Author: சுகைப் ஜிப்ரான்

“பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மன, உடல் ரீதியாக தொந்தரவு தந்தால் மாணவர்களின் மாற்று சான்றிதழில் அவர்கள் செய்த குற்றம் எழுதப்பட்டு பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” என்கிற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சட்டமன்ற பேச்சு மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. ஒரு சில மாணவர்களின் தற்போதைய ஒழுங்கற்ற செயல்களுக்கான காரணத்தை ஆராயாமல், அரசு முன்னெடுக்கும் இந்த கடும்போக்குத்தனத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ்நாடுவன்மையாக கண்டிப்பதாக SIO தமிழக கல்விச்செயலாளர் சகோ.சுஹைப் ஜிப்ரான் அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர் பருவம் என்பதே கற்று, திருத்தம் பெறும் வயதுதான். அவர்களை அறிவிலும் செயலிலும் ஒழுங்குள்ளவர்களாக மாற்றத்தான் எல்லா பெற்றோர்களும் பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை செலுத்துகிறார்கள். சிறிதோ, பெரிதோ தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தல் என்கிற மனப்பான்மையை கடந்து, போலீஸ்காரர்களை போல உடனேயே கடுமையாக தண்டித்துவிட வேண்டும் என்கிற அரசின் பேச்சு முறையானதாக இல்லை. நாம் கடந்து வந்த பேரிடர் காலநிலை அரசாங்கம், தொழில் நிறுவனம்,…

Read More