Author: வி.எஸ். முஹம்மத் அமீன்

நடப்பு இரண்டாண்டுகளுக்கான இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்! அதே சமயம் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருக்கிறீர்கள். உங்கள் பணியும் பயணமும் எப்படிச் செல்கிறது? வாழ்த்துகளுக்கு நன்றி. SIOவின் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், மாநிலத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறத்தாழ 9 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த இரண்டுமே என் மீது சுமத்தப்பட்டிருக்கும் மிகப் பெரும் பொறுப்புகள். எல்லாம் வல்ல இறைவன் இதனைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அருள்புரிய வேண்டும். தொடக்கத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்று அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதே மிக முக்கியமானதாக இருந்தது. SIOவில் இரண்டு ஆண்டுகள் பொறுப்புக் காலம். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொள்கை செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு அதனடிப்படையிலான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்விவளாகச் செயல்பாடுகளை முடுக்கிவிடுதல், கல்வி சார்ந்த பிரச்னைகளில் தொடர்ச்சியாகத் தலையிடுதல், SIOவின் குரலை பொதுமன்றங்களில் ஒலிக்கச் செய்தல், மாணவர்களை அரசியல்படுத்துதல் எனச் சில அம்சங்களில் தனிக் கவனமெடுத்து சுட்டிக்காட்டத்…

Read More

கடந்த நேர்காணலின் தொடர்ச்சி வரலாற்றை மாற்றுவதில் வகுப்பு வாதிகள் என் அவ்வளவு குறியாக உள்ளார்கள்? வரலாற்றை அழிப்பதன் வாயிலாக ஒரு சமுதாயத்தின் பெரும் தியாகத்தையும், உழைப்பையும் அழித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். வட மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களிலிருந்து மொகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆரியர்கள் வருகை முஸ்லிம்கள் படையெடுப்பு என்ற வாக்கிய அமைப்பே எவ்வளவு திட்டமிட்டு வரலாற்றைப் புரட்டுகிறார்கள் என்பதற்கான உதாரணம். இனி புராணங்களின் அடிப்படையில்தான் வரலாறு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகின்றார்கள். இன்னொரு தலைமுறையினரிடம் உண்மை வரலாற்றுக்கு பதிலாகப் பொய்யான வரலாற்றைக் கொண்டு சேர்க்க பெரும் முயற்சி செய்கின்றார்கள். அதனால்தான் பாடப்புத்தகங்களிலிருந்து திரிபு வேலையைத் தொடங்கியிருக்கின்றார்கள். இத்தனை வரலாறு எழுதியும் பாபரி மஸ்ஜித் வரலாறு குறித்து செ.திவான் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லையே! ஏ.ஜி.நூரானி, ரொமிலா தாப்பர் போன்றவர்களெல்லாம் பாபரி விவகாரம் குறித்து விரிவாக எழுதியுள்ளார்கள். ஏற்கனவே போதுமான அளவு பதிவாகியிருக்கும் வரலாறு அது என்பதால் நான் அதில் அதிகக் கவனம்…

Read More

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், மாலிக்காபூர், மருதநாயகம் கான் சாகிப், திப்பு சுல்தான் – அவதூறுகளும் பதில்களும், விடுதலைப் போரில் இந்தியர்கள், ஆழ்வாரின் வழியில் கம்பன், திருக்குறளில் எண்கள், பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி உள்ளிட்ட 150 நூல்களை எழுதியுள்ள நம் காலத்தின் மிக முக்கியமான வரலாற்றாய்வாளர் செ.திவான். வரலாற்று நூல்கள் மட்டுமின்றி, ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகள் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரும் நூலகத்தை இவர் வீட்டிலேயே வைத்துள்ளார். வரலாற்றாய்வாளர் தொ.பரமசிவம் அவர்களால் ‘வரலாற்றியல் அறிஞர்’ என்றும், தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் ‘வரலாற்றுப் பேரறிஞர்’ என்றும் புகழப்பட்ட செ.திவான் சதக்கத்துல்லா அப்பா விருது, உமறுப்புலவர் விருது, தமிழ் மாமணி விருது, பெரியார் விருது, காயிதே மில்லத் பிறை விருது. கவிக்கோ விருது, எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஏராளமான வரலாற்றை…

Read More

எழுதியவர் : V.S. முகமது அமீன், துணை ஆசிரியர் – சமரசம் மாதமிரு முறை இதழ் 1968 டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இரவு 9 மணிக்கு கீழவெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பின் சூடு 50 ஆண்டைத் தொட்டு நிற்கும் இந்த நாளிலும் நம் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கிறது. நிலவுடைமை ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக, சாதிய ஏற்றத்தாழ்வின் விளைவாக எழுந்த ஆதிக்கத் தீயின் நாக்கு 44 உயிர்களை கருக்கியது. தமிழகத்தின் 30 விழுக்காட்டு நெல் உற்பத்தியின் களமான பழைய தஞ்சைப் பகுதியின், (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின்) கீழவேளூர் வட்டத்திலுள்ள சிறு கிராமம்தான் கீழ வெண்மணி. வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்த அடித்தட்டு மக்களை நில பிரபுத்துவத்தின் பண்ணைக்கயிறு கட்டிப்போட்டிருந்தது. 5 விழுக்காட்டினரிடம் 30 விழுக்காடு நிலம் சிறைப்பட்டிருந்தது. சூரியன் உதிக்கும் முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைந்த பிறகு வேலை முடிக்க வேண்டும் என்பது குத்தகை விவசாயிகளின் தலைவிதியாக எழுதி வைத்தனர் பண்ணை…

Read More

வி.எஸ். முஹம்மத் அமீன் துணை ஆசிரியர், சமரசம் மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் ஐந்து. ஆசிரியர்கள் தினம். இந்த தினத்தில் முகநூல் உபயத்தால் ஆசிரியர் தின வாழ்த்துகள் நிரம்பி வழியக்கூடும். சிலர் தம் ஆசிரியர்களை, பள்ளிக் காலங்களை அசைபோடக்கூடும். ஆனால் இது வெறும் வாழ்த்துகளுக்கான தினம் அல்ல. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரின் பிறந்த தினம் ஆசிரியர் தினமானதன் வரலாறு முக்கியம். ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என்பதையும் தாண்டி ஆசிரியர்களே பாடமாக வேண்டும் என்ற பாடம்தான் இந்த நாளின் செய்தி. அந்த வகையில் ஆசிரியர் தினச் சிந்தனைகளாக எல்லாருக்குமான சேதிகள் சில…! 1. கல்வியின் நோக்கம் போதியுங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக்கூடம். எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் போதிப்பவர் ஆசிரியர். ஆனால் ஏன் கற்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடையை யாரும் எழுப்புவதில்லை. நோக்கங்களை நாம் கற்றுத்தருவதில்லை. ‘ஏன் படிக்கணும்?’உங்கள் மாணவர்களிடம் கேட்டுப்பாருங்களேன். ‘நல்ல படிக்கணும்.’,படிச்சு..? ‘நல்ல…

Read More