கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் வெறும் ஒன்பது முஸ்லிம் பிரதிநிதிகள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2023 தேர்தலில், கூடுதலாக 2 முஸ்லிம்கள் வெற்றி பெற்று, மொத்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியுள்ளனர், இருப்பினும் இது 1978 இல் இருந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகபட்ச முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை விடக் இது குறைவான எண்ணிக்கையே! இதில் காங்கிரஸ் 15 முஸ்லிம் வேட்பாளர்களையும், ஜனதா தளம் 21 முஸ்லிம் வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 15 முஸ்லிம் வேட்பாளர்களையும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) 11 முஸ்லிம் வேட்பாளர்களையும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தி இருந்தது. வெற்றியாளர்கள்: குல்பர்கா உத்தர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சந்திரகாந்த்…
Author: சையத் ஷகீல் அஹ்மத்
தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை அதா ஷர்மா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுதிப்தோ சென் இதை இயக்கியுள்ளார். இப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதற்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்துள்ளது. எப்படி ஒரு சாமானிய இந்துப் பெண் சக மாணவியான தீவிரவாத முஸ்லிம் பெண்ணால் மதம் மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணையக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று டீஸர் காட்டியுள்ளது. இப்படியாக 32,000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாலியல் அடிமைகளாக, தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாகவும் டீஸர் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சியும் உண்மைச் சம்பவம் என்று முன்வைக்கப்படுகிறது. கடந்த மார்ச் 2022ல் படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் (ANI) செய்தி தளத்திற்கு அளித்த பேட்டி The Print இணையதளத்தில் வெளியானது. இதில் இயக்குநர் தன்னுடைய விசாரணையின்படி…
சமீபத்தில் ஒரு ஓடிடி தளத்தில் புர்கா எனும் சர்ச்சைக்குரிய திரைப்படம் வெளியாகியிருந்தது. படத்தின் கதைக்களமும் காட்சியமைப்பும் இஸ்லாத்தின் மீது வெறுப்பை விதைக்கும் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. பெண்ணியவாதத்தின் பெயரால் இந்துத்துவ அரசியலுக்கு வலுச்சேர்க்கும் திரைப்படம் அது. திருமணமாகி வெறும் ஒரே வாரத்தில் தன் கணவனை இழந்து இத்தாவிலிருக்கும் 21 வயதேயான நஜ்மா ( மிர்னா) சில சந்தர்ப்ப சூழ்நிலையால் சூரியா( கலையரசனை) எனும் கதாபாத்திரத்திற்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார், அதன் பிறகு நடைபெறும் இவர்களுக்கிடையேயான உரையாடல் தான் இம்முழுப்படமும். புர்கா படத்தை காட்சிவாரியாக விவரிக்கும் அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்துக்கு அப்பாலான உறவை புரட்சிகரமாகச் சித்தரிக்க முயலும் லஷ்மி எனும் குறும்படத்தை இயக்கிய சர்ஜூன் என்பவர்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ‘இத்தா’ வழக்கத்தை பிரச்னையாக்கியிருக்கிறார். இத்தா என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு – மணவிலக்கு நடந்தால் மூன்று மாத காலம் உறவுகொள்ளாமல் ஒரே…
1989 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காஷ்மீர் கலவரங்களின் வடு சற்று ஆறிக் கொண்டிருக்கும் இந்நிலையில் அதில் கைவைத்து, சீழ் பிடிக்கச் செய்து முழு உடலிலும்புற்றாகப் பரவ செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தில் பாஜகவின் பெரும் ஆதரவோடு இயக்குனர் விவேக் அக்னியொத்ரி இயக்கத்தில் வெளிவந்தப் திரைப்படம் “தீகாஷ்மீர் ஃபைல்ஸ்” திரையரங்குகளில் வெளியாகி சமூகத்தில் பெரும் சலசலப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது, கலவரத்தின் ஒருபக்க நியாயத்தையும், வலியையும் மட்டும் காட்சிப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் வன்மத்தையும் தூண்டும் எண்ணத்தில் இப்படம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது, இதில் மிகவும் கவலையளிப்பதாக இருப்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருந்துக்கொண்டு மதக் கலவரங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தை பிரதமர் மோடி அவர்கள் ஆதரிப்பது தான் காஷ்மீர் பண்டிதர்களின் இறப்பையும், இழப்பையும் நாம் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை, மனிதன் எந்த இனத்தை, மதத்தை, சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் அநியாயமாக எவனால் துன்புறுத்தப்பட்டாலும் அது தவறான ஒன்றுதான் பாதிக்கப்பட்ட மக்களின்…
இந்தியாவின்கழுத்தில்அடிமைத்துவம் என்னும் சங்கிலி முருக்கப்பட்டிருந்த காலத்தில் இரும்புக் கரம் கொண்டு அச்சங்கிலியை உடைத்தெறிய வங்கத்தில் ஓர் சிங்கம் உதயமானது. 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திங்கள் ஒடிசா மாநிலம் கடாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதிக்கு 9ஆம் மகனாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். இவரின் குடும்பம் பல தலைமுறைகளாக, படைத்தளபதிகளயாகவும் , நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றிய பாரம்பரியம் உள்ளது. நண்பர்களுடன் ஊர்சுற்றும் பருவத்தில், ஞானத்தை நோக்கி பயணித்தார், விலையாட்டை விட புத்தகங்களில் பேரார்வம் கொண்டவராக இருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் தத்துவங்களை பெரிதும் விரும்பிய சுபாஷ் தனது 16 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சன்யாசியாவதர்காக வாரணாசிசென்றார். அங்கு சுவாமி பரமானந்தர் சுபாஷின் மனதில் தேசிய ஜோதியை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற நினைத்தார்…
ஆதிக்க சக்திகளும், உயர்சமூக்ததினரும் இந்தியாவை தன் பிடியில் அழுத்தி, வர்கவேருபாடுகளை உச்சத்தில் வைத்திருந்த காலத்தில்! இஸ்லாமியர்கள் நவீன கல்வியை விட்டு வெகு தூரம் இருந்தக் காலத்தில்! ஃபாத்திமா ஷேக் எனும் ஓர் சூரியன் உதித்தது, அந்த ஒளியில் மதம், இனம், சமூகம் கடந்து பல பெண்களின் வாழ்வு பிரகாசித்தது. நவீன இந்தியாவின் இரண்டாம் பெண் ஆசிரியரும், நவீன இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியருமான ஃபாத்திமா ஷேக் 1831 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திங்கள் மகாராஷ்டிராவில் உள்ள பூனே வில் பிறந்தார். இவர் வளர்ந்து வந்த அதேக் காலக்கட்டத்தில் மற்றொரு புரட்சியாளரும் வளர்ந்து வந்தார் அவர்தான் சாவித்திரி பாய் பூலே. இவர்கள் இருவரின் வாழ்வும், பணிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இவர்கள் இருவரும் அமெரிக்க மிஷனரியான சிந்தியா ஃபாரரால் நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல் முறையாக சந்தித்தனர் அங்கிருந்தே இவர்களின் நட்பு துவங்கியது. இந்திய வரலாற்றின் மிக…