Author: ஷாரிக் நூ

கலை மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நடனம், நடிப்பு(நாடகம்), பாடல், கதை சொல்லுதல், ஓவியம், கட்டிட வடிவமைப்பு ஆகியவை கலைகளுக்குள் அடங்கும். குறிப்பாக நடனம், நடிப்பு (நாடகம்), பாடல், கதை சொல்லுதல் மக்களிடையே நேரடி தாக்கத்தைச் செலுத்துகிறது. அனைத்து நாகரீகங்களும் அரசின் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க, மதப் பிரச்சாரங்கள் செய்ய, ஒழுக்க விழுமியங்களைப் போதிக்கக் கலையை ஒரு மிகச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்லாமிய நாகரீகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முஸ்லிம்களும் கலையைப் பிற நாகரீகங்களைப் போலப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் அவற்றை ஊக்குவித்திருக்கிறார்கள். நபிகள்(ஸல்) அவர்கள் காலத்தில் கவிஞர்கள் இஸ்லாத்தின் மீது கவிதை மூலம் வைத்த விமர்சனங்களுக்குக் கவிதையிலே விமர்சனம் வைக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்று உள்ள முஸ்லிம் சமூகம் கலையை வெறுப்போடு பார்க்கிறது. குறிப்பாகக் கலைகளின் கலவையாக உள்ள சினிமாவை. இதற்கு…

Read More

இந்தப் பதிவை எழுதும் அதே வேலையில், மனிதக் குல வரலாற்றில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்துகொண்டு இருக்கிறது, ஆம்.. இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது மிகப்பெறும் இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. அங்கு இதுவரை அக்டோபர் 7இல் இருந்து இதுவரை குறைந்தது 21,672 பேர் கொல்லப்பட்டனர், 56,165 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்களும் ஆவர். மேலும் இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்திய குண்டு வீச்சுகளில் 70% காஸாவின் ஃபலஸ்தீனர்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். இத்தகைய பாதிக்கப்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனர்களுக்கு உதவ வேண்டும் என நம்மில் பலரும் எண்ணுகின்றனர். இத்தகைய சூழலில் இஸ்ரேலிய அரசின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்த BDS எனும் இயக்கம் உதவும் வகையில் உள்ளது. அதைக்குறித்து இக்கட்டுரையில் காண்போம். BDS என்பது புறக்கணிப்பு (Boycott), விலக்கல் (Divestment), பொருளாதாரத் தடைகளை (Sanctions) என்பதைக் குறிக்கும். இந்த இயக்கத்தில் பங்கெடுத்து சாதாரண மனிதர்களாகிய…

Read More