உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு மாதம் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரிப் பூங்காவில் உள்ள புல்வெளியில் இவர் தொழுகும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இப்பேராசிரியரின் தொழுகையை வீடியோ வைரலானதை அடுத்து இதை குறிவைத்து இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இப்பேராசிரியர் கல்லூரியின் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரின.
இதுகுறித்து பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா (BJYM) அமைப்பின் மாணவத் தலைவர் தீபக் ஷர்மா ஆசாத் பத்திரிக்கை நிருபர்களிடம் “இப் பேராசிரியர் கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தி கல்லூரியின் அமைதியான சூழலை கெடுக்க முயன்றார்” என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததுள்ளது.
இதையடுத்து பேராசிரியர் ராசிக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து குவாரசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் FIR எதுவும் போடப்படவில்லை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அறிக்கை வந்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா என்பதை விசாரணைக் குழுவின் கூட்டம் முடிவு செய்யும்,” என்று இக்கல்லூரியின் முதல்வர் A.Kகுப்தா தெரிவித்துள்ளார்.