ளார்.
ராதிகா விமுலா தன்னுடைய டுவிட்டர் பதிவில் “@பாரத் ஜோடோ யாத்ராவிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், மற்றும் ராகுல் காந்தியுடன் அவரது @இந்திய தேசிய காங்கிரசை பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இன் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குவதை தடுப்பதற்காகவும், ரோஹித் மெமோலாவிற்கு நீதி கிடைப்பதற்காகாவும், ரோஹித் வெமுலா சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தலித்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கும், உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களை சேர்ப்பதற்கும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்காகவும் வேண்டி அவருடன் இணைந்து நடந்தேன்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தியும் ராதிகா விமுலாவுடனான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
“ரோஹித் வெமுலா எப்பொழுதுமே என்னுடைய சமூக பாகுபாடுகள் மற்றும் அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக திகழ்வார்” என்றும் மேலும் “இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ரோஹித் வெமுலாவின் தாயாரை சந்தித்த பிறகு என்னுடைய வலிமை மற்றும் தைரியத்திற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது” என்று ஹிந்திலான தனது பதிவை ட்வீட் செய்துள்ளார்.
ரோஹித் வெமுலா, இவர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார். இவர் கடந்த 17 ஜனவரி 2016 அன்று தற்கொலை செய்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். தன்னுடைய தற்கொலை குறிப்பில் பல்கலைக்கழகத்தின் மூலம் தனக்கு சாதி அடிப்படையிலான பாகுபாடு சமூக புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தல் வழங்கப்பட்டாதாக குற்றம் சாட்டியிருந்தார். இவரும் இவருடனான மற்ற நான்கு தலித் ஆராய்ச்சி மாணவர்களும் அவர்களுக்கு எதிராக இந்துத்துவ வலதுசாரி போராட்ட குழுவான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கின் மாணவ அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் அளித்த புகாரின் பெயரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழில் – ஹபீப் ரஹ்மான