பெஹ்லுகான் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு அக்பர்கான் கொல்லப்பட்டுள்ளார்..
எந்த காரணத்திற்காக பெஹ்லுகான் கொல்லப்பட்டாரோ அதே காரணத்திற்காகத்தான் அக்பர்கானும் கொல்லப்பட்டுள்ளார்..
இராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் மாடுகளை சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பிய அக்பர்கானை பசு பயங்கரவாதிகள் அடித்து காயப்படுத்தியுள்ளனர். ஆனால் கொலை செய்தது காவல்துறையினர்..
அதிகாலை ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பொறுமையாக காலை நான்கு மணிக்கு காவல்நிலையத்தில் இருந்து சரியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அப்போது அக்பர்கான் இறந்துவிட்டிருந்தார்.
இடைப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அக்பர்கானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை அருகில் இருந்த கொட்டகைக்குள் பாதுகாப்பாக அடைத்து வைத்துவிட்டு, வழியில் வாகனத்தை நிறுத்தி களைப்பு தீர டீ சாப்பிட்டுவிட்டு பிறகு அக்பர்கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அக்பர்கானை காவலர்கள் வாகனத்திற்குள் வைத்து தாக்கியதாக நேரில் கண்ட பெண் என்டிடிவி நிருபரிடம் தெரிவித்துள்ளார்.
அக்பர்கானின் கொலையில் பசு பயங்கரவாதிகளுடன் காப்பாற்றச் சென்ற காவல்துறைக்கும் தொடர்பிருக்கிறது தெளிவாக தெரிகிறது.
ஆனாலும் அக்பர்கான் மாடுகளை வாங்கி வந்தாரா அல்லது திருடினாரா என்றும், மாட்டை அவர் பால் கறக்க வாங்கினாரா அல்லது இறைச்சிக்காக வாங்கினாரா என்றுதான் விசாரணை நடக்கும்..
அதாவது மாட்டிற்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு மனிதனின் மரணத்திற்கு எந்த விசாரணையும், நீதியும் கிடைக்காது.
அபுல் ஹசன்