அந்த காலகட்டம் இன்றைய இந்தியாவில் எந்த அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிராக வன்முறைகளும், வகுப்புவாதங்களும், சாதி பிரச்சனைகளும், மத கலவரங்களும் தூண்டப்படுகிறதோ, கட்டவிழ்க்கபடுகிறதோ, அதே போல ஒரு காலகட்டத்தில் இனவெறி தூண்டப்பட்டு கருப்பின மக்களுக்கு எதிராக இனவெறி கோலோச்சியிருந்த காலகட்டம். கருப்பின மக்கள் வஞ்சிக்கப்பட்டு சித்ரவதைகளும் கொலைகளும் அரங்கேறிய காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் மல்கம் லிட்டில்(Malcolm Little, மே 19, 1925 – பெப்ரவரி 21, 1965) எனும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கிரானாடாவைச் சோ்ந்த ஹெலன் லுாயி லிட்டில் மற்றும் ஜாா்ஜியாவின் ஏர்ல் லிட்டில் தம்பதிகளின் ஏழு பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தார். ஏர்ல் லிட்டில் தாம் வாழ்ந்த பகுதியில் கறுப்பின மக்களுக்கான செயற்பாட்டாளராக இருந்து வந்தார். அவர் மனைவி ஹெலென் லிட்டில் அதே பகுதியில் கறுப்பின மக்களுக்கான ‘நீக்ரோ வேர்ல்ட்’ என்ற தினசரியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். தாய் தந்தை இருவரும் தங்களுக்கான அரசியலை தங்கள் ஏழு குழந்தைகளுக்கும் கற்பித்து, வளர்த்தனர். மால்கம் லிட்டில் அவற்றை நன்கு கற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆறு வயது இருக்கையில் அவருடைய தந்தை கொல்லப்பட்டார். பதிமூன்று வயதில் அவரின் தாய் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவா் பல அனாதை இல்லங்களில் வாழ்ந்தார். அதன் பின் அவரின் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் பெரும்பாலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தள்ளப்படுவர். மால்கம் லிட்டிலின் பதின்பருவம் அத்தகைய சட்டவிரோத செயல்களில் கழிந்தது. அதனால் மால்கம் லிட்டில் தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டான். 1946 முதல் 1952 வரையிலான சிறை வாழ்க்கை மால்கம் லிட்டிலின் வாழ்வின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது.தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாழ்க்கை அவரை திசைதிருப்பியது. ஏழாண்டுகள் சிறைவாசம் அவரை அதிமாக கருப்பின மக்களை குறித்த அரசியலையும், இஸ்லாம் குறித்த அறிவையும் புகட்டியது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.
இன்னொருமுறை சொன்னார்கள், நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.
அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.’ இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.’
‘அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின்பாலும் செயல்களின்பாலும் தான் நோட்டமிடுகிறான்.'(முஸ்லிம்- இப்னுமாஜா)
இந்த போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்களாக மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறைவிசுவாசிகளை கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. இச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை, குலம், கோத்திரம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது. ஆகவே தான் ஆண்டுக்கொருமுறை உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவத்தை போற்றும்வண்ணம் ஹஜ் என்கின்ற புனித கடமையை நிறைவெற்ற மக்காவில் எந்தவித வேற்றுமையில்லாமல் ஒன்றுகூடுகின்றனர். இதில் சிந்திப்போறுக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றது.
மேற்கூறிய நபிமொழிகள் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்க முக்கிய காரணியாக இருந்திருக்கலாம், ஏனெனில் அவர் இவ்விடயங்களால் பாதித்த ஒருவர் என்பதால்.
கருப்பின மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வளர்ந்த அவர் மால்கம் லிட்டில் (லிட்டில் எனும் சொல் அடிமைத்தனத்தை குறிப்பதால்) எனும் பெயரை மால்கம் எக்ஸ் (Malcolm X) என்று மாற்றிக்கொண்டார். சிறையில் இஸ்லாத்தின் மீது கொண்ட காதல் அவரை இஸ்லாமியராக, ஒரு முஸ்லிமாக மாறினார். அல்ஹாஜ் மாலிக் அல்ஷபாஸ் என பெயரை மாற்றிக்கொண்டார்.
இஸ்லாமிய சட்டங்களையும், கருப்பின மக்கள் அரசியலையும் மையப்படுத்தி செயல்படும் இஸ்லாமிய தேசிய இனம் (Nation of Islam) என்ற அமைப்பில் தன்னை உறுப்பினராக்கிக் கொண்டார். அதன் பின் அவர் மால்கம் எக்ஸ் எனும் பெயரில் பிரசித்திபெற்ற பேச்சாளராகவும், இஸ்லாமிய அழைப்பாளராகவும், எண்ணற்ற இளைஞர்கள் ஆதரவு கொண்ட உலக அளவில் பேசப்படக்கூடிய அளவில் மாபெரும் மனிதரானார்.
சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்டின் லூதர் கிங் மீது மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார் மால்கம் எக்ஸ். “நான் ஒரு அமெரிக்கன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று மார்டின் லூதர் கிங் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக அமைதி வழியில் பேசிய போது, மால்கம் எக்ஸ் அதை விமர்சித்து, “நான் அமெரிக்கன் அல்ல; அமெரிக்க தேசியத்தால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் கறுப்பின மக்களுள் ஒருவன் நான். எனக்கு இருக்கும் அமெரிக்க கனவு என்பது கொடுங்கனவு மட்டுமே” என்றார்.
மால்கம் எக்ஸின் பேச்சுகள் கறுப்பின மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூகம், வாழ்வியல், வரலாறு முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. மால்கம் எக்ஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போராளியாக அடையாளப்படுத்தப்பட்டார்.
“சுதந்திரம், சமத்துவம், நீதி முதலானவற்றை யாரும் உங்களுக்கு கொடுக்க முடியாது. உண்மையில் அது உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். ” என்றார் மால்கம் எக்ஸ். ’நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பில் அவருக்கு பெருகிய செல்வாக்கு, அதன் தலைமையை அவர் மீது பொறாமை கொள்ள வைத்தது. மால்கம் எக்ஸுக்கும் அமைப்பின் தலைவர் எலியா முஹம்மதுவுக்கும் இடையில் முரண்பாடுகள் முளைக்கத் தொடங்கின. பின்னர் அமைப்பை விட்டு வெளியேறினார்.
1964ல் ஆப்பிரிக்க அமெரிக்க ஒற்றுமை அமைப்பை (Organization Of Afro-American Unity) தோற்றுவித்தார்.
ஆப்ரிக்க அமொிக்க ஒற்றுமைக்காகவும், மனித உாிமை செயற்பாட்டாளராகவும் வலம் வந்தார். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்தவா், வெள்ளை அமொிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காக கடுமையான சொற்களால் இடித்தவா் என அறியப்படுகிறாா். எதிா்பாளா்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவா் என அவா் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவா் மிகப்பொிய செல்வாக்குமிக்க ஆப்ரிக்க அமொிக்க தலைவா்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறாா்.
மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களுக்காகப் போராடிய சிறந்த தலைவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். அவரது போராட்டம் அமெரிக்க வாழ் கறுப்பின மக்களிடையே சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்தது.
1964ல் தனது ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆப்பிரிக்க தேசத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தார்.
இஸ்லாத்தை தேசமெங்கும் பரப்பி வந்த மால்கம் எக்ஸ் அவர்களை இவருடைய பேச்சை கேட்டு ஒட்டுமொத்த கருப்பின மக்களும் அவருக்கு பின்னால் சென்று விடுவார்கள் என அஞ்சி 21 பிப்ரவரி 1965ல் மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள அரங்கில் பேச ஆரம்பித்தவுடன் அமெரிக்க ஏகாதிபத்திய மத்திய புலனாய்வு துறை (Federal Bureau of Investigation) திட்டமிட்டு சுட்டு கொன்றதாகவும்.
பிப்ரவரி 21, 1965 அன்று, மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள அரங்கில் பேசத் தொடங்கினார் மால்கம் எக்ஸ். பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலே பார்வையாளர்களில் இருந்த ‘நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பைச் சேர்ந்த மூவர், நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பை விட்டு வெளியேறிய கோபத்தில் மால்கம் எக்ஸ் மீது சுடத் தொடங்கினர். என இரு வேறு தகவல்களை நாம் காணலாம்.
தன் வாழ்நாளை இஸ்லாத்திற்காக அற்பணித்த மால்கம் எக்ஸ் எனும் அல்ஹாஜ் மாலிக் ஷாபாஸ் அவ்விடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 39.
இஸ்லாமைய சித்தாந்தம் அடிப்படையிலும், கோட்பாடுகள் அடிப்படையிலும், மக்கள் பேராதரவின் அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இஸ்லாம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.
மல்கம் எக்சு 1965 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.
1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்
அடிமைதளைகளை அடித்து நொறுக்கி, சகோதரத்துவத்தை போதிக்கும் இஸ்லாம் ஒருவர் வாழ்வில் வந்தால் அது அவரை மிகப்பெரும் உச்சத்திற்கு உயர்த்தும் என்பது மால்கம் எக்ஸ் அவர்கள் வாழ்வில் நாம் கண்டோம். இன்ஷா அல்லாஹ்… மறுமையிலும் இறைவன் அவரை, அவரின் அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.
வாழ்வின் பல்வேறு கட்டங்களில் இன்றளவும் அடிமைகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கும் அனைவரும் தன் மீது ஏவப்படும் அனைத்து பிரச்சனைகளையும், அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து அனைவரும் மேலே வர வேண்டும்.
இதற்கு மால்கம் எக்ஸ் அவர்கள் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினையாக அமையும்.
இனவெறியை மாய்ப்போம்! இனவெறியர்களையும் மாய்ப்போம்!!
எழுதியவர்
~கா.அஸாருதீன்~