ஃபலஸ்தீனர்கள் சியொனிச இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பிற்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிராக நடத்திவரும் அறப்போராட்டம் நம்மை என்றுமே வியக்கவைத்துள்ளது. இத்தனை நாள் நாம் பார்த்த இஸ்ரேல் – ஃபலஸ்தீன் யுத்த வரலாறு என்பது இஸ்ரேலின் அத்துமீறல், தொடர்ந்து வரும் விமானப்படை தாக்குதல், ஃபலஸ்தீனர்களின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படுதல், பின் ஹமாஸ் இயக்கத்தின் ராக்கெட் பதிலடிகள், ஒரு சார்பாக ஏற்படும் உயிர் இழப்புகள், தொடர்ந்து சண்டை நிறுத்த உடன்படிக்கை என்ற தொடர்படியாக நடந்த வந்தது. ஆனால் கடந்த அக்டோபர் 7 அன்று நடந்த ஹமாஸுடைய தாக்குதல் முன்னெப்போதையும் விட அதனுடைய வீச்சிலும், அது ஏற்படுத்திய தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டது. இப்போது நடந்துவரும் இந்த காஸா யுத்தத்தில் முதல் தாக்குதல் ஹமாசிடமிருந்து வந்தது. தூஃபான் அல் அக்ஸா (அல் அக்ஸா பெரு வெள்ளம்) என்று பெயரிடப்பட்ட ஹமாஸின் இந்த ஆபரேஷன் சியோனிச ஆக்கிரமிப்பு அரசையும் அதன் மேற்குலக ஆதரவாளர்களையும் வலுவாக உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இது சரியான தருணமா? இது…