குஜராத் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் ஆண் அவரது பெற்றோர்கள் மற்றும் மத குருக்கள் அவர்களைத் தொடர்ந்து தங்களுக்குள்ளேயே இந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்ட கணவன் மனைவி ஆகியோர் மீது மாநிலத்தின் ‘லவ் ஜிகாத் தடை சட்டத்தின்’ கீழ் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் – ஐ குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த எஃப்.ஐ.ஆர் – ஐ தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது என்பதானது தரப்பினர்களுக்குத் தேவையற்ற துன்புறுத்தலே தவிர வேறில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. லைவ் லா – வின் படி.
நீதிபதி நிர்மல் ஆர். மேத்தா இந்த எஃப்.ஐ.ஆர் – ஐ ரத்து செய்து மற்றும் அதை தொடர்ந்து எழும் அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ஒத்தி வைத்துள்ளார்.
அந்த எஃப் ஐ ஆர் இன் படி, வழக்குப் பதிவு செய்த அந்த பெண் தன்னுடைய கணவர் சமீர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் மற்றும் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்த மத குருக்கள் ஆகியோரின் மீது தன்னை கட்டாயமாகத் திருமணத்தின் மூலம் மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்துஅவரது கணவரின் குடும்பத்தினர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 498A, 376(2) (n), 377, 312, 313, 504, 506(2), 323, 419, 120B மற்றும் குஜராத் மதச் சுதந்திர (திருத்த) சட்டம் 2021-ன் பிரிவுகள் 4, 4(A), 4(2)(A), 4(2)(B), 5 மற்றும் பிரிவு 3(1)(r)(s), 3(2)(5), 3(2)(5-a), 3(1)(w)(1)(2) ஆகியவற்றின் கீழ் பதியப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு தங்களுக்குள்ளேயே அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சுமூகமான முறையில் தீர்வு கண்டதை தொடர்ந்து நீதிமன்றத்தின் இச்சமீபத்திய தீர்ப்பானது வெளியாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தில் அந்த எஃப்.ஐ.ஆர் ஐ குறித்து அப்பெண் அதில் முழுக்க முழுக்க தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக கட்டாய மதமாற்றம் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்திலுமே என்று கூறியுள்ளார்.
முக்கியமாக அப்பெண் வடோதரா பகுதியில் உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சிறு திருமண முரண்பாடு குறித்த புகாரை அளிப்பதற்காகவே சென்றுள்ளார் ஆனால் எப்படியோ அந்த காவலர்கள் தாமாகவே முன்வந்து இந்த பிரச்சனைக்கு “லவ் ஜிகாத்” கோணத்தை அளித்துள்ளனர். மேலும் அப்பன் சொல்லாத குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காவல்துறையினர் அந்த எஃப்.ஐ.ஆர்-ல் சேர்த்துள்ளனர் என்று அப்பெண் கூறியுள்ளார்.
“லவ் ஜிகாத்” எனும் இச்சொல்லாடலானது இந்து தேசியவாத குழுக்களால் முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை எப்படியாவது கொக்கி போட்டு காதல் வலையில் விழவைத்து பின்பு அவர்களைத் திருமணம் செய்வதன் மூலம் இஸ்லாமியர்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பதற்காக பயன்படுத்துகின்றன. இந்து பிரச்சாரக் குழுக்கள் இந்த மாபெரும் சதிச்செயலானது வேரூன்றிய மாபெரும் அமைப்பாக செய்யப்படுகின்றது என்று கூறி வருகின்றனர். அவர்களால் தொடர் ஆய்வுகளின் மூலமாகக் கூட இத்தகைய “லவ் ஜிகாத்” எங்கும் நடப்பதாகத் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை மேலும் ஒன்றிய அரசும் இந்த சொல்லாடலுக்கு எத்தகைய நம்பகத்தன்மை வாய்ந்த வரையறை இல்லை என்று ஒப்புக் கொண்டும் உள்ளது.