தொழுகை நேரங்களில் மசூதிகளில் கூறப்படும் தொழுகைக்கான அழைப்பு (அசான் / பாங்கு) பிற மதங்களில் உணர்வுகளை வருத்துகிறது என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கர்நாடகாவை சேர்ந்த ஆர் சந்திரசேகர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தொழுகைக்கான அழைப்பில் வரும் சொற்கள் பிற மதங்களில் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் வருத்துகிறது என்றும் இனிமேல் மசூதிகளில் இது போன்ற அழைப்பு ஒலிபெருக்கிகளில் விடுக்கப்படக் கூடாது என்றும் இவர் தரப்பு வாதத்தை முன் வைக்கிறார்.
அரசியலமைப்பின் மத சகிப்புத்தன்மைக்கு உட்பட்ட விஷயங்கள் இவை. மேலும் அரசியலமைப்புச் சட்டம் 25 26ன் கீழ் இவையெல்லாம் அவரவர் தனிப்பட்ட அடிப்படை உரிமையாகும். இது போன்றவை உங்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக நீங்கள் எண்ணினால் இதை நீங்கள் ஏன் இங்கே வாசிக்க வேண்டும் என்று கூறி தொழுகையின் அழைப்பில் உள்ள சொற்களை வாசிக்க முயன்ற ஆர் சந்திரசேகரின் வழக்கறிஞரை நீதிபதிகள் தடுத்தார்கள்.
மேலும் ஒலிபெருக்கிகள் மற்றும் இதர இசைக்கருவிகள் யாவும் அனுமதிக்கப்பட்ட டெசிபலுக்கு மேல் சப்தம் எழுப்பாமல் இருக்கவும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இதுபோன்ற ஒளியெழுப்பும் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கவும் அதிகாரிகளிடம் உறுதி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தமிழில் : ரிஃபாஸுதீன்