என்னை வெறும் முஸ்லீம் இளைஞனாகக் கேட்கட்டும்; எல்கர் பரிஷத்தில் ஷர்ஜீல் உஸ்மானியின் முழு உரை
ஷர்ஜீல் உஸ்மானி
மேடையில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய பிரமுகர்களே, அன்புள்ள நண்பர்களே, பெரியவர்களே, எனது பெயர், எனது குடியுரிமை, எனது நேர்மை, எனது நன்மை, எனது குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்து என்னைப் பிரித்து, வெறும் முஸ்லீம் இளைஞர்களாக என்னைக் நீங்கள் பார்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மனதார கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு முஸ்லீம் இளைஞனாக, நான் இங்கே என் வலியை வெளிப்படுத்தவும், என் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கதையைச் சொல்லவும், என் கோபத்தின் செய்தியை அனுப்பவும், என் போரை அறிவிக்கவும் இங்கு வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் மரியாதையுடன் வாழ்த்துகிறேன் அஸ்ஸலாமு அலைகும் வா ரஹ்மத்துல்லா ஹாய் வா பராகதுஹு – (என் இறைவனின் சாந்தியும்சமாதானமும் உங்கள் மீது இருக்கட்டும்)
இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு ஹர்ஷாலி ஜி என்னை அழைத்தபோது, நான் கவலைப்பட்டேன், எனக்கு ஒரு பயம் இருந்தது, ஏனென்றால் நான்முதன்முதலில் முஸ்லிம் அல்லாத பார்வையாளர்களுடன் பேசப் போகிறேன். என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று என்னால் விரிவுபடுத்த முடியவில்லை. நான் சொன்னதை நீங்கள் ஏற்கவில்லை என்றாலொ, அல்லது எனது வார்த்தைகள் ஏதேனும் உங்களைபுண்படுத்துமானால், நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இரண்டாவதாக, உங்கள் கருத்தைநீங்கள் இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.
சகோதரர் பிரசாந்த் [கண்ணோஜியா] இங்கு பேசியபோது, அவர் பேசிய பிறகு நான் சொல்வதற்கு அதிகம் மிச்சமில்லை, ஆனால் நாம் ஒற்றுமையைப் பற்றி பேசியபோது, அடக்குமுறை பற்றி பேசியபோது, ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகங்களும் ஒன்று கூடி இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும் என்று நாங்கள் கூறுயபோது .. [மற்றும்] இது இந்த நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் பிரச்சனை என்னவென்றால், தலித் சமூகத்தின் ஒரு தலைவர் தனது மேடையில் இருந்து நாங்கள் முஸ்லிம்களுடன் இருக்கிறோம் என்று பேசுகிறார், ஒரு முஸ்லீம் தலைவர் தனது மேடையில் இருந்து பேசுகிறார் நாங்கள் தலித்துகளுடன் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்துடனும்இருக்கிறோம்என்று. ஆனால் கூட்டாக இந்த இரு சமூகங்களுக்கிடையில் எந்த நட்பும் இல்லை, அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் அவர்கள் வந்து உட்கார்ந்தால் அவர்கள் நட்பை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள், மற்றவர்களின் வலியை அவர்கள் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தச் செய்தியை நம் வீடுகளுக்கும் சுற்றுப்புறங்களுக்கும் நாம் பெற முடியாவிட்டால், பெரிய கூட்டணிகளைப் பற்றிப் பேசுவதும், ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதும் ஒரு உண்மையற்ற தன்மை.
பெரிய பீமா கோரேகானின் போரை நினைவில் கொள்வதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம், பீமாவை ஒரு முறை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் பெஷ்வாய்க்கு எதிராக புரட்சி என்ற முழக்கத்தை எழுப்பி, [அவர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக] போராட முன்வந்த அந்த கம்பீரமான போர் நினைவில் கொள்ளுங்கள்,தக்பீர் என்ற முழக்கங்களுடனும், வாள்களுடனும் போரில் உங்கள் பக்கத்திலிருந்த முஸ்லிம்கள் அல்லவா? முஸ்லிம்கள் உங்களுடன் இருக்க முடியும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியும் என்றால், இப்போது ஏன் இல்லை?
நாடு முழுவதும் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்துடன் நான் அடிக்கடி அடையாளம் காணப்படுகிறேன். இதைப் பற்றி இங்கே ஏதாவது சொல்லும்படி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த மசோதாவின் சிக்கல்கள் மற்றும் அது என்ன கூறுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த மசோதா பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்களில் முஸ்லிம்களைத் தவிர அனைத்து மதத்தினருக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்றும், துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் கூறுகிறது. இந்த நாட்டில் 25 கோடி முஸ்லிம்கள் மற்றும் மொத்த மக்கள் தொகை இருக்கும் 130 கோடி என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 105 கோடி மக்கள், அவர்கள் இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி கேட்டார்களா, ஆப்கானிஸ்தானில் புத்த மதத்தினர்கள் இருக்கிறார்கள், பர்மாவில் நடந்த இனப்படுகொலை பற்றி என்ன நினைக்கிறார்கள் , அவர்களுக்கு தங்குமிடம் தேவையில்லையா?
இந்த கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள். பின்னர் இதை சற்று கவனியுங்கள் ..வங்காள தேசத்திலிருந்துயாராவது வந்து இந்தியா போன்ற ஒரு நாட்டில் குடியேறுவார்களா. நாம் என்ன வழங்க வேண்டும்? தற்போது அவர்களின் [பங்களாதேஷின்] மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்தியாவை விட சிறந்தது, அவர்களுக்கு சிறந்த மற்றும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. ஏன் அவர்கள் இங்கு வரவேண்டும்? இதற்கெல்லாம் பின்னால் அரசியல் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தனது புத்தகத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை, அவர்கள் இங்கு வாழ விரும்பினால், அவர்கள் இந்து மதத்தை தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களுக்கு குடியுரிமை பெற உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் முதலில் மிகவும் முக்கியமான ஒன்றை விவாதிக்க வேண்டும் என விரும்புகிறேன் ,”நாம் அனைவரும் ஒரே மக்கள், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.” என்ற பெரிய பொய் நம்மிடம் கூறப்பட்டுள்ளது,அவை நம் இதயங்களிலும் மனதிலும் பதிந்திருக்கின்றது. இந்த பொய்யை இந்திய காங்கிரஸ் கட்சி 1930 இல் கூறியது. பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கர் இதனை மறுத்து, “தலித் உங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக இல்லை” என்று கூறினார். காஇதேஅசாம் மற்றும் மௌலானா ஹஸ்ரத் மோகானி ஆகியோர் முஸ்லிம்களும் உங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றனர். எப்படியிருந்தாலும் இன்று எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாங்கள் ஒரு தேசம் என்று கருதப்பட்டது, இதன் காரணமாக இந்த மக்கள் வந்து “இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அனைவரும் சகோதரர்கள்” என்ற முழக்கங்களை எழுப்புகிறார்கள். இந்த மக்கள் மிகவும் நேர்மையற்ற மக்கள். முதலாவதாக, இந்து, முஸ்லீம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவர்களைத் தவிர, இந்த சமூகத்தில் நீங்கள் பகிர்ந்து கொள்ளாத பிற சமூகங்களும் இந்தியாவில் உள்ளன, இது உங்கள் தவறு. இரண்டாவதாக [இந்த] கேள்வி இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக இருந்தால், ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு சகோதரர் மட்டுமே ஒடுக்கப்படுவது ஏன் என்று நான் கேட்க வேண்டுமா இல்லையா? ஒரே ஒரு சகோதரர் மட்டும் ஏன் அடிக்கப்படுகிறார்? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை நிச்சயமாக நாங்கள் தொடர்வோம்?
இந்தியா ஒரு சமூகம், ஒரே நாடு என்று அவர்கள் கூறினர். சமூகத்தை வரையறுக்க யாருக்கு அதிகாரம் இருந்தாலும், தேசம் எவ்வாறு இயங்குகிறது, தேசத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கும், யாருக்கு உரிமைகள் கிடைக்கும் என்பதை நாடு தீர்மானிக்கும். இப்போது வரை, இந்த நாட்டின் மேலாதிக்கம் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்தது. நாமும் இந்த தேசத்தின் மற்ற அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களும் ஒன்றிணைந்து அவர்களிடமிருந்து அந்த மேலாதிக்கத்தை பறித்து, இந்த நாடு எங்களுடையது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும், அவர்கள் அல்ல.
அரசியலமைப்புக்கு வரும்போது- அரசியலமைப்பு என்றால் என்ன? இதை நாம் எளிய மொழியில் ஒருவரிடம் விளக்க வேண்டுமானால்..நாம் என்ன சொல்கிறோம்..இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் சமத்துவத்துடன் சமாதானமாக வைத்திருக்க ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தாக்கப்பட்ட ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நமது அரசியலமைப்பு, இன்று, இந்த நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்றும் போது, இந்த ஒப்பந்தத்தையும் நீங்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும். நீங்களும் நானும் அனைவரும் சமம், அதற்காக நாம் நம் சண்டைகளையும், குறைகளையும் சிறிது நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். நாம் ஒன்றாக வந்து இந்த போரில் போராட வேண்டும்.
மேலும், அரசியலமைப்பில் எழுதப்பட்ட நிபந்தனைகள் பயன்படுத்தப்படாவிட்டால், அதற்கு எந்த அந்தஸ்தும் இருக்காது, இது உண்மையில் ஒரு ஒப்பந்தமாகும், பின்னர் ஒப்பந்தம் காலாவதியாகிறது மற்றும் ஒப்பந்தம் காலாவதியானால், ஒரு போர் உள்ளது, இதை நாங்கள் முழு பொறுப்போடு சொல்கிறோம் நாம் யுத்த களத்தில் இருக்கிறோம் . மேலும் நாம் ஒரு போரில் வாழ்கிறோம்.
ஒரு மாநிலத்தின் தூண்களாக இருப்பது – நீதித்துறை, காவல்துறை, சட்டமன்ற, நிர்வாக மற்றும் ஊடகங்கள் இவை மாநிலத்தின் ஐந்து உறுப்புகள். முனாவ்வர் ஃபாரூக்கி ஒரு நகைச்சுவை நடிகர் [பிரசாந்த் குறிப்பிட்டுள்ளவர்], அவர் ஒரு நகைச்சுவையை கூறப் போகிறார்..அவர் எதையும் சிதைக்கவில்லை..அவர் நம்மை சுற்றியுள்ள சமூகத்தை எவையெல்லாம் சிதைக்க்ப்போகிறது என்று கூற முற்படுகிறார் . அவர் இன்று காணாமல் ஆக்கப்படிருக்கிறார் . இந்தியா ஒரு அழகான நாடு என்று நீதிபதி கூறுகிறார், ஆனால் நான் உங்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
பாப்ரி தீர்ப்பைப் பாருங்கள், மொத்தத்தில் நான் இந்திய நீதித்துறையை விரிவாகக் கூற விரும்பவில்லை, ஆனால் குறைந்தபட்சம் எனக்கு இந்திய நீதித்துறை இன்று நம்பத்தகுந்ததாக இல்லை. இந்திய நீதித்துறையை நான் நம்பவில்லை என்று நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், எங்களுக்கிடையில் அமர்ந்திருக்கும் ஒத்துழைப்பாளர்களுக்கு “இந்திய நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று மீண்டும் சொல்கிறேன். தங்களுக்கு இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்குவது அதன் அரசின் மீது பொறுப்பாகும், மக்களின் நம்பிக்கை முறிந்தால், , மன்னிப்பு கேட்பது மற்றும் அவர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது அரசின் பொறுப்பாகும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் இது போன்ற முடிவுகள் கொண்டாடப்படுகின்றன. , நான் சேர்ந்த இடம் உத்திரபிரதேச மாநிலம் அதனைப் பற்றிய ஒரு எடுத்துக்காட்டு இங்கே .. நாங்கள் என்கவுண்டர் செய்வோம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். என்கவுண்டர் ஒருவிபத்து, யாராவது எதிர்பாராத விதமாக தோன்றி உங்களைத் தாக்கினால், தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் ஆக்கிரமிப்பாளரை சுட முடியும். எங்கள் முதல்வர் “நாங்கள் என்கவுண்டர் செய்வோம் ” என்று கூறுகிறார்.
இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் 19 என்கவுண்டர்கள் நடந்தன, இந்த என்கவுண்டர்களில்இறந்தவர்கள் அனைவரும் தலித்துகள் அல்லது முஸ்லிம்கள். இந்த போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெற்று கையால் சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமாக திறந்த துப்பாக்கிச் சூடு நடத்தி, “பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” போன்ற கடுமையான அறிக்கைகளால் அவர்களைத் தாக்கினர்.
இந்த போலீஸை எவ்வாறு நம்புவது என்று யாராவது எனக்கு விளக்குகிறீர்களா? “நான் இந்திய போலீஸை நம்பவில்லை.” சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பவர்கள், எங்களுக்காக சட்டங்களை உருவாக்குபவர்கள், இதுபோன்ற இனப்படுகொலை மசோதாக்களைக் கொண்டு வருபவர்கள், விவசாயமசோதாக்களைக் கொண்டு வருபவர்கள், குறைந்தபட்சம் நம் அனைவருக்கும் இது குறித்து ஒரு பொதுவான கருத்து உள்ளது, “நாங்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்களை நம்பவில்லை” பிரசாந்த் பாய் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி அதிகாரத்துவத்தைப் பற்றி நாம் பேசும்போது, எஸ்.டி.எம் யார் சொல்வதைக் கேட்பார்? அது குறித்தும் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நான் அதைக் குறிப்பிட விரும்புகிறேன், நிர்வாகிகளையும் நான் நம்பவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஊடகத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. “மொத்தத்தில் நான் இன்று இந்திய மாநிலத்தை நம்பவில்லை.” இவற்றில் என் தவறேதுமில்லை, யாராவது வந்து என்னிடம் சொன்னால் “நீங்கள் அரசை நம்பவில்லை, நீங்கள் ஒரு தேச விரோதி” என்று. அரசை நம்புவது எனது பொறுப்பு அல்ல, ஆனால் அதன் மக்களின் நம்பிக்கையை வெல்வது அரசின் பொறுப்பு.
என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஒரு மோசமான இடம் அல்ல. நான் மீண்டும் சொல்கிறேன், பாகிஸ்தான் எனக்கு ஒரு மோசமான இடம் அல்ல. இந்தியா அல்லது பாகிஸ்தானாக எதுவாக இருந்தாலும் இந்த உலகில் நல்ல இடம் என, தீய இடம் என எதுவும் இல்லை. எந்த இடமும் நல்லது அல்லது கெட்டது அல்ல, அது எந்த வகையான இடம் என்பது , அங்கு வாழும் சமூகத்தால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த இடத்தில் எவ்வளவு சமத்துவம் இருக்கிறது என்பதால் தீர்மானிக்கப்படுகிறது, இந்த இடத்தின் பெயர் பாகிஸ்தான் என்று அல்ல. தேசியவாதம் என்பது மிகவும் பயங்கரமான கருத்து. ஒரு நாடு இருப்பதால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை இந்த உலகில் இருப்பதால், அவர்களுக்காக நீடூழிவாழ்ககோஷங்களை எழுப்ப நாங்கள் கேட்கப்படுகிறோம். நீங்கள் ஒரு நல்ல நாடாக இருந்திருந்தால், அங்கு சமத்துவம் பராமரிக்கப்பட்டு, யாரும் பசியுடன் படுக்கப் போகக்கூடாது , உங்கள் சிறைச்சாலைகள் காலியாக இருக்கவேண்டும், உங்களுக்கு நீதி இருந்தால், எல்லோரும் மகிழ்ச்சியுடன் பெருமையுடன் பேசுவார்கள், அது இந்தியா, பாகிஸ்தான் அல்லது வேறு எந்த நாட்டாக இருந்தாலும் சரி. ஆனால் இங்கே எங்களுக்கு அதே பிரச்சினை உள்ளது, அங்கே உங்களுக்கு அதே பிரச்சினை உள்ளது, மூன்றாம் நாடு வேறுபட்டது அல்ல. நான் ஏன் உன்னை புகழ வேண்டும்? நீங்கள் இருப்பதாலா? தேசியவாதத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, அதற்கு ஒரு எதிரி தேவை அல்லது நீங்கள் ஒரு தேசியவாதியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் இந்தியாவில் ஒரு தேசியவாதியாக இருக்க விரும்பினால், நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும், முதலில் நீங்கள் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்று சொல்ல வேண்டும்.. இரண்டாவதாக நீங்கள் “பாகிஸ்தானுக்கு மரணம்” அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேசியவாதிகள் என்ற பிரிவின் கீழ் வர முடியும். இதேபோல், ஒரு தேசபக்தர் என்பதற்கு பாகிஸ்தானிலும் தென்னாப்பிரிக்காவிலும் வேறுபட்ட வரையறை இருக்கும். நான் தேசியவாதத்தை நம்பவில்லை என்பதை எனது தரப்பில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இப்போது நான் உண்மையில் இங்கு வந்ததைப் பற்றி பேசப் போகிறேன். இன்றைய இந்து சமுதாயத்தில் இந்தியாவில் அழுகல் உள்ளது. 14 வயதான ஹபீஸ் ஜுனைட் நகரும் ரயிலில் ஒரு கும்பலால் 31 முறை [கொல்லப்பட்டார்]. அவர்களைத் தடுக்க யாரும் வரவில்லை. இந்த மக்கள் நம்சமூகத்திலிருந்து, எனக்கும் உங்களுக்கும் இடையில் இருந்து வருகிறார்கள். ஒருவரைக் கொன்று வீடு திரும்பும்போது மற்றவர்களைக் கொன்று சித்திரவதை செய்யும் நபர்கள் தங்களை என்ன செய்வார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் ஒரு புதிய வழியில் கைகளை கழுவுகிறார்களா, கொஞ்சம் மருந்து கலந்து குளிக்கிறார்களா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் திரும்பி வந்து நம்மிடையே உட்கார்ந்துகொண்டு, மறுநாள் ஒருவரைப் பிடித்து, பின்னர் கொன்று சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இந்த நபர்கள் தங்கள் வீட்டில் மிகுந்த அன்புடன் நடத்தப்படுகிறார்கள், அவர்கள் தந்தையின் கால்களை மரியாதையுடன் தொடுகிறார்கள், அவர்களும் கோவிலுக்குச் செல்கிறார்கள், அவர்களும் வழிபடுகிறார்கள், பின்னர் அவர்கள் வெளியே வந்து மீண்டும் அதே குற்றத்தைச் செய்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் மிகவும் பொதுவானவை, யாராவது கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு முஸ்லீமை கொலை செய்ய ஒரு காரணம் தேவைப்பட்டது. கொலை செயப்பட்ட நபருக்கும் இந்திய முஜாஹிதீனுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது அல்லது அவர் சிமி உறுப்பினராக இருக்கிறார் என்பது போன்ற ஒரு கதை உருவாக்கப்பட்டது. அந்த அடக்குமுறை தொடங்கிய பின்னர் அவர் ஒரு குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டார், பின்னர் அது [முஸ்லீமை] சித்திரவதை செய்வதற்கும் ஒடுக்குவதற்கும் சட்டபூர்வமானது. இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது பின்னணி தேவையில்லை. நீங்கள் முஸ்லீமாக இருந்தால் அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள், இறைச்சி சாப்பிடுவது, அவைமாட்டிறைச்சி, கோழி அல்லது ஆட்டிறைச்சியாக இருந்தாலும்சரி..அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள், ரயிலில் பயணம் செய்ய இருக்கை கேட்டால் அவர்கள் உங்களைக் கொல்வார்கள். ஒரு கன்று திருடப்பட்டது, அதற்கு பதிலாக ஒரு உயிர் எடுக்கப்பட்டது. ஒரு முஸ்லீமை கொல்வது இப்போது இந்தியாவில் ஒரு சாதாரண விஷயம். இது இயல்பாக்கப்பட்டது. இப்போது நாம் யாருக்கு எதிராக போராடுகிறோம் என்று நினைத்துப்பாருங்கள்?
இது எந்தவொரு நபருக்கும் அல்லது ஒரு மதத்திற்கும் அல்லது ஒரு அரசியல்வாதிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல. எங்கள் போராட்டம் வெறுப்புக்கு எதிரானது. அந்த நபர் ஒரு முஸ்லீமாக இருந்தால் நீங்கள் கொல்ல சுதந்திரமாக இருக்கிறீர்கள் என்று சொல்லும் வெறுப்பு, அவர் ஒரு முஸ்லீம் என்றால் எந்த நபருக்கும் ஒரு இடத்தை வாடகைக்கு விடக்கூடாது. அதே வெறுப்புதான் வாய்ப்பு எங்கு வந்தாலும் ஒடுக்குகிறது. கூட்டத்தில் நீங்கள் யாரையும் கொல்லவில்லை, ஆனால் யாராவது உங்கள் வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பினால், அவர் ஒரு முஸ்லீம் என்பதால் நீங்கள் அவருக்கு ஒரு வீட்டைக் கொடுக்க மாட்டீர்கள், பிறகு நீங்களும் பொறுப்பு. இந்த வெறுப்பின் காரணமாகவே அரசாங்கம் அதிக சக்திவாய்ந்ததாகி இதுபோன்ற சட்டங்களை கொண்டுவருகிறது. இந்த வெறுப்பை நாம் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த வெறுப்பை ஒழிப்பது எங்கள் வேலை அல்ல, அது முஸ்லிம்களின் வேலை அல்ல, வெறுப்பை பரப்புவோரின் வேலை. “இந்த வெறுப்பிலிருந்து நாங்கள் உங்களை விடுவிக்க முடியாது.” வெறுப்பவர் அந்த வெறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது தவறு என்று மட்டுமே நாங்கள் சொல்ல முடியும். அதை நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து கூறுவோம்.
இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனை என்னவென்றால், முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றால் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஒரு முஸ்லீமின் படம் முன்வைக்கப்படுகிறது , அவர்கள் முன்வைக்க விரும்புவது . ஒரு முஸ்லீம் ஒரு பயங்கரவாதி, இந்த நாட்டில் வாழ விரும்பவில்லை, அவரைக் கொல்லுங்கள். இரண்டாவதாக, இந்து சமுதாயத்தின் நல்ல மனிதர்களால் முன்வைக்கப்பட்டவர்கள், தங்களை நல்லவர்கள் என்று அழைப்பவர்கள், தங்கள் பார்வையில், முஸ்லிம்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள். எனவே இந்த நாட்டில் ஒரு முஸ்லீம் உதவியற்றவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். இடையில் முஸ்லிம்களின் கற்பனை இல்லை.
நான் 23 வயது சிறுவன், பட்டப்படிப்பை முடித்தவன். என் அம்மா எனக்கு என்ன கனவு காண்பார்? நான் ஒரு நல்ல இடத்தில் படிக்க வேண்டும் , ஒரு நல்ல வேலை செய்ய வேண்டும், கண்ணியத்துடன் வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதானே. ஆனால் என் அம்மா எனக்காக கனவு காண்கிறார், நான் பயணம் செய்தால் நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எந்த காரணமும் இல்லாமல் போலீசார் என்னைக் கைது செய்தால், தன் மகன் பாதுகாப்பாகவும் உயிருடனும் வீட்டிற்கு வர வேண்டும் என்று விரும்புகிறாள். இந்த விஷயங்களில் நாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், இதனால் உண்மையான கேள்விகளை எழுப்ப முடியாது. காவல்துறையில் எங்கள் மக்களில் 2% மட்டுமே உள்ளனர், ஆனால் சிறையில் 30% முஸ்லிம்களால் நிரப்பப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஒன்று, ஆறு அல்லது நான்கு சதவீதம் மட்டுமே, மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதி. கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில், நாங்கள் [முஸ்லிம்கள்] என்கவுண்டர்களின் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். இந்த விஷயங்கள் அனைத்தும் கேள்வி கேட்கப்படுவதை இந்த மக்கள் விரும்பவில்லை. எனவே அது இப்போது நடக்காது. இந்த எச்சரிக்கை எங்களிடமிருந்து இந்து சமுதாய மக்களுக்கு உள்ளது, ஒரு நபர் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், ஒரு உயிரினம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், நீங்கள் அவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவீர்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக ஒருமுறை பதிலளிப்பார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
ஒரு பல்லியின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், அது யாரையும் கடிக்காது, ஆனால் அதை இரண்டு முறை தொந்தரவு செய்ய முயற்சித்தால் அது கடிக்கும். ஒருவர் பதிலளிக்க வேண்டிய அளவுக்கு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் கலகம் செய்ய வேண்டிய அளவிற்கு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். பீமா கோரேகானின் போராட்டத்தைப் பற்றி சிந்தியுங்கள், இது “யல்கார் பரிஷத்” .. யல்கார் என்பது போர் பிரகடனம் என்று பொருள். நாம் போராட மக்கள் இருந்தால் மற்றும் தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே நாம் போரை அறிவிக்க முடியும். முந்தைய காலங்களில் நாம் நம் சொந்த இரத்தத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் இப்போது நாம் சிறிய தியாகங்களை செய்ய வேண்டும். உங்கள் மகன் ஒரு வெறுப்பாளராகவோ அல்லது பிரச்சாரகராகவோ மாறுகிறான் என்றால், அவன் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று கருதுகிறான், பிறகு அவனுக்கு தொடர்ந்து விளக்குவது உங்கள் பொறுப்பு, நீங்கள் வெறுப்பவர் உங்கள் சகோதரர் , நீங்கள் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அவருக்குக் கற்பிக்க வேண்டும். பள்ளியிலோ அல்லது எந்த ஆலயத்திலோ, உங்கள் குழந்தைகளுக்கு வெறுப்பு கற்பிக்கப்பட்ட இடமெல்லாம் உங்கள் பிள்ளைக்கு அது தவறு என்பதை உறுதிசெய்து சொல்வது உங்கள் பொறுப்பு. உங்கள் ஆசிரியர் பக்கச்சார்பானவராக இருந்தால், உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் மற்றும் நீங்கள் இந்த நாட்டில் இரண்டாம் வகுப்பு குடிமகன் என்பதை நினைவூட்டினால், இது பாபா சாஹேப்புடன் செய்யப்பட்ட விதம், உங்களுக்குதான் மீண்டும் போராட வேண்டிய பொறுப்புஉள்ளது. இது ஒரு தியாகமும் கூட. இந்த சிறிய தியாகங்கள் இன்று அதிக மதிப்புடையவை.
இந்த வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவர நாம் பரஸ்பர மனக்கசப்பை முடிவுக்குக் கொண்டு போராட வேண்டும். அதனுடன், சண்டை என்று வரும்போது, போர் அறிவிக்கப்பட்டு, போராடத் தயாராக இருக்கும் மக்கள் இருக்கும்போது, நமக்கு என்ன மிச்சம்? காரணம்- நாம் ஏன் போராட வேண்டும்? இங்குள்ள குறைந்த பட்சம், யல்கர் பரிஷத்துடன் இணைந்திருக்கும் மக்கள் அம்பேத்கரைட்டுகள் மற்றும் முஸ்லிம்களின் பக்கம் இருக்கிறார்கள் என்று இங்கே கருதுகிறேன். நம் இதயத்தில் உள்ள வலியை நாம் சுமக்கிற அளவுக்கு நம் மக்களின் இதயங்களை எட்ட முடியவில்லை. இந்த வலியை அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.
கடைசியாக, கடந்த ஆறு ஆண்டுகளில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துள்ளன, எங்களின் மதம் [இஸ்லாம்] குறிவைக்கப்பட்டுள்ளது, யார் வேண்டுமானாலும் வந்து எதை வேண்டுமானாலும் சொல்லலாம். கடந்த மாதம் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேச்சாளர் ஒருவர் வெளிப்படையாக குர்ஆனைப் படித்தால் அவர் ஒரு பேயாக மாறும், நாங்கள் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றுவோம், முஸ்லிம்களுக்கு அந்தஸ்து எஞ்சியிருக்காது, அவர்களின் வீட்டின் மரியாதை..உங்கள் மகள்கள் உங்களுடன் இருப்பார்கள். உங்கள் சமுதாயத்தை மோசமாக அழுகும் இந்த மக்கள், நான் எங்கள் இரு விரல்களிலும், இதுபோன்ற விஷயங்களைப் பேசுபவர்களிடமும், [இதுபோன்ற கூட்டங்களில்] கலந்துகொள்பவர்களிடமும் விரல்களை உயர்த்துகிறேன்.
இதுபோன்ற கூட்டங்களில் இருந்து உங்கள் மக்களை வெளியேற்றுவது உங்கள் பொறுப்பு, அப்போதுதான் நாங்கள் ஒன்று கூடி ஒற்றுமை பற்றி பேச முடியும். சத்தியம் செய்வது, வாக்குறுதிகள் அளிப்பது, கோஷங்களை எழுப்புவது எங்கள் கடமை அல்ல, அவர்கள் வெவ்வேறு அரசியல்வாதிகள், அவர்கள் டெல்லியில் இருந்து கோஷங்களை எழுப்ப எங்களுக்கிடையில் வருவார்கள், அவர்கள் வெளியேறுவார்கள். அவர்கள் உங்களுக்காக ஒருபோதும் இயங்க மாட்டார்கள். நீங்கள் வந்து மக்களிடையே உட்கார்ந்தால் வேலை செய்யப்படும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு மற்றும் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசுப்படும். ஏற்கனவே எங்களை விரும்பும் நபர்களுடன் நாங்கள் பேச வேண்டியதில்லை, விரும்பாதவர்களுடன் பேச வேண்டும். நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க விரும்புகிறோம், நேர்மாறாக, நாங்கள் ஒன்றுகூடி ஒன்றாக வந்து, ஒருவரையொருவர் கேட்டு புகழ்ந்து விட்டு வெளியேறுகிறோம். சுதந்திரம்- இது நாங்கள் எப்படிப் பெறப்போகிறோம் என்பதல்ல. நாம் நமக்கான மக்களை சேகரிக்க வேண்டும்.
امنچاہتےہیںمگرظلم
جنگلازمیہےتوپھرجنگ
[நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் அடக்குமுறைக்கு எதிராக, ஒரு போரை நடத்த வேண்டுமானால், அப்படியே நடக்கும்]
சர்ஜீல் இம்மாம் உரையின் மொழியாக்கம்
தமிழில்; ஆயிஷாஷீபா.நூ