நடிகர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு, மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய திரைப்பட விழாவை ரத்து செய்வதாக இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) அறிவித்துள்ளது. முன்னர், இந்த விழாவானது இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகத்தில் (NMIC) ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா பாலஸ்தீன ஒற்றுமை மன்றம் இந்த புறக்கணிப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது. நடிகர்கள் நஸீருதீன் ஷா, ரத்னா பதக், சுதந்திரப் போராட்ட வீரர் ஜி.ஜி. பரீக், ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் துஷார் காந்தி, இந்திய பாலஸ்தீன ஒற்றுமை மன்றத்தின் ஃபெரோஸ் மிதிபோர்வாலா ஆகியோர் இப்பிரச்சாரத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில், “NFDCஇன் இந்தத் திரையிடலானது, உலகம் முழுவதும் பார்க்க…
Author: முகமது தௌபிக்
தென்னிந்திய சினிமாவானது வணிகத்தை மையப்படுத்திய ‘ Pan India ‘ சினிமா எனும் பிரம்மாண்டமான, இயல்பிற்கும் மண்ணிற்கும் சம்பந்தமில்லாத, வரலாற்று திரிபுகளையும், RSS-ன் அஜன்டாக்களையும் உள்ளடக்கிய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் மட்டுமே மக்களுக்கானதாகவும், மண்ணிற்கானதாகவும் வெளிவருகின்றன. அப்படி தற்பொழுது வந்திருக்கும் திரைப்படம்தான் “ஜன கண மண”. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்று தற்போது OTT தளத்தில் வெளியாகி அதிக கவனத்தை பெற்று பேசுபொருளாகி உள்ளது இத்திரைப்படம். திரைப்படம் குறித்தும் அது கூறும் அரசியல் குறித்தும் பார்ப்போம். கர்நாடகாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) வாகன விபத்தில் கொல்லப்படுகிறார். கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர். அப்போராட்டத்தில் காவல்துறையால் வன்முறை உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் இக்கொலை வழக்கை விசாரிக்க ஏசிபி சஜ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) விசாரனை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். …