2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் இஸ்ரேலின் மீது நடத்திய “தூஃபாநுல் அக்ஸா” என்ற பெயரிட்ட தாக்குதல் ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான நிமிடங்களில் ஒன்றாகும். அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மனிதர்களை காஸாவிலும் மேற்கு கரையிலும் இப்போது லெபனானிலும் பாசிச இஸ்ரேல் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. போரில் அதிகமான ஆட்களையும் பொருளாதாரத்தையும் யார் இழக்கிறார்களோ அவர்கள்தான் தோல்வியடைந்தவர்கள் என பொதுவாக கருதப்படுவார்கள். அந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஃபலஸ்தீன் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது என வாதிடலாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாலஸ்தீனில் 41,000க்கும் அதிகமான மனிதர்கள் உயிர்த் தியாகிகளாகி உள்ளனர். ஆனால், புதிய காலகட்டத்தின் யுத்தங்களை, குறிப்பாக சுதந்திரப் போராட்டங்களின் வெற்றி தோல்விகளை அவ்வளவு எளிதாக எடை போட்டு கடந்து முடியாது. இஸ்ரேலின் இனப்படுகொலை தொடரும். ஆனால்… இஸ்ரேல் ஃபலஸ்தீனத்திலும் லெபனானிலும் சாதாரண மனிதர்களின் மீது ஒருதலைபட்சமாக நடத்தி வரும் இனப்படுகொலை திட்டம் இனியும் தொடர்கதையாகவே இருக்கும்.…