“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் மிகப் பரவலாகக் காண முடிகிறது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் இன்றைக்கு விஸ்வரூபமெடுத்திருக்கின்றன. பின்வரும் விஷயங்களைச் சுற்றியே நவீன, மதச்சார்பற்ற மேலை சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை மேற்குலகத்தைத் தாண்டியும், முஸ்லிம் சமூகங்களிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன: புகைப்படத்துக்குக் கவர்ச்சியூட்டும் ஃபில்டர்களைப் பயன்படுத்துதல் சமூக வலைத்தளங்கள் (இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் முதலியன) ஃபேஷன் துறையின் ட்ரண்டின் பின்னால் செல்லுதல் வாயைக் கோணிக்கொண்டு செல்ஃபி எடுத்தல் மேக்அப் கலாச்சாரத்தை சுவீகரித்தல் ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக நிர்வாணத்தை விற்றல் ஆபாசப் படங்கள் சர்வ சாதாரணமாகக் கிடைத்தல் தற்காலத்தில் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் மக்கள் ஆட்டு மந்தையைப் போல நிர்வாணம், விபச்சாரம் ஆகிய ஒழுக்கக்கேட்டின் படுகுழியின் ஆழத்தில் மூழ்குவதைப் பார்க்க முடிகிறது. இஸ்லாம் கற்பிப்பது…