தனிநபர் கருத்து பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட செயலிதான் வாட்ஸ் அப். இந்த செயலியின் மூலமாக பரப்பப்படும் செய்திகளை பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள் என கடந்த வியாழக்கிழமை ஆராய்ச்சி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியானது மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் செய்திகளை எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவதற்காக நடத்தப்பட்டது ஆகும். குறிப்பாக இந்த ஆய்வு Facebook, Google, whats App, youtube போன்ற சமூக ஊடகங்களை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
பிரேசில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
77 சதவீதம் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகள் என செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை செய்திகளை நம்புகிறார்கள். 41% மக்கள் பேஸ்புக் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 27% மக்கள் இன்ஸ்ட்டாகிராம் செயலியின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 15% மக்கள் டிக் டாக் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 25% மக்கள் டிவிட்டர் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 54% மக்கள் வாட்ஸ் அப் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 51% மக்கள் யூடியூப் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள்
செய்தி இணையதளங்களை விடவும் கூகுல், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற இணையதளம் மூலமாக வரும் செய்திகளை அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலில் ஆர்வம் உடைய மக்கள் யூடியூப் செயலின் மூலமாக வரும் செய்திகளை அதிகமாக நம்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த செயலைகளை மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் பொழுதுபோக்காக மட்டுமே உபயோகிப்பதாக கூறுகின்றார்கள்.
இந்தியாவில் 46 சதவீதம் பேர் தினம்தோறும் வாட்ஸ் அப் செய்திகளை பார்ப்பதாகவும் அதனை பின்தொடர்வதாகவும் கூறியுள்ளனர். பிரேசிலில் 58% மக்கள் செய்திகளை வாட்ஸப் மூலமாக வரும் செய்திகளை பின் தொடர்வதாக வாட்ஸ் அப் செய்திகளை பார்ப்பதாகவும் அதனை பின்தொடர்வதாகவும் கூறியுள்ளனர்.
செய்தி ஊடகங்களை விடவும் பொழுதுபோக்கு ஊடகங்களை மக்கள் நம்புவதற்காக காரணமாக கூறப்படுவது செய்தியாளர்கள் உண்மை செய்திகளை கூறாமல் திரித்து வெளியிடுகின்றனர் எனவேதான் சமூக ஊடகங்களை மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள், அவற்றை பின் தொடர்கிறார்கள் என ஆய்வு முடிவு கூறுகின்றது.
தமிழில் – முஹம்மது பஷீர்
source – https://www.instagram.com/p/Ci2BhHbP9BG/?igshid=YmMyMTA2M2Y=