உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்:
கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர்.ஒரு அமைதியான நிம்மதியான நிலைக்கு மீண்டும் திரும்பியது.
சியோனிசதிற்கு முன்பு
1887-88ம் ஆண்டில் பாலஸ்தீனம் ஒரு அமைதியான நிலையில் இருந்தது அப்போது அந்நாட்டில் 6,00,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தன அதில் 10சதவீதம் கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் முஸ்லிகளும் 25,000 யூதர்களும் இருந்தார்கள்.அவர்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டலும்,இனக்கமும்,அமைதியும் காணப்பட்டது.சியோனிஸத்தின் வருகைவரை பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான உறவுகள் நிலையான மற்றும் அமைதியானவையாக இருந்தன.
சியோனிஸம்
1880-ல் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் யூத விரோதமும்,ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடந்த படுகொலையின் விலைவாக அவர்கள் ஒரு மதக்குழு மட்டுமல்ல,ஒரு தனி தேசமாக நின்றால்தான் இதனை சரி செய்யமுடியும் என்று நினைத்தார்கள்.யூதர்கள் மற்ற நாடுகளுக்கு இனையாக நின்றால் மட்டுமே யூதர்களின் கேள்வி தீர்க்கப்பட முடியும்,தங்கள் தாய்நாட்டின் மூலம்தான் அதனை எதிர்க்கமுடியும் என்று நினைத்தார்கள்.
1897-ம் ஆண்டில் ‘தியோடர் ஹெர்ஸால்’ என்ற நபரால் நிருவப்பட்டதாக கருதப்படுகிறது. சியோனிஸம் என்பது யூத தேசியவாத இயக்கம்.இயக்கத்தின் மைய நோக்கம் புலம்பெயர் நாடுகளிலிருந்து யூதர்கள் திரும்புவதை எளிதாக்குதன் மூலம் பாலஸ்தீனத்தின் ஒரு யூத தேசிய வீடு மற்றும் கலாச்சார மையத்தை மீண்டும் ஸ்தாபிப்பதும்,அத்துடன் ஒரு யூத அரசை மீண்டும் ஸ்தாபிப்பதும் ஆகும்.பாலஸ்தீனம் யூதர்களின் பண்டைய தாயகமாக இருந்து.சியோனிஸம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் தோன்றியிருந்தாலும் இது பாலஸ்தீனையே மையமாக கொண்டுள்ளது. சியோனிஸத்தின் லட்சியம் 1948-ல் நிறைவேறியது. இஸ்ரேலுக்கு உதவுவதற்கு,இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவும்,துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு உதவவும்,இஸ்ரேலுக்கு யூத குடியேற்றதை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு
முதலாம் உலகப் போரின் முடிவை தொடர்ந்து ஓடோமன் பேரரசு வீழ்ச்சியடைந்தது.ஃபலஸ்தீன் பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது.அப்போது ஃபலஸ்தீனத்தில் ஒரு யூத அரசைக் கட்டியெழுப்ப எந்த வகையிலும் தூண்டவில்லை,19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு யூத தாயகத்தை உருவாக்கவதற்கான இயக்கமாக சியோனிசம் தோன்றியது.
ஆனால் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் பிரிட்டன் கட்டுப்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம், நவீன அடித்தளத்தை அமைப்பதற்கு லீக்-ஆஃப்-நேஷன் உதவியது. யூதர்களுக்கும் அரபுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் நீடித்தன.யூதர்களுக்கென தேசிய நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கியது.
1920-1940 வரை அண்டை நாடுகளிலிருந்தும் இன்னும் பிற நாடுகளிலிருந்தும் யூதர்களின் வருகை அதிகரித்தது.மக்களுக்கு இடையில் வன்முறை வெடித்தன.அதற்கிடையில் முறையான யூத நிறுவனங்கள் வடிவம் பெறத்தொடங்கின.மேலும் வளர்ந்து வரும் யூத மக்கள் அரபு சமுகத்துடன் பதட்டங்களை அதிகப்படுத்தின.
ஜெருசலத்தில் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் இடையே தொடங்கிய சண்டை ஃபலஸ்தீன் முழுவதும் பரவியது.ஹைபா மற்றும் ஜெருசலத்தில் ஏற்பட்ட மோதலில் ஃபலஸ்தீன் மக்களை காயப்படுத்தப் பட்டனர். 196பேர் இறந்ததாகவும், 305பேர் காயமடைந்ததாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. பலஸ்தீனத்திற்கான பிரிட்டீஷ் உயர் அதிகாரிகள் ஜெருசலமிற்கு விரைந்துவந்து அமைதிப்படுத்த முயன்றன.
ஃபலஸ்தீனத்தில் ஏற்பட்ட மோதல்கள் பிரிட்டிஷையும் குறிவைத்தது, இது இங்கிலாந்தின் ஆதரவை இலக்க காரணமானது. இரண்டாம் உலகப்போரில் சோர்ந்து போன பிரிட்டனில் ஆதரவு மேலும் வாடியது. 1946-ல் இங்கிலாந்து ஜெருசலமிற்கு சுதந்திரம் வழங்கியது.பிறகு ஐ.நா.சபை பாலஸ்தீனத்தை இரண்டாக பங்கு பிரித்தது. 33%விழுக்காடு யூதர்களுக்கு 55%விழுக்காடு நிலமும், 67%விழுக்காடு பாலஸ்தீனரகளுக்கு 45%விழுக்காடு நிலமும் வழங்கப்பட்டது. 6%விழுக்காடுகளை கையில் வைத்திருந்த யூதர்களுக்கு 55%விழுக்காடுகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் அடங்கவில்லை.
அரபு-இஸ்ரேல் போர்
1947-ல் யூதர்களுக்கும் அரபுகளுக்கும் இடையிலான சண்டை முதலாம் இஸ்ரேல்-அரபு போராக மாறியது அந்த போர் பாலஸ்தீனில் பெரும் அளவு சேதத்தை விளைவித்தது.உயிர்களும், உடமைகளும் பறிக்கப்பட்டது.இஸ்ரேலிய இரானுவம் ஆயுதமோ ஏவுகனையோ இல்லாத அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீது தாக்குதலை தொடங்கியது.
நக்பா தினம்
1948-ல் பிரிட்டீஸ் ஃபலஸ்தீனின் ஆட்சியை விட்டு வெளியேறியது. அத்துடன் இஸ்ரேஸ் ஆட்சிகட்டிலில் ஏறியது.அந்நேரத்தில் 7,26,000 பாலஸ்தீனர்கள் வெளியற்றப்பட்டார்கள்.பின்னர் 9,00,000 மாறியது.ஃபலஸ்தீனர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக உள்ளே நுழைந்தார்கள்
சொந்த நாட்டையும், வீட்டையும் விட்டு வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். மே15 1948 பாலஸ்தீனத்தை இஸ்ரேல் என்று அறிவித்தது.உயிர்கள், உடமைகள், உரிமைகள் பறிபோனது குண்டு வெடிப்புகளும், தூப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்றும் பாராமல் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினர்.ஒரு இனமே அழிக்கப்பட்டது.அந்நாளை (நக்பா தினம்)பேரழிவின் தினம் என்று சொல்லப்படுகிறது.
இஸ்ரேல்
பிறகு இஸ்ரேலின் ஆட்சி நடந்தது 78%விழுக்காடு யூதர்களும் 22%விழுக்காடு பாலஸ்தீனர்களும் இஸ்ரேலின் ஆட்சிக்கு கீழ் வாழ்ந்தார்கள். யூதர்களுக்கு முதல் தர குடியுரிமையும் பாலஸ்தீனர்களுக்கு இரண்டாம் தர குடியுரிமையும் வழங்கப்பட்டது.அவர்கள் இஸ்ரேலிய அரப் என்று அழைக்கப்பட்டார்கள்.
என்னவொரு அவல நிலை சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்தார்கள்.அதிகமான ஃபலஸ்தீனர்கள் காசாவிலும், மேற்கு கரையிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேலை ஆதரித்த நாடுகளிலேயே மிக முக்கியமான நாடு அமெரிக்காதான்.
அமெரிக்காவுடைய முழு ஆதரவும், ஒத்துழைப்பும், ஆயுதங்களும் வழங்கப்பட்டது.
அமெரிக்காவுடைய வெளிநாட்டு நிதியை அதிகம் பெற்றநாடு இஸ்ரேல்தான்.
ஃபலஸ்தீன் இஸ்ரேலாக மாற்றப்பட்டது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை முழுவதுமாக விழுங்கியது.பாலஸ்தீனத்தை கைப்பற்றியதோடு அவர்களின் வெற்றி முடிவு பெறவில்லை.உலகமெங்கும் யூதர்கள் கையில் வரவேண்டும் அதுதான் அவர்களுக்கு உண்மையான வெற்றி என தருதுகிறார்கள்.
-ச.முஹம்மத் நதீர்