குஜராத்தில் மாநில கல்வித்துறையால் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் வழக்காடும் உரிமையின் கீழ் புகாரளித்தது ஜமாத் உலமா ஹிந்த். கடந்த திங்களன்று வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளிடம் உரிய விளக்கம் கேட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்கிற மாநில கல்வித் துறையின் தீர்மானத்தை எதிர்த்து ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தொடர்ந்த பொது நல வழக்கில் கடந்த திங்கட்கிழமை குஜராத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த தீர்மானத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற முஸ்லிம் அமைப்பின் கோரிக்கையை தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுத்தோஸ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்க மறுத்துள்ளது. பார் அண்ட் பெஞ்ச் – ன் படி.
இந்த தீர்மானமானது அதிகாரத்தின் வண்ணம் தீட்டக்கூடிய செயல்பாடாகவும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14, 28 மற்றும் பிற அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும் மேலும் இது நம் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கையான மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும் ஜாமியத் உலமா -இ- ஹிந்த் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம், முழுவதுமாக அரசு நிதியில் பராமரிக்கப்படும் கல்வி நிறுவனத்தில் எவ்விதமான மத போதனைகளும் வழங்கப்படக் கூடாது என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 28-னை மீறுவதாக உள்ளதாக முஸ்லிம் அமைப்பு வாதிட்டுள்ளது.
இவர்களின் மனுவில் “கீதை இந்துக்களின் புனிதநூல் எனவும் கீதையில் கூறப்பட்டுள்ள அனைத்து விழுமியங்களும் இந்து மதத்தின் கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று கூறப்பட்டுள்ளது.
இது உறுப்பு 21 மற்றும் 25 இன் கீழ் உள்ள உத்திரவாதமளிக்கப்பட்ட தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமை ஆகியவற்றை பாதிப்பதாக உள்ளதாகவும் மேலும் இப்படி ஒரு மதத்தை குறித்த கோட்பாடுகளை மட்டுமே போதிப்பது என்பது இளைஞர்களின் மனதில் மற்ற மதங்களை விட இந்த ஒரு மதம் தான் மேன்மையானது எனும் உணர்ச்சிகளை விளைவிக்கும் என்று முஸ்லிம் அமைப்பு கவலையை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து “இந்த குரைபடுத்தப்பட்ட தீர்மானமானது மதிப்பு அடிப்படையிலான (value based) கல்வியை முறையை நடைமுறைப்படுத்துவது எனும் போர்வையின் கீழ் பகுத்தறிவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எவ்வித கொள்கைகளும் இல்லாமல் இப்படி ஒரு புத்தகத்தை மதிப்பிற்கானதாக தேர்வு செய்து அதனை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று சொல்கிறது”
ஒரு மதச்சார்பற்ற அரசின் கீழ் கற்பிக்கப்படும் தார்மீக விழுமியங்கள் என்பது அரசியலமைப்பின் முகவுறையில் உள்ள சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் நீதி என்கிற அரசியலமைப்பின் மதிப்புகளை கொண்டதாகவே இருக்க வேண்டும்” என்று ஜாமியத்தே உலமா – இ – ஹிந்த் கூறியுள்ளது.
பார் அண்ட் பெஞ்ச் சொல்வதின் படி இந்த வழக்கானது வரும் ஆகஸ்ட் 18, 2022 அன்று டிவிஷன் பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது.