காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர்நிறுத்தத்தில் முடிவடைந்தது. திங்கட்கிழமையன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய அவசரக் கூட்டத்தில் ‘ஒரு வருடத்திற்கு பிறகு, ஓரளவு அமைதியான சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை காஸாவின் மீது மீண்டும் அதிகரித்துள்ளது.’ என இந்தியாவின் பிரதிநிதி தூதர் ருசிரா காம்போஜ் அறிக்கை சமர்ப்பித்தார்.
கடந்த மே மாதத்தில் நடந்த சர்வதேச சமூகத்தின் சந்திப்பில் போர் நிறுத்தம் குறித்தான பேச்சு வார்த்தைகள், பல்வகை வளர்ச்சித் திட்டங்கள் என எதுவுமே பயன் அளிக்கவில்லை. அமைதிக்கான கடும் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுகிறது என்றும் ருசிரா காம்போஜ் குறிப்பிட்டு இருந்தார்.
பாலஸ்தீன் நாட்டின் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து 3 நாட்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு ஐநாவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய குண்டுவெடிப்புகளில் பல பொதுமக்கள் மற்றும் 16 குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் , பலஸ்தினுக்கும் இடையில் அமைதியான, மற்றும் பாதுகாப்பான சூழல், அவரவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் ஒற்றுமையாக வாழ ஐநா மற்றும் அனைத்து உலக நாடுகளும் சேர்ந்து வழிவகை செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.
தமிழில் – ரிஃபாஸுதீன்