இந்தியாவின்கழுத்தில்அடிமைத்துவம் என்னும் சங்கிலி முருக்கப்பட்டிருந்த காலத்தில் இரும்புக் கரம் கொண்டு அச்சங்கிலியை உடைத்தெறிய வங்கத்தில் ஓர் சிங்கம் உதயமானது. 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திங்கள் ஒடிசா மாநிலம் கடாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதிக்கு 9ஆம் மகனாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.
இவரின் குடும்பம் பல தலைமுறைகளாக, படைத்தளபதிகளயாகவும் , நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றிய பாரம்பரியம் உள்ளது. நண்பர்களுடன் ஊர்சுற்றும் பருவத்தில், ஞானத்தை நோக்கி பயணித்தார், விலையாட்டை விட புத்தகங்களில் பேரார்வம் கொண்டவராக இருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் தத்துவங்களை பெரிதும் விரும்பிய சுபாஷ் தனது 16 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சன்யாசியாவதர்காக வாரணாசிசென்றார். அங்கு சுவாமி பரமானந்தர் சுபாஷின் மனதில் தேசிய ஜோதியை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்,
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற நினைத்தார் சுபாஷ்ஆனால் பிற்காலத்தில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திர் கேசிம்ம சொப்பனமாக இருந்த அந்த மாவீரனை தகுதியற்றவர் என்று கூறி வெளியேற்றியது பிரிட்டிஷ் இராணுவம்.
பள்ளிக்கல்வியை முடித்து பிரசிடன்சி கல்லூரியில் பீ.ஏ படிப்பில் இருந்தார் சுபாஷ். சி.எப். ஓட்டன் என்னும் ஓர் ஆசிரியர் எப்போதும் இந்தியாவையும் ,இந்தியர்களையும் நகைத்துக்கொண்டே இருப்பார் அதனை பலமுறை மென்மையாக கூறியும் அவர் கேட்காததால் இறுதியாக நடு வகுப்பறையில் தன் செருப்பால் அடித்து அடித்து புரியவைத்தார் சுபாஷ்.
அக்கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் வேறுகல்லூரியில் பீ.ஏபட்டம் பெற்று,லண்டன் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ்படித்து அகில இந்திய அளவில் 4ஆம் மதிப்பெண் பெற்றார் “ஜாலியன்வாலாபாக் “ படுக்கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட சுபாஷ் தன் பதவியை ராஜினாமா செய்து தாயகம் திரும்பினார். வங்கத்தில்சி.அர்தாஸ் மூலமாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு. இரவும் பகலுமாக சுதந்திரத்திற்காக உழைத்தார் சுபாஷ்,தன் லட்சியத்தை அடையகாலத்தின் கட்டாயமாகஇருந்த அனைத்தையும் செய்தார்.
வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வந்தபோது நேஷ்னல் கல்லூரியின் முதல்வராக இருந்தார் சுபாஷ். தன்மாணவர்களுடன் போராட்டத்தில் இறங்கி முழு கொல்கத்தாவையும் ஸ்தம்பிக்க வைத்தார்நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அதனால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிரித்துக்கொண்டே வெறும் 6 மாதம் தானா நான் என்ன கோழியா திருடினேன் என்று நகைத்தார். காந்தி ஜி மற்றும் நேருவின் நெருக்கத்தைப் பெற்றிருந்த சுபாஷ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில்போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். வெற்றியைத் தொடர்ந்துபாராட்டு விழா நடத்தி மாண்புமிகுதலைவர் ( நேதாஜி ) என்னும்பட்டத்தை ரவிந்தர்நாத் தாகுர் வழங்கினார்.
காந்திஜி மற்றும் நேதாஜியின் சிந்தனை பாங்கு வேறுபட்டதாக இருந்தது. காந்திஜி அகிம்சாவாதத்தை மேற்கொண்டார் ஆனால் நேதாஜி வன்முறையால்தான் வெற்றி கிடைக்கும் என்று என்னினார். வன்முறை என்பது மோசமானதுதான் ஆனால் அடிமைத்துவம் அதைவிட கேவலமானது, பிறந்தக் குழந்தைக் கூடஅழுகை என்னும் புரட்சிசெய்துதான் பால் குடிக்கிறது என்று கர்ஜித்தார். காந்திஜி இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் கருத்தை ஆதரித்த நிலையில் நேதாஜி அதனை முற்றிலுமாக எதிர்த்தார்.
சுயராஷ்ராவுக்கு எதிராக காந்திஜி பேசியது இருவர் மத்தியில் இருந்த கருத்து வேறுபாடுகள் பிளவாக மாறியது.
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜி போட்டியிட்டார். நேதாஜிக்கு எதிராக பாட்டாபி சீதாராமையாவை காந்திஜி களமிறக்கினார். அவரை தோற்கடித்து நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். பட்டாபி சீதாராமையாவின் தோல்வியை காந்திஜி தன்னுடைய தோல்வியாக கருதினார். நேதாஜிக்கு இளைஞர்களின் ஆதரவு வெகுவாக இருந்தது ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நேதாஜியின் கொள்கைகளில் ஈடுபாடில்லை. கட்சியின் தலைவராக இருந்தபோதும்தான் விரும்பியதை நேதாஜியால் செய்ய முடியவில்லை.
தன் கருத்துக்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த நேதாஜி காங்கரஸிலிருந்து வெளியேறி. ஃபார்வர்ட் பிலாக் என்னும்அமைப்பை துவங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும் தமிழக தலைவராகபசும் பொன்முத்துராமலிங்கம் அவர்களும் இருந்தனர்.
இரண்டாம் உலகப்போருக்கு இந்தியர்களை பயன் படுத்த பிரிட்டிஷ் இராணுவம் நினைத்தது. ஆனால் உலகப்போர் காலத்தை நழுவவிட்டால் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த நேதாஜி. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியர்களை ஒருங்கினைக்க தீவிரமாகபாடுபட்டார். அதன் ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ்காவல்துறை நேதாஜியை சிறையில்அடைத்து பெருமூச்சுவிட்டது. ஆனால் அன்று அவர்களுக்கு தெரியவில்லை சினம் கொண்ட சிங்கம் தன் வேட்டையை துவங்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது என்று.
தீ கிரேட் எஸ்கேப்:
1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறையிலிருந்து வெளியேற நினைத்த நேதாஜி. மியா அக்பர்பாஷா என்பவருக்கு ஓர் கடிதம் அனுப்பிவிட்டு, தொடர் உண்ணாவிருதப் போராட்டம் மேற்கொண்டார். உயிருடன் இருக்கும் நேதாஜியை விட உயிரற்ற நேதாஜிக்கு பலம் அதிகம் அவர் சிறையில் இறந்துவிட்டால் இந்தியா முழுக்க புரட்சி வெடிக்கும் என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் நேதாஜியை வீட்டுக்காவலில் வைத்தனர். திடிரென்று ஒருநாள் தான்சன்யாசம் மேற்கொள்ள விரும்புவதாகவும் முதல் 15 நாட்கள் வீட்டில் தனியறையில் மௌனவிருதம் இருந்து பிறகு பாண்டிச்சேரி மடத்திற்கு செல்ல உள்ளதாக கூறி அறைக்குள் சென்று விட்டார். யாரும் எதிர்பாராத அந்த நாளும் வந்தது. நல்லிரவு வேளையில் யாருக்கும் தெரியாமல் நேதாஜி வீட்டைவிட்டுத ப்பித்து விட்டார்.
இன்று வடமாநிலங்களில் பலர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகதாக்கப் படுகின்றனர். ஆனால் நேதாஜி தப்பித்த போது அவர் ஒரு முஸ்லீமாக ஆடை அணிந்து தன் பெயரை “ஜியாவுதீன்” என்று மாற்றிக்கொண்டு பெஷாவர் சென்றடைந்தார். நேதாஜி வருவதற்கு முன்பாக வேமியா அக்பர் பாஷா அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அங்கிருந்து ஆபாத்கான் என்பவரின் உதவியோடு காம்ரேட் பகத் ராம் தல்வார் பட்டான் என்பவரை வழிக்காட்டியாக கொண்டு. ஊமையாக நடித்து எல்லைக் கடந்து நடந்தே ஆப்கானிஸ்தானில் உள்ள காபுலை சென்றடைந்தார். அங்கிருந்து ரஷ்யா சென்று ஸ்டாலினிடம் உதவி கேட்க வேண்டும் என்பதே நேதாஜியின் என்னமாக இருந்தது ஆனால் ரஷ்யாவின் ஆஃப்கான் தூதுவர் உதவாததால் ஜெர்மனி சென்றடைந்தார்.
இந்தியதேசியஇராணுவம்:
ஜெர்மனியில் ஆமிர் ஹசன், சுவாமி , நம்பியார் ஆகியோரின் உதவியுடன் ஜெர்மனியில் இருந்த இந்திய இராணுவ கைதிகளை இந்தியதேசிய ராணுவத்தின் படை வீரர்களாக மாற்றினார். ஜப்பானும் தன்னிடம் இருந்த இந்திய இராணுவ கைதிகளை நேதாஜியிடம் ஒப்படைத்து.
ஜெர்மனியிலிருந்து ஜப்பான்வந்து பிரிட்டிஷ் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும் என்று கருதி ஹிட்லரிடம் உதவி கோரினார். அப்போது ஹிட்லர் நேதாஜியிடம் இந்தியாவில் பலதரப்பட்ட மதத்தை சார்ந்த மக்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டால் யார் தலைமை வகிப்பார் என்று கேட்டபோது இந்தியா ஜனநாயக முறையில் சுய ஆட்சிசெய்யும். பார பட்சமின்றி அனைவருக்கும் சமவுரிமை அளிக்கப்படும்எ ன்று பதிலளித்தார்.
ஹிட்லரிடம் தான் ஜப்பான் செல்ல ஓர் விமானத்தை கேட்டார் நேதாஜி. விமானத்தை விட மிக பாதுகாப்பாக ஜப்பான் வரை செல்ல நீர் மூழ்கிகப்பல் கொடுத்தார் ஹிட்லர். ஜப்பானில் ராஜ் பிஹாரி போஸ் என்பவர் தான் உருவாக்கியிருந்த இந்தியா இன்டிபெண்டன்ஸ் லீகை சிங்கப்பூர் டோக்கியோவில் அதிகாரப் பூர்வமாக ஆசாத் ஹிந்த் படையுடன் இணைத்தார். 1943ஆம் அக்டோபர் மாதம் 21ஆம்நாள் ஆசாத்ஹிந்த் சர்கார் (சுதந்திரஇந்திய அரசாங்கம்) நிறுவப்பட்டது.
“நீங்கள் இரத்தம் கொடுங்கள் நான்சு தந்திரம் தருகிறேன் என்று நேதாஜிசுபாஷ் சந்திர போஸ் வீரமுழக்கமிட்டார் பர்மா, மலாயா, மற்றும் சிங்கப்பூரில் இருந்த இந்தியகுடிகள் குறிப்பாக தமிழர்கள் நேதாஜியின் படையில் சேர்ந்தனர் பெண்களும் சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்று ஜான்சிராணி லட்சுமிபாய் பிரிகேட்டை உருவாக்கினார். அதனை லட்சுமி சுவாமிநாதன் என்று ஓர் தமிழ் பெண் தலைமைத் தாங்கினார்.
கேப்டன் ஷானவாஸ் தலைமையிலான கோரிலாப் படை முதல் தாக்குதலிலேயே இந்தியாவின் எல்லையில் தன் தடையத்தை பதித்தது. இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்த நேதாஜி, பாஹதுர் ஷா ஜப்பரின் சமாதிக்குச் சென்று அவரின் சாமாதியை பெரும் மரியாதையோடு தில்லிக்கு மாற்றுவோம் என்று உறுதிஎடுத்தார்.
அமேரிக்காவுடனான போரால் ஜப்பான் உதவி செய்ய முடியாதது நேதாஜிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. நேதாஜி நேரடியாக மக்களிடம் உதவி கேட்டார். அங்கிருந்த மக்கள் பெருவாரியாக நேதாஜிக்கு உதவி செய்தனர். சுதந்திரம் மிக அருகில் இருந்த நேரத்தில் அமேரிக்கா, ஹிரோஷிமா நாகசாகி மீது அனு குண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய தேசிய இராணுத்திற்கு பெரும் ஆபத்து இருப்பதை உணர்ந்த நேதாஜி உடனடியாக இராணுவத்தை தற்காலிகமாக கலைத்துவிட்டு தனது தலைமை பனியாளரான ஹபீபுர் ரஹமானுடன் சிங்கப்பூர் சைகோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார் அவர் பயணித்த விமானம் தாய்வானில் வெடித்து சிதறியது. ஆனால் நேதாஜி அங்கு மரணிக்கவில்லை. “கும்நாம் பாபா” என்னும் பெயரில் சன்யாசியாக வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது…
நேதாஜிக்கு அவருடைய பிறந்த நாளுக்கோ இறந்த நாளுக்கோ வாழ்துவதிலோ, அனுதாபப்படுவதிலோ எவ்வித பலனுமில்லை .மாறாக நேதாஜியின் வாழ்விலிருந்துநாம் படிப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். இராணுவம் உருவாக்க வேண்டும் என்பது நேதாஜியின் ஆசைமட்டுமல்ல அது காலத்தின் கட்டாயம் கூட. நாம் வாழும் காலத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணம் கொண்டு நாம் ஒவ்வொருவரும் எழ வேண்டும். இரவு பகல் பாராமல் கொண்ட கொள்கைக்காக பாடுபட வேண்டும்.
வீன் இன்பங்களிலும், பொருள் முதல் வாதத்திலும் மூழ்கிக் கிடக்கும் மக்களை குறிப்பாக இளைஞர்களை எழுத்து மூலமாக, பிரச்சாரம் மூலமாக, மீம்ஸ் மூலமாக, இணையம் மூலமாக, வீடியோ மூலமாக, கொள்கை வாதிகளாக உருவாக்க வேண்டும், அநீதியைக் கண்டுவெரும் “நீதிவேண்டும் நீதிவேண்டும்” என்று முழக்கத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமே நீதி செலுத்தும் நீதிபதிகளாக, நீதி அரசர்களாக உருவாக வேண்டும். இணையத்தில் ஆபாசம் இருக்கிறது என்று கூறி புலம்புவதோடு நிறுத்தாமல் ஆபாசம் நெருங்கக் கூட முடியாத இனையத்தை உருவாக்க வேண்டும்.
இன அழிப்பு துவங்கினால் பயந்து மடியாமல், துவங்கியவரை துரத்திதுரத்தி அடிக்கும் போர் குணம் நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வெளியிலுருந்து வந்த வெள்ளையர்களை வீழ்த்த ஓர் நேதாஜி இருந்தார். உள்ளிருக்கும் நயவஞ்சகர்களை வீழ்த்த நாம் ஒவ்வொருவரும் நேதாஜியாக மாற வேண்டும்!
சையத் ஷகீல் அஹ்மத் – எழுத்தாளர்