தேச துரோக வழக்கில் கைதாகிய சித்தீக் காப்பானுக்கு ஜாமீன் தர மறுப்பு. 669 நாட்களாக சிறையில் தொடரும் அவலம்.
தேச துரோக வழக்கின் பெயரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சித்தீக் காப்பானின் ஜாமீன் முறையீட்டை அலஹாபாத் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி கிருஷ்ணா பஹல் ஒருவர் மட்டும், சித்தீக் காப்பாணின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்ற அமர்வில் ரத்து செய்ததாக நீதிமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
சித்தீக் காப்பான் டெல்லியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளரும், கேரளா பணி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (KUWJ), டெல்லி கிளையின் செயலாளரும் ஆவார்.அக்டோபர் 2020இல் 19 வயது தலித் பெண் உத்தர் பிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் எனும் ஊரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஆவணப்படுத்தச் சென்ற சித்தீக் காப்பானை இன்னும் மூன்று முஸ்லிம் ஆண்களோடு தேசதுரோக வழக்கின் பெயரில் அநியாயமாக கைது செய்தனர்.
உத்தர் பிரதேசத்தில் சாதி அடிப்படையில் நடந்த ஹத்ராஸ் பலாத்கார வழக்கை ஆவணப்படுத்த இருந்த சித்தீக் காப்பானை கைது செய்தனர். மேலும் இவர் சட்டத்தையும் இன்னும் பிற சூழ்நிலைகளையும் சீர்குழைக்க காரணமாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு மதுரா நீதிமன்றம் சித்தீக் காபானின் ஜாமீன் கோரிக்கையை ஜூலை 2021இல் ரத்து செய்தது.
ரிஃபா
தமிழில் – ரிஃபாஸுதீன்