15 ஆண்டு கால முற்றுகையின் விளைவாக காஸாவின் 80 சதவீத குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காசாவில் மொத்தம் 8 லட்சம் குழந்தைகள் இஸ்ரேலின் முடக்கத்திற்கு உட்பட்ட வாழ்க்கையை மட்டுமே அறிந்துள்ளனர். இது பெருமளவில் அவர்களின் மனநலத்தை பாதித்துள்ளது என, இந்த அறிக்கை கூறுகிறது.
காசாவில் உள்ள ஐந்தில் நான்கு குழந்தைகள் மன அழுத்தம், அச்சம் (பதட்டம்) மற்றும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ன (Save The Children) சேவ் தி சில்ரன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
“Trapped” “மாட்டிக்கொண்ட” என பெயரிடப்பட்ட இந்த அறிக்கை இதே நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கையானது காசாவில் உள்ள 488 குழந்தைகள், 168 பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை நேர்காணல் செய்து தயார் செய்யப்பட்டுள்ளது.
காசாவில் இந்த இஸ்ரேலின் முடக்கமானது 2007 இல் தான் தொடங்கப்பட்டது, இதனால் காசாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இதனால் குறிப்பாக காசாவின் இரண்டு மில்லியன் மக்களில் 47 சதவீதமாக இருக்கும் குழந்தைகளை இது பெரும் அளவில் பாதித்துள்ளது.
காசாவில் உள்ள குழந்தைகளின் மனநலம்,
488 குழந்தைகள் மற்றும் 160 பெற்றோர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து
குழந்தைகளின் உணர்வுகள்
பயம் – 84%
பதட்டம் – 80%
துயரம் – 78 %
சோகம் – 77%
குழந்தைகளினால் வெளிப்படுத்தப்படும் அசாதாரணமான நடத்தைகள்
தூக்கத்தில் சிறுநீர் கழித்தல் 79%
பேச்சுக்கோளாறு 59%
கவன சிதறல் 48%
பல குழந்தைகள் தாங்கள் சந்தித்த குண்டுவெடிப்பின் துயரங்களை தெளிவாக பகிர்ந்துள்ளனர். மேலும் அவர்களின் பள்ளிகள் எப்படி அழிக்கப்பட்டது மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதையும் தெளிவாக நினைவில் வைத்துள்ளனர்.
சாரா (15)
அவசர சிகிச்சை தேவைப்படும் இவளின் பெற்றோருக்கு காசாவிற்கு வெளியே சிகிச்சைக்கு செல்ல பயண அனுமதியை பெற முடியவில்லை
பஸ்ஸம் (8)
இஸ்ரேலால் போடப்பட்ட குண்டுகளில் விழுந்த வெடிக்காத குண்டினால் இவனின் கண்கள் மற்றும் கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
முமென் (10)
இஸ்ரேலின் செல் தாக்குதலால் ஒரு நபர் கிழிக்கப்பட்டதை நேரில் பார்த்ததின் விளைவினால் தினமும் கெட்ட கனவுகளினால் அவதிப்படுகின்றான்.
பேய் (12)
இவளை காயப்படுத்திய மற்றும் இவளின் வீட்டை அளித்த இஸ்ரேலின் தாக்குதலின் விளைவாக கவலை மற்றும் கெட்ட கனவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளாள்.
இந்த எட்டு லட்சம் குழந்தைகளுக்கு இஸ்ரேலின் இந்த முற்றுகை இல்லாத அமைதியான வாழ்க்கையையே பார்த்ததில்லை. மேலும் இந்த அறிக்கை இங்குள்ள குழந்தைகள் ஆறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருப்பதாக கூறுகிறது அதில் ஐந்து வன்முறை மீதமுள்ள ஒன்று கோவிட்-19 தொற்று என்று கூறுகிறது.
இந்த சேவ் தி சில்ட்ரனின் சமீபத்திய அறிக்கையானது குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் மனநலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இருந்து மேலும் பெருமளவில் மோசமடைந்துள்ளதாக கூறுகிறது. குழந்தைகளின் உணர்ச்சிகள் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் 55 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. மனரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அச்ச உணர்வில் இருக்கும் குழந்தைகள் 2018 ல் 50 சதவிகிதத்தில் இருந்து 80% ஆக உயர்ந்துள்ளது.
பதட்டம் 2018ல் 55 சதவீதத்திலிருந்து தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
சோகம் மற்றும் மன அழுத்தம் 2018 இல் 62 சதவீதத்திலிருந்து 77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
துயரம் 55 சதவீதத்தில் இருந்து 78% ஆக உயர்ந்துள்ளது.
காசாவில் உள்ள பாதிக்கு மேலான குழந்தைகள் தற்கொலை சிந்தனைகளில் இருப்பதாகவும் மேலும் ஐந்தில் மூன்று குழந்தைகள் தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வதாகவும் சேவ் தி சில்ட்ரன் கூறுகிறது. காசாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனுபவிக்கும் மனநல நெருக்கடிக்கு குறிப்பான பங்களிக்கும் காரணிகளாக சுகாதார பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுக்கள் இல்லாமல் மற்றும் இஸ்ரேலின் தொடர் முடக்கம் போன்றவை இருக்கின்றன.
இந்த அறிக்கையில் நேர்காணல் செய்யப்பட்ட ஆரோக்கிய பராமரிப்பாளர்களிடமிருந்து, கடந்த சில ஆண்டுகளாக காசாவில் உள்ள குழந்தைகள் 79 சதவீதம் பேர் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதாகவும் மேலும் அதிர்ச்சி மற்றும் துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளான பேச்சு மொழி மற்றும் தற்காலிக எதிர்வினை பிறழ்விற்கு உட்பட்ட தகவல் தொடர்பு சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகளை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 59 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சி கற்றல் மற்றும் சமூக தொடர்பு ஆகியவற்றில் உள்ள இந்த அறிகுறிகளின் விளைவுகள் உடனடியாக மற்றும் நீண்ட காலத்திற்கும் இருக்கும் என சேவ் தி சில்ட்ரன் எச்சரிக்கிறது.
சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியின் இயக்குனர் ஜேசன் லீ கூறுகிறார் “அவர்களின் பிரச்சனையின் கண்ணுக்குத் தெரியும் ஆதாரங்களான படுக்கையில் சிறுநீர் கழித்தல், உறக்கத்தில் பேசுதல் மற்றும் அவர்களின் அடிப்படை தேவைகளை முடிப்பது போன்றவற்றில் உள்ள திறன் குறைபாடு அதிர்ச்சி அளிக்கிறது. மற்றும் இது சர்வதேச சமூகத்தின் எழுச்சிக்கான குரலாக இது கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையின் போது குழந்தைகளின் பாதுகாவலர்கள் இதுதொடர்சியான முற்றிக்கையானது அவர்களின் குழந்தைகளே பார்த்துக் கொள்ளும் திறனை அளிக்கக்கூடும் என்று கணித்திருந்தனர். சேவ் தி சில்ரனின் சமீபத்திய அறிக்கை தற்போது பதில் அளித்தவர்களின் 96 சதவிகிதம் பேர் நிலையான சோகம் பதட்டம் மட்டும் உணர்ச்சிகள் ரீதியான துயரங்களை சந்திப்பதாக கூறியுள்ளனர்.
சேவ் தி சில்ட்ரன் இஸ்ரேலிய அரசாங்கம் உடனடியாக இந்த காசா மீதான முற்றுகையை எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவும் மேலும் அதோடு தற்போது நடந்து வரும் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
“இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை சமாளிக்க அனைத்து தரப்பையும் நாங்கள் அழைக்கின்றோம் பாதுகாப்பாக மற்றும் கண்ணியமாக வாழ தகுதியான அனைத்து குழந்தைகளையும் குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக. குழந்தைகளின் வாழ்வில் பெருமளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இப்போ ஒரு மற்றும் பொருளாதார பற்றாக்குறைக்கு உடனடி முடிவு வேண்டும். அத்துடன் இச் சூழ்நிலையை எதிர்க்க மற்றும் சமாளிக்க பெருமளவில் திறனற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சேவ் தி சில்ட்ரன் தெரிவித்துள்ளது
காசாவின் 15 ஆண்டுகால முற்றுக்கையின் கீழான வாழ்க்கை.
2007ம் ஆண்டு முதலே இஸ்ரேலினால் இப்பகுதி மக்கள் நிலம், நீர், காற்று மற்றும் கடல் என அனைத்துமே முடக்கப்பட்டு 20 லட்சம் மக்கள் திறந்த வெளி சிறையில் வைக்கப்பட்டுள்ளதைப் போன்று மாட்ட வைக்கப்பட்டுள்ளனர் மேலும் காசாவின் சமூகம் பொருளாதாரம் என எதுவுமே இஸ்ரேலினால் தீண்டப்படாமல் விடப்படவில்லை.
இங்குள்ள மொத்த மக்கள் தொகை 2.1 மில்லியன் ஆகும்.
பரப்பளவு 365 கிலோமீட்டர் ஸ்கொயர் ஆகும்.
இதுவே உலகில் குறைந்த இடத்தில் அதிக மக்கள் தொகை இருக்கும் பகுதியாகும்.
வேலை வாய்ப்பின்மையின் அளவு 45 சதவீதம் ஆகும்.
உலகிலேயே மிக அதிக வேலை வாய்ப்பின்மை இங்குதான் உள்ளது.
உணவு பற்றாக்குறை உள்ள குடும்பங்கள் 64%
இதனால் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இஸ்ரேல் காஜாவின் மீது நான்கு மிக பெரும் ராணுவ தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1. 2008 ல் 23 நாட்களும்
2. 2012ல் 8 நாட்களும்
3. 2014 இல் 50 நாட்களும்
4. 2021 ஆம் ஆண்டில் பதினோரு நாட்களும் நடத்தப்பட்டுள்ளது.
ஹாமாஸ் இயக்கம் காஜா பகுதியை 2007 இல் கைப்பற்றியதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த பகுதியின் தரை வான் மற்றும் கடல் போன்ற அனைத்தையும் முடக்கியுள்ளது.
இந்த முற்றக்கையில் காஸாவில் வசிக்கும் பல சீனியர்கள் பயணிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளும் அடங்கும். காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஆன எல்லைகள் எப்போதும் மூடப்பட்டே இருக்கிறது, மேலும் இங்கு எரிபொருள் மின்சார மற்றும் பிற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்றவை இங்கே வருவதற்கும் பல வகையான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்துள்ளது. மீனவர்களும் கடலில் குறிப்பிட்ட சில மைல்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஹபிபுர் ரஹ்மான்
(சகோதரன் ஆசிரியர்குழு)