தோண்டப்படாத கிணறொன்றில்
ஆயிரம் அழுவோசை,
காதுகளை செவியிழக்கச் செய்கிறது..
மம்மட்டிகள் அறையாமலேயே
இரத்தக் கண்ணீர் விட்டு
மணல் அழுகிறது.
ஏனோ, தாகித்த நெற்பயிர்கள்
இரத்த கண்ணீரையே ருசிக்க
துவங்கிவிட்டது..
விளைச்சல் எதிலும் இரத்த வாடை;
வலியும் சகதியுமாய் இரத்த கண்ணீர்
தேங்கிக் கிடக்கையில்..
மஞ்சள் கதிரவன் அதனை தங்கமாகவும்
வெள்ளை சந்திரன் அதனை வெள்ளியாகவும்
அலங்காரப்படுத்தியது..
சில அகங்கார கண்களுக்கு!!
தோண்டப்படாத கிணற்றை கிளறிப்
பார்ப்பதற்கு ஏனிந்த தயக்கம்?
அதில் கலப்பற்ற நன்னீர் கிடைக்க கூடும்!!
அழுவோசையும் நின்றுவிடும்!!
(தடை.. என்பதை விட வேணடாம் என்பதையே
நாங்கள் எதிர்பார்க்கிறோம்)!!
Faiz_Rahmani