பதினெட்டு வயது A.H. அல்மாஸ் மற்றும் அவரது இரண்டு தோழிகளும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டப் போது வகுப்பாசிரியர் அவர்களை உடனடியாக வகுப்பிலிருந்து வெளியேறுமாறு திட்டியிருக்கிறார்.
ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காகதான் அவர்கள் வகுப்பில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
“நாங்கள் வகுப்பின் கதவருகில் வந்த போது, ஹிஜாபோடு தாங்கள் உள்ளே நுழைய முடியாதென்றும், எங்களை ஹிஜாபை கலையுமாறும் ” சொன்னதாக அல்மாஸ் நம்மோடு பகிர்ந்துக்கொண்டார்.
அப்போதிருந்து 6பேர் அடங்கிய முஸ்லீம் பெண்கள் கர்நாடக உடுப்பியில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் வகுப்புக்கு வெளியே உட்காருமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு கல்லூரி தரப்பிலிருந்து ஹிஜாபானது சீருடையின் ஒரு அங்கமாக இல்லாத போது மாணவிகள் கல்லூரியின் விதியை மீறியுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் அப்பெண்கள் நம்மிடம் கூறும் போது, ஹிஜாப் எங்கள் நம்பிக்கையின் ஒரு பகுதி, ஒரு அங்கம் அதை பின்பற்றுவதென்பது இந்திய சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட எங்கள் உரிமை என்று கூறினர். கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக கூறப்பட்டாலும் மாணவிகள் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்றாலும் கூட டிசம்பர் 31இல் இருந்து வருகை பதிவில் அப்சென்ட் போடப்படுகிறார்கள்.
ஆலியா ஆஸாதி இதுகுறித்து அல்ஜசீராவிற்கு கூறும் போது “நாங்கள் ஒருபோதும் இதிலிருந்து அசைந்து கொடுக்க போவதில்லை, அசைந்து கொடுப்பதென்பது சாத்தியமே இல்லை” என கூறினார்.
கல்லூரி உடையுடன் ஹிஜாபும் அணிந்த நிலையில், மாணவிகள் வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக ஆனது.
இந்த புகைப்படத்தால் தான் எங்கள் பிரச்சனைகள் ஊடகத்தில் கவனம் பெற்றதாக ஆஸாதி கூறினார்.
இந்த போராட்டமானது கல்லூரி நிர்வாகத்தை கடுமையாக கொந்தளிக்கச் செய்துள்ளது. எனவே நாங்களாகவே வகுப்புகளை தவறவிட்டுவிட்டு வீட்டில் தங்கிக்கொண்டதாக ஒத்துக்கொள்ளும் படி கடிதம் ஒன்றை எழுதும்படி தங்களை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவிகள் கூறுகின்றனர்.
நாங்கள் எழுத மறுத்த போது ஆசிரியர்களும், கல்லூரி முதல்வரும் எங்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடுவோம் என மிரட்டியதாக மற்றொரு மாணவி முஸ்கன் சைனப் அல்ஜஸீராவிடம் தெரிவித்தார்.
தாங்கள் கட்டாயப்படுத்தபட்டு வகுப்புக்கு வெளியே உட்காரவைக்கப்பட்டதை முழு உலகமும் இப்போது பார்ப்பதின் மூலம் கல்லூரியின் பொய்யான கூற்றுகள் பொய்த்து போயிருப்பதை எண்ணி தாங்கள் மகிழ்ச்சியடைவதாக சைனப் கூறினார்.
இருப்பினும் மாணவிகள் அவர்களின் எதிர்ப்பு போராட்டத்திற்காக அவமானங்களையும், பாகுபாடுகளையும் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாள் முழுக்க வகுப்பறைக்கு வெளியே இருப்பதொன்றும் மகிழ்ச்சியான காரியமல்ல, எங்கள் ஆசிரியர்களும் சக மாணவிகளும் எங்களை கேலி செய்வார்கள். ஹிஜாபை கழட்டுவதில் உங்களுக்கு என்ன சிக்கலிருக்கி்றதென்றும், நீங்கள் ஏன் பள்ளி விதிகளை பின்பற்றக்கூடாது எனவும் அவர்கள் எங்களை கேள்வி கேட்பார்கள், மேலும் இதுபோன்ற மனரீதியான சித்ரவதைகளால் என் தோழி ஒருத்தி நோயாளியாகிவிட்டால் என்றும் அல்மாஸ் நம்மிடம் கூறினார்.
இறுதியாண்டு தேர்வை எழுத தேவைப்படும் வருகை பதிவு புள்ளிகளை தவறவிட்டுவிடுவோமோ என தாங்கள் அச்சப்படுவதாக அம்மாணவிகள் நம்மிடம் கூறினர்.
ஹிஜாப் என்பது சீருடையின் ஒரு பகுதியாக இல்லாத நிலையில் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிவதை தங்களால் அனுமதிக்க முடியாது எனவும், கல்லூரி நிர்வாகம் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டலை தான் கடைபிடிப்பதாகவும் கல்லூரி முதல்வர் ருத்ரா கவ்டே கூறினார்.
இன்னும் இதுபோன்ற பிரச்சனைகள் கல்லூரியில் எழுவது இதுதான் முதல்முறை என்றும் ருத்ரா கூறினார், இருப்பினும் கல்லூரியின் பழைய மாணவிகள் இதற்குமுன்னும் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.
“ஒருமுறை ஆசிரியர் ஹிஜாப் அணிந்த மாணவியை வகுப்பின் நடுவில் தரையில் உட்காரவைத்து ஹிஜாபை கழற்றியெறிந்தார் என்றும் ஹிஜாப் அணிவதை தேர்ந்தெடுத்ததற்காக இது போன்ற பல அவமானங்களை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும,் ஆனால் அந்த நேரத்திலெல்லாம் கூட அவர்கள் எங்களை வகுப்பறைக்குள் உட்கார அனுமதித்தார்கள் என்றும் கர்நாடக மணிப்பால் பழ்கலையில் படிக்கும் அதியா அல்ஜஷீராவிற்கு கூறினார்.
ஹிஜாபுக்கான இத்தடையானது இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் கிளர்ச்சியை, சீற்றத்தை உருவாக்கி இருக்கிறது. உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் முஸ்லீம் சிறுபான்மையினருக்கெதிரான கல்லூரி நிர்வாகத்தின் இந்த இரட்டை நிலையை குற்றம்சாட்டியுள்ளனர்.
நாங்கள் உறுதியாக அம்மாணவிகளோடு நிற்கிறோம், முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப் அணிவதிலிருந்து தடுக்கும் நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும், இன்னும் மாணவிகள் தங்கள் ஹிஜாபுடனும், தங்கள் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தோடும் வகுப்புக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என தாங்கள் வற்புறுத்துவதாக சமூக ஆர்வலர் அப்ரீன் பாத்திமா,(Fraternity movement of India )ஜஸீராவிடம் கூறினார், இன்னும் இது வெளிப்படையான இஸ்லாமிய வெறுப்பென்றும், தீண்டாமை என்றும் அவர் கூறினார்.
கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை துன்புறுத்துவதற்கெதிராக குற்றவிசாரணை செய்யபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் வக்கீல் சங்கம் மாநில அரசிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.
அதில் “முஸ்லீம் மாணவிகளுக்கு கல்வி மறுப்பதும், தங்கள் நம்பிக்கை அல்லது கல்வி ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு அவர்களை வற்புறுத்துவதென்பதும் மனித உரிமை பிரச்சனையாகும், அதை கண்டிப்பாக அவ்வாறு தான் கையாள வேண்டும”் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் பரவலாக செயல்பட்டுவரும் முஸ்லீம் மாணவ அமைப்பான CFI, ஹிஜாப் விஷயத்தில் கல்லூரியின் விதிகளை ரத்து செய்து மாணவிகளை ஹிஜாபோடு வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அந்த பெண்கள் அவர்களின் அடிப்படை உரிமைகளை கோருகிறார்கள் இந்த போராட்டத்தில் நாங்கள் அவர்களோடு நிற்கிறோம் என்பதாக அசீல் அக்ரம் கூறினார்
இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டி மாணவ அமைப்பினர் கல்லூரி மற்றும் பல்கலை நிர்வாகத்தை சந்தித்தோம், ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கபடவில்லை என அக்ரம் கூறினார். மாணவிகளின் உரிமைகளை மறுக்குமாறு கல்லூரி மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் பிரதமரின் பாஜக கட்சியால் ஆளப்படுகிறது.
பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரகுபதி பட் உடுப்பியில் ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டினார், அந்த சந்திப்பின் போது மாணவிகளின் பெற்றோரிடம் மாணவிகளின் மத நம்பிக்கையை கடந்து கல்லூரி தனது சீருடை விதிகளை தொடரும் என தெரிவித்தார்.
உடுப்பியில் இந்த ஹிஜாப் சர்ச்சை எழுந்த பின்பு, மாநிலத்தின் குறைந்தது இருவேறு கல்லூரிகளில் வலதுசாரி abvp உறுப்பினர்களை உள்ளடக்கிய மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தை நடத்தி ஹிஜாபுக்கு எதிரான தடையை கோரினர்.
Abvp என்பது இந்தியாவில் இந்து ராஷ்டிரம் உருவாக்கும் கனவோடு இந்தியாவெங்கும் பல மில்லியன் உறுப்பினர்களை கொண்டு இயங்கும் பிஜேபியின் சித்தாந்த வழிகாட்டியான ஆர் எஸ் எஸ் -ஸோடு இணைக்கப்பட்ட மாணவ அமைப்பாகும்.
சில வருடங்களாக கர்நாடக மாநிலத்தி்ல் ஹிந்து தேசியவாதமும், குறிப்பாக முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர்கள் குறிவைக்கபடுவதும் அதிகரித்து வருவதை காண முடிகின்றது.
கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டி
கடந்த மாதம் கர்நாடக சட்டமன்றம் மதமாற்றத்தை தடுக்கும் சட்டத்தை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றியது, இக்குற்றசாட்டு கிறிஸ்துவ மதத்தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
உடுப்பு கல்லூரி விவகாரத்தை பொறுத்த வரை மாணவிகள் அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறினர்
“நாங்கள் சிறிதளவும் அசைந்து கொடுக்க போவதில்லை, அதற்கு வாய்ப்பே இல்லை ” என்று மாணவி ஆஸாதி கூறியதை போல் மாணவிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது
(அல்- ஜெஸீரா இனையதளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு )
தமிழில் – காஜா