சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வழக்கம்போல ஒரு சாதாரண விளையாட்டு எனும், நிலையைத் தாண்டி இரு நாடுகளுக்கான போர் என்பதை போன்ற பிம்பத்தை மக்கள் விரோத சக்திகள் ஊதிப் பெரிதாக்கி காட்டின .
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது.
வெற்றியும் தோல்வியும் சகஜம் . அதுவும் இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத தனியார் நிறுவனமான கிரிக்கெட் வாரியத்தின் தோல்வி என்பது இந்தியாவின் தோல்வி அல்ல.
வென்றாலும் தோற்றாலும் லாபம் சம்பாதித்தாலும் சம்பாதித்தாலும் அது இந்திய அரசுக்கு நேரடியாக எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை .
இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பான்மையாக உருவாக்குவதற்கு பாசிஸ சக்திகள் திட்டம் போட்டு வேலை செய்தனர்.
அணியில் பல கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்ற போது, முஹம்மது சமியினுடைய தேசப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அவற்றையும் அப்படியே நம்பிக்கை உண்டு பலரும் பகிரங்கமாக வெறுப்பை பிரச்சாரம் செய்தார்கள்
தனிமனிதன் என்கின்ற அடிப்படையில் ஏதோ ஒரு வீரரையோ , ஏதோ ஒரு அணியையோ, அவரது விளையாட்டு திறனுக்காக வேண்டி பாராட்டுகின்ற உரிமை ஒவ்வொரு தனிப்பட்ட நபருடைய உரிமையாகும் . ஆனால் பாகிஸ்தான் வெற்றியை பாராட்டி, ஊக்கப்படுத்திய நபர்களை தேசவிரோதிகள் என்பதைப்போல பிரச்சாரம் செய்து அவர்களை கைது செய்தும் பணி நீக்கம் செய்தும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றது அரசு.
இந்திய நாட்டுக்கு எதிரான சக்திகளை ஒருபோதும் நேசிக்கவும் பாராட்டவோ ஆதரிக்கவோ கூடாது என்கின்ற நிலைபாடு உண்மையாக இருப்பின், இந்தியாவினுடைய பல்லாயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்பை அபகரித்துக் கொண்டு ஆட்டம் போடுகின்ற சீனாவை நேசிப்பது அதனோடு உடன்பாடு வைத்துக் கொள்வதோ சரியாகுமா? நம்மை ஆளுகின்ற மத்திய அரசு பல்லாயிரம் கிலோமீட்டர் பகுதிகளை சீனாவினுடைய ராணுவத்திடம் இழந்திருக்கிறது .
ஆனால் பல்லாயிரம் கோடி செலவில் இங்கே சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கித் தரும் பொறுப்பை சீனாவுக்கு தான் கொடுத்தது ஒன்றிய அரசு .சீனா விஷயத்தில் பம்மிக் கொண்டு பசப்பு காட்டுகிறது ஒன்றிய அரசு. இந்த அடிப்படையில் பார்த்தால் இவர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது போலியானது. ஏதோ ஒன்றை காரணம் சொல்லி மக்களை பிரித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது பாசிச சக்திகளின் எண்ணம்.
முஸ்லிம்களின் அடையாளம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் இழிவு படுத்த வேண்டும் என்பது பாசிச சக்திகளின் விருப்பம். இதை கிரிக்கெட் விஷயத்திலும் அவர்கள் பயன்படுத்த தவறுவது இல்லை. இவைகளில் உண்மையும் இல்லை. நீதியும் இல்லை. என்பதை இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புரிந்து கொள்வது இல்லை. ஆகவே தேசப்பற்ற்றை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களின் தலையில் சுமையாய் விழுந்து கொண்டே இருக்கிறது.
- Abbas Al Azadi எழுத்தாளர்