இன்றைய காலத்தில் இணையம் என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அதற்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை ஏதும் கிடையாது எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இது நமது உலகத்தையே ஒரு மிகச்சிறிய கிராமமாக மாற்றியுள்ளது என்றும் சொல்வார்கள். இணையத்தில் நன்மைகள் எந்த அளவு இருக்கின்றதோ அதற்குச் சற்றும் குறையாமல் தீமைகளும் உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இணையதளத்தின் ஆரம்பம் தொட்டே ஆபாச படத்துறை என்பது பெரும் லாபம் ஈட்டப்படும் தொழிலாகப் பார்க்கப்பட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலமும் தனி நபர்களின் மூலமும் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆரம்பக் காலத்திலிருந்த இணையம் தற்போது படிப்படியாக வளர்ந்து இன்று எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அதேபோலவே இந்த ஆபாச படத்துறை என்பதும் மிகப்பெரும் அளவில் வளர்ந்து இன்று உலகையே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினை தற்போது பேசப்படுவதற்கான அவசியம் முன்பெல்லாம் இந்த ஆபாச படங்கள் பார்ப்பது,…
Author: முஹம்மத் தமீஸ் ஸலாமி
இந்த பூமிப் பந்தில் முதன்முறையாக தானியமும் கோதுமையும் பயிரிடப்பட்ட நிலம் பலஸ்தீன். ஆம் அது ஒரு விவசாய பூமி. மேலும் மனித நாகரிகங்களின் தொட்டில். பல பண்பாடுகளின் பயில் நிலம். ஆனால் தற்போது இந்த பூமியில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் பூமியாக மாற்றப்பட்டு விட்டது. தொடர்ந்து 75 ஆண்டுகளாக சியோனிஸ யூத கொடுங்கரங்கள் தாக்கி வருகிறார்கள். உலகில் பிரச்னைக்குரிய பிரதேசங்கள் என்றொரு பட்டியலில் மத்தியக் கிழக்கு முதலிடத்தில் நிச்சயம் வரும். இன்றைய நாள் வரை இந்தப் பிரதேசத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 1.ஏன் எப்போதும் அங்கே போர்கள் நடைபெற்று வருகின்றன ?2.ஏன் இப்போதும் அங்கே எழுச்சிகளும் கழகங்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் விடாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?3.ஆண்டாண்டு காலமாக கழித்து ஏன் அங்கே அமைதி திரும்ப மறுக்கிறது?குறிப்பாக இஸ்ரேலுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? பலஸ்தீனை பொறுத்தவரை அது வெறுமனே எல்லை பிரச்சனையோ, இனவேறி பிரச்சனையோ அல்ல.ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தினந்தினம்…