Author: ஷான் நவாஸ்

2022 ஆண்டு அக்டோபர் 11 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டியர்பான் (Dear Born) நகரத்தில் வலதுசாரி அமெரிக்கர்கள் முஸ்லிம்களோடு இணைந்து போராடிய அற்புதம் நிகழ்ந்தது. பொதுவாக, அவர்கள் முஸ்லிம்களைத் தங்களின் எதிரிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதுபவர்கள். அப்படி இருந்தும் முஸ்லிம்களுடன் அவர்கள் கைகோர்க்கும் அளவுக்கு அங்கே என்ன ஆபத்து வந்துவிட்டது? எதற்காக, யாரை எதிர்ப்பதற்காக அப்போராட்டம்? மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாக இருப்பது குழந்தைப் பருவத்தில் மட்டுமே. அதற்குக் காரணம், அப்பருவத்தின் அப்பாவித்தனம். குழந்தைகளுக்கு விளையாட வேண்டும், துள்ளிக் குதிக்க வேண்டும், இனிப்புகளை உண்ண வேண்டும். அவைதாம் அவர்களை மகிழ்விக்கும் செயல்கள். அவர்கள் வளரும்போது அவர்களின் உடல், மன தேவைகளும் வளர்ந்துவிடுகின்றன. பருவ வயதை அடையும்வரை குழந்தைகளுக்கு காதல், காமம் தேவையில்லை. பிறப்புறுப்புகளின் உடலுறவு செயல்பாடுகளை அறிய வேண்டிய அவசியமில்லை. அதை அறியும்வரை மட்டுமே குழந்தைத்தன்மை அவர்களோடு பயணிக்கும். இப்படி இருக்கையில், யாரேனும் அப்பிஞ்சுகளிடம் பிறப்புறுப்புகளைப் பற்றியோ, உடலுறவைப் பற்றியோ பேசினால் அவர்களை…

Read More