சமீபத்தில் செய்யப்பட்ட ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்காண பாடநூல் திருத்தம் கர்நாடகாவில் அரசியல் சர்ச்சையை உருவாகியுள்ளது. ரோகித் சக்ரதீர்த்தா தலைமையிலான 7 பேர் கொண்ட பாடநூல் திருத்தக் குழு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமூகவியல் மற்றும் கன்னட பாடப்புத்தகங்களில் திருத்தங்களையும் மற்றும் சில புதிய விஷயங்களையும் சேர்த்துள்ளது. இந்த “திருத்த நடவடிக்கைகள்” ஜனநாயக, சமத்துவ மற்றும் சமூகநீதி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதா எனும் கேள்வியை ஏற்படுத்துகிறது.
The National Coalition On The Education Emergency (NCEE – கல்வி அவசியமில்லை குறித்த தேசிய கூட்டணி) இனம் நாடு முழுவதும் உள்ள தனி நபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய அமைப்பு இந்தப் பாடத்திருத்த திட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெறக் கோரியும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சமீபத்திய திருத்தம் பிற்போக்கானதாகவும், தன்னிச்சையான, முறையிலும் ஒரு வலிமையான நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை கடைபிடிக்காமல் உருவாக்கப்பட்டுள்ளது என இந்த NCEE கையொப்பமிட்ட அறிக்கை கூறுகிறது. மேலும் இது பள்ளிக்கல்வியை “மீண்டும் தொடங்கும் புதுப்பிக்கவும்” இணைந்து வந்துள்ளது.
“இப்பாட திட்டத்தின் செயல்முறை மற்றும் இதன் பொருளானது ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியதாகவும் நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானதாகும் இருக்கிறது”.
இந்தப் பாடநூல் ஆய்வு குழுவானது அரிதான ஜனநாயகத்தையும் பெரிதான பிராமிணியத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் இது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்க்கை குறித்த பன்முகத்தன்மை மற்றும் கண்ணோட்டங்கள் அற்றதாக காணப்படுகிறது செயல்முறையானது பிராமணிய இந்துத்துவத்தின் காவி கதையாடல்களுக்கு உணவு அளிப்பதாகவே இருக்கிறது.
இந்தப் பாடப் புத்தக திருத்தமானது நம் பிரதமர் நரேந்திர மோடியின் “Exam Warriors” புத்தகத்தை மொழிபெயர்த்துள்ள இந்த ரோகித் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவை கொண்டுதான் செய்யப்பட்டுள்ளது. இக்குழுவானது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமூகவியல் பாடப்புத்தகங்களிலும் மற்றும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கன்னட பாடப் புத்தகங்களிலும் மாற்றங்களை செய்துள்ளது. மேலும் இந்த ரோஹித் சக்ரதீர்த்தா மீது 2017 இல் ஞானபீட விருது பெற்ற வேம்புவின் கர்நாடக மாநில கீதத்தின் நையாண்டி செய்யப்பட்ட பதிப்பை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தற்காக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின் தலித் எழுத்தாளர்களின் பாடங்களை நீக்கி அதற்கு பதிலாக பிராமண எழுத்தாளர்களின் பாடங்கள் திணிக்கப்பட்டுள்ளது. “இக்குழுவானது ஆதிக்க மதம் மற்றும் சாதியினரின் சித்தாந்தத்தை வலுக்கட்டாயமாக திணிக்கிறது. மேலும் பன்முகத்தன்மை மற்றும் அனைத்து அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் இல்லாதது இக்குழுவின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. பல நூற்றாண்டுகளாக சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகம் குறித்த பார்வையினை மறுப்பதானது அவர்களுக்கு எதிராக நடந்த அந்த வன்முறையை நியாயப்படுத்துவதாகவே அமைகிறது”.
இதனால் மாற்றப்பட்ட ஒரு பாடமானது சாதி அமைப்பின் அநீதிகளை பற்றி விவாதிக்கிறது. மற்றொரு பாடம் சைவம் மற்றும் இறைச்சி உணவுகளை பற்றி விவாதிக்கிறது. மூன்றாவதாக விடப்பட்ட பாடம் சமூக சீர்திருத்தவாதி பெரியார் ராமாயணம் பற்றி வழங்கிய ஒரு மாற்றுப்பார்வை குறித்ததாகும். இப்படி சாதியக் கட்டமைப்புக்கு எதிரான பாடங்கள் நீக்கப்பட்டு சாதியத்துக்கு ஆதரவான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக பசவேஸ்வரா எனும் அத்தியாயத்தில் பிராமண ஆண்களின் உபநயனம் (உபநயனம் எனும் இச் சடங்கானது பிராமணிய மரபில் குரு தன் சிஷ்யனை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியாகும்) எனும் சடங்கு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. whose primary vision was of a casteless society” என NCEE அறிக்கை சொல்கிறது.
இப்பாடத்திட்டம் திருத்தமானது ஏற்கனவே தொற்றுநோய் தாக்கங்களால் தாக்கங்களினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது ஆகவே உள்ளது. இன்னும் கற்றலுக்கு தேவையான வளங்கள் சரியாக கட்டமைக்கப்பட்ட கற்றல் வாய்ப்புகள் மற்றும் பொருட்கள் என ஏதும் இல்லாமல் இன்னும் அவர்கள் தத்தளித்துக் கொண்டு தான் உள்ளார்கள்.இத் திருத்தத்தின் விளைவாக இக்குழந்தைகளின் “பயிற்சி மற்றும் பாட புத்தகங்கள் அச்சடிப்பதில் குறைந்தது மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
“இந்த திருத்தங்களானது தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2005 (National Curriculum Framework 2005) ன் இலக்குகளை மீறுவதாக உள்ளது” பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் பிற கலாச்சாரங்களை வெளிப்படுத்துவது என்பது NCF-ன் நோக்கமான மாணவர்களின் சிந்தனையை விரிவுபடுத்துதல், மற்றவர்களிடம் மரியாதை வளர்த்தல் மற்றும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்த செய்கிறது.
Maktoob Media – இணைய தளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது
தமிழில் – ஹபிபுர் ரஹ்மான்
(சகோதரன் ஆசிரியர் குழு)