கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் PU அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணியும் காரணத்தால் முஸ்லிம் மாணவிகள் கடந்த மூன்று வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப் படாமலும் வருகை பதிவு மறுக்கப்பட்டும் இருக்கிறது.
“இன்று எங்களை படிக்கட்டில் அமர வைத்தனர். இது எங்களுக்கு அசௌகரியத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வகுப்பிற்குள் இருக்கும் மற்ற மாணவர்களிடம் இருந்து பாட குறிப்புகளை கடன்வாங்கி எங்களுக்குள் நாங்களே பாடங்களை படித்துக் கொள்கிறோம். இதுவரை நாங்கள் மூன்று வார வகுப்புகளை தவறவிட்டுடிருக்கிறோம் மேலும் இதனால் எங்களுக்கு இந்த ஆண்டின் வருகை பதிவேட்டின் தேர்ச்சி பாதிக்கப்படலாம்”
-ஆலியா பாதிக்கப்பட்ட மாணவி.
அக்கல்லூரியில் உள்ள முஸ்லிம் மாணவிகள்.
- தங்களின் ஹிஜாபை கழற்ற கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
- இஸ்லாமியர் எனும் காரணத்தால் ஆசிரியர்களால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.
-ABVP ன் பேரணியில் காவி கொடிகளை ஏந்தி கலந்துகொள்ள கட்டாயப் படுத்தப் பட்டிருக்கின்றனர்.
-அஸ்ஸலாமு அலைக்கும் சொல்ல தடை விதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தலையில் துப்பட்டா அணியும் காரணத்தால் மாணவிகள் தங்கள் மூத்த மாணவர்களின் தொல்லைகளுக்கும் ஆளாகியிருக்கின்றனர். மேலும் அந்த மாணவர்கள் நிர்வாகத்தால் பலவகையான பாகுபாடுகளுக்கும் வேறுபடுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர்.
“இந்து மாணவிகள் வளையல் மற்றும் பொட்டுக்களுடன் வருகிறார்கள். தீபாவளி மற்றும் பல இந்து பண்டிகைகள் கல்லூரியிலேயே கொண்டாடப்படுகிறது. பிறகு ஏன் நாங்கள் மட்டும் ஹிஜாப் அணியக்கூடாது?”
-அல்மாஸ் பாதிக்கப்பட்ட மாணவி.
மாணவிகளின் பெற்றோர்கள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் பலவிதமான வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளும் ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர், பெற்றோர்கள் தவறாக நடத்தப்பட்டுள்ளனர்.
“கல்லூரியில் பூஜைகள் நடத்தப்படுகிறது ஆனால் முஸ்லீம் ஹிஜாப் அணிய கூடாது ஏன்? இஸ்லாமோஃபோபியா இல்லை என்றால் என்ன?”
மாணவிகள் இன்னும் தொடர்ந்து தங்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கல்லூரியின் இந்நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானதும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானதும் இல்லையா? நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் தமது மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை வழங்கவில்லையா?
இந்நிகழ்வு இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இஸ்லாமியர்கள் மீதான இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடாக நடந்துவரும் இத்தகைய தீமைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஹபிபுர் ரஹ்மான் – எழுத்தாளர்