மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.
இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம்.