என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு
கைதி ஆனான்; அவனது தாயோ
மன உளைச்சலில்
பைத்தியக்காரி ஆனாள்!
மனைவி இருந்தாள்
இறை அச்சத்தோடு பத்தினியாக…
வாரிசுகள் கிடந்தன
பசியும் பட்டினியுமாக…
ஊர் முழுக்க கை ஏந்தினாள்
பிச்சை எடுக்க அவளின்
வாரிசுகள் நல்ல முறையில்
தலையெடுக்க…
சிறைச் சாலையில் தொலைத்தான்
அவனது இளமையை
நாடு இழந்தது அவனது
நல்ல திறமையை…
சுற்றம் சூழ்ந்து ஏசியது
அவனை ‘பாவி’ என்று
நடுநிலையாளர் அறிவர்
இதற்கு காரணம் ‘காவி’ என்று!
குண்டு வெடித்த மறுகணமே
குற்றவாளி ஆனான்…
பத்தாண்டுகள் விசாரணை கழித்து
நிரபராதி ஆனான்…
நாங்கள் இஸ்லாத்தை ஏற்றது குற்றமா?
எங்களுக்கு தீவிரவாதி பட்டமா?
விழித்தெழு என் அருமை மனித இனமே
அநீதியை வென்றெடுப்போம்
இனி இந்த கணமே!
தலைவர்களே நம்மிடம் உள்ளது
நல்ல இளைஞர் படை!
அவர்களைச் செய்ய வேண்டும்
சட்ட வல்லுநர்களாய் அறுவடை!
கண்ணீருக்கு இனிமேல் நேரம் ஏது சகோதரியே!
துடைத்து விட்டு
களத்தில் இறங்குவோம் துணிவோடு!
அவ்வபோது குப்பையில் தீ வைத்ததாய் மகிழ்ச்சி கொள்கிறாய்!
சங்கிகளே நீ வைத்த தீ குப்பையில் அல்ல
காட்டில் என்று புரிந்து கொள்வாய்!
– பீர் முஹம்மது