Author: ஷைமா எஸ்

புகழ்பெற்ற அரசியலமைப்பு நிபுணர், வழக்கறிஞர் மற்றும் அரசியல் ஆய்வாளர் அப்துல் கஃபூர் நூரானி 29 ஆகஸ்ட் 2024 அன்று மதியம் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இஷா தொழுகைக்குப் பிறகு அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், உச்ச நீதிமன்றத்தின் பாபர் மசூதி தீர்ப்பு (2019) குறித்த புத்தக வேலைகளில் அயராது உழைத்து வந்ததாக அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, Frontline மற்றும் Dawn ஆகிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தவர், பிறகு நிலுவையில் உள்ள தனது படைப்புகளில் ஆற்றலைக் குவிக்க முடிவு செய்தார். அவரது இழப்பிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். “அரசியலமைப்பு கேள்விகள்” எனும் கட்டுரைகள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நூரானி அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்தன. Frontline இதழின் முன்னாள் ஆசிரியர்…

Read More