எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது
அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது
கண்ணால்பார்த்தவைஇதயத்தில்
நிலைக்கவில்லை
பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை
புரட்சி சுமக்கும் காகிதங்களும் காழ்புணர்ச்சி கொள்கிறது
காவலரின் கைநழுவிய கலிகளும் சுதந்திரத்தை மறுக்கிறது
இரத்த கண்ணீரால் அடக்குமுறையை அழித்த சமூகம்
விசுவாசம் மறந்தவர்களால் அடக்கியே அழிக்கப் படுகிறது
கர்ப்பிணிகள் சடலம் சுமந்த தருணம் போதும்
ஜனநாயகத்தின் யதார்த்தம் சகதியில் என்றும் வீழாது
வாழ்வைத் துறந்தவனிடம் உயிரைத் தவிர உறவேதுமில்லை
உரிமையற்ற சடலத்தின் காயங்களும் தேசத்தை நினைவு கூறும்
மண்ணின்தாகத்தை மழைநீர் தணிப்பதுபோல்
உயிர்கொண்ட உறவுகள் உரிமையை கேட்கிறது
அநீதத் தாமரை சாக்கடையில் மலர்ந்து
நீதவானிடம் சுவாசிக்க செய்தாலும் திரவிடத் திடலில் மணமாகாது
பேதமற்று உறவாடிய தாயகத்தின் வாரிசுகள் நாம்
எத்துனை அதர்மம் தழைத்தாலும் தாயகம் போராடும்.
முகம்மது பைஜ்
அஸ்-ஸலாம் இஸ்லாமிய கல்லூரி மாணவன்