மாணவர்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்த விஷயங்களைப் பல்வேறு கட்டங்களில் நாம் விவாதத்திற்கு உட்படுத்துவது உண்டு. வளரும் தலைமுறை அறிவுப் பெருக்கத்தில் சிந்தனை ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எந்தவித சறுக்கலுக்கும் ஆட்பட்டுவிடக் கூடாது என்பதால் நாம் இப்படி சிந்திக்கிறோம். முந்தைய காலங்களைவிட தற்காலத்தில் இவை இன்னும் கூடுதலாக, அழுத்தமாக பேசப்படுவதன் காரணம், விரைவாக செயலாற்ற வைக்கும் தகவல் பரிமாற்றம், நவீன யுகம் சார்ந்த அச்சம், சமூகத்தில் அதிகரித்துள்ள விழிப்புநிலை என பலவாறாக இருக்கின்றன. இவை அனைத்தையும்விட தன் பிள்ளையின் மீது அதீத அன்பு கொண்டுள்ள பெற்றோரின் அக்கறையுணர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். பொதுவாக பிறர் மீது வைக்கும் அன்பு அக்கறை, பொறுப்பு என்கிற இருமுனை விளைவுகளை ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். அன்பு வைத்தல் என்பது பிறரின் மீதான இரக்கம், கருணை, காதல், ஈர்ப்பு என்பதோடு பொறுப்புகளையும் தலையில் ஏற்றுவது என்றுகூட புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டுக்காக, இவ்வளவு அன்பாக பார்த்துக்கொண்டும்கூட…
Author: சா. முஹம்மது சர்ஜுன்
மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே தன் சகாக்களுக்கும், தன் அரசுக்கும் – தனது சித்தாந்த கட்டமைப்புக்கு எதிராக பேசுபவர்களைத் தேச துரோகிகள், வந்தேறிகள், நக்சல்கள், இந்தியர்களே இல்லை என்கிற அளவுக்கு அவர்கள் மீது வெறுப்புக் கருத்துருவாக்கத்தை முன்மொழிந்து வருகிறது. இப்படியிருக்க, தான் பிறந்த, தனக்கு உணவூட்டித் தாங்கும் இந்திய மண்ணின் மீது எந்த அக்கறையுமில்லாமல், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் வண்ணம் மோடி அரசால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், அவர் இந்தியாவின் மகன் தானா என்கிற மிகப்பெரிய சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. நடிகை வனிதாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது, என்று கவலை கொள்ளும் நாம், ஏன்? நம் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து சிந்திப்பதில்லை. இயற்கையோடு ஒன்றி வாழக்கூடிய சூழலில், இயற்கை என்னும் மாபெரும் இறையருளையே அழித்துப் பொருளீட்ட நினைக்கும் அரக்கர்களுக்கு எதிராகப் பேச நம்மை தடுப்பது எது? கடந்த சில தினங்களுக்கு முன் அவசர அவசரமாக இந்திய அரசால்…
இஸ்லாம் கல்வியறிவு பெறுவதை புறந்தள்ளி, வெறும் ஆன்மீக ரீதியாக மனிதனை பக்தி மயமாக வைத்திக்க ஆசைப்படும் மார்க்கம் அல்ல. மாறாக, கல்வியின் முக்கியத்துவத்தைக் குறித்து ஆன்மிகம் மூலமாக, தன் நம்பிக்கையாளர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறது. நபியே நீர் ஓதுவீராக! (படிப்பீராக) என்ற முதல் குர்ஆனிய வார்த்தைகளும், “கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கட்டாயக் கடமை’ என்கிற நபிமொழி வாக்கியங்களும், இஸ்லாம் அறிவின் தேடலுக்கு எவ்வகையான முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பதைக் குறித்து நமக்கு விளக்குகிறது. மேலும் பள்ளிவாயில்கள் (இறையில்லங்கள்) அறிவின் சதுக்கங்கலாகவும், கற்பிக்கக்கூடியத் தளமாகவும் செயல்பட்டதை வரலாற்றுப் பதிவுகள் மூலம் சுட்டிக் கட்டுகிறது. 8 முதல் 12ம் வரையிலான ஐந்து நூற்றாண்டுகள், முஸ்லிம்கள் மத்தியில் கல்வியறிவில் வளர்ச்சி, தொட்டதில் எல்லாம் சாதனைகள், என இஸ்லாமிய மறுமலர்ச்சி காலமாக போற்றப்பட்டன. கற்றல், கற்பித்தல், தகவல் நுட்பம், கல்வியியலில் வளர்ச்சி என, இஸ்லாம் தனக்கே உரிய ஒழுங்கியல் சிந்தனைகளால் உலகை தன் வசப்படுத்திகொண்டது.…
எழுதியவர் : அபய் குமார், வரலாற்றுத் துறை ஆராய்ச்சி மாணவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்(JNU), புதுடில்லி இன்னும் சில வாரங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வு மையத்தில் எனது முனைவர் படிப்பிற்கான ஆய்வறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. கடைசி தேதி நெருங்கும் சூழலில் அதற்காக எனது முழு முயற்சியினையும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கடித்த்தை எழுதுவதன் மூலம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள மிகத் தீவிரமான ப்ரச்னையினை பல்கலைக்கழகத்தின் வருகையாளர் என்ற அடிப்படையில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றேன். அந்த ப்ரசனையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோருகின்றேன். கடந்த மே 18, 2018 அன்று நடந்த பல்கலைக்கழக குழு கூட்டத்தில் “இஸ்லாமிய தீவிரவாதம்” என்கின்ற பாடப் பிரிவை துவங்க முடிவானதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. பல்கலைக்கழக குழு இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பாடப் பிரிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பாடம் தேசிய பாதுகாப்பு…
SIOவின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடத்தைக் கடந்துள்ள நீங்கள், கடந்த வருடத்தின் நடவடிக்கைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கே உரிமையில்லாதது போல் உருவாகியுள்ள ஒரு இக்கட்டான சூழலில்தான் SIOவின் அகில இந்திய தலைவர் என்கின்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆள்பலமும், பொருள்பலமும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சமூகப்பணியை முன்னெடுத்துச் செல்ல, இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள SIO ஊழியர்கள் கல்வி ரீதியாக சிறந்து விளங்குவது மட்டுமல்லாது, நாட்டின் நலன் கருதி சமூக அக்கறையுடனும், கல்வி வளாகங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் பாசிச-எதிர்ப்பு இயக்கங்கள் அதிக அளவில் வெற்றி வாகைசூடினர். இவ்வெற்றி ஒரு சிறந்த வருங்காலத்தை அமைக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? JNU (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்), HCU (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம்),…
இக்கால சூழலில் பெண்ணியம் பேசக்கூடியவர்களை ஏதோ வேற்றுகிரகத்தவர் போல தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆணாதிக்க சமூகத்தை விரட்டவந்த இந்த பெண்ணியக்குழுக்கள் தற்போது பெண்ணாதிக்க சமூகமாக மாறுவது போலவும்,ஆண்களையும் சமூக, அதிகார, பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளுவதே பெண்ணிய குழுக்களின் நோக்கம் போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மாற்றம் என்ற பெயரில் பெண்களை சமூக சீர்கேட்டில் தள்ளிவிடுவதாகவும் கருதுகின்றனர். உலக அளவில் பெரிதளவாக கொண்டாடப்பட இருக்கும் மார்ச்8, உலக பெண்கள் தினத்தைக் முன்னிட்டு சில விசயங்களை நான் பகிர விரும்புகிறேன். பெண்ணியத்தின் நவீன உருவம் மற்றும் அவைகளின் படிப்படியான வளர்ச்சி குறித்து நாம்அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. ஐரோப்பிய நாட்டு வழக்கத்தின்படி பெண்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒரு ஆணின் அனுமதியுடனே பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஒருபோதும் ஆண்களுக்கு நிகரானவராக கருதப்படமாட்டார்கள்..பெண்களை சமயலறைக்கு மட்டும் சொந்தக்காரர்களாக மாற்றி, அவர்களின் தனிநபர் உரிமைகளில் கூட ஆண்களின்…
என் குடும்பம் எனக்கு நடந்த அவலத்திற்காக யாரை குற்றம் பிடிக்கும். நீங்கள் தான் குற்ற்றவாளி; நீங்கள் தான் நீதியும்.” கடந்த சில நாட்களுக்கு முன்பு மது என்கிற ஆதிவாசி ஒருவர் கொல்லப்பட்ட செய்தி சமூக வலைதளங்களிலும், செய்தி தொடர்களிலும் உலா வந்த வண்ணம் இருந்தது. கேரளத்தை சார்ந்த அந்த நபர் உணவுப்பொருட்களையும், சில மென்பொருள் சாதனங்களையும் திருடியதாக கூறி கண்மூடித்தனமாக தாக்கியதில், அவரை காவல்நிலையத்தில் ஒப்படைக்கும் போது அவர் இறந்து போனார். காணக்கிடைத்த சில புகைப்படங்களிலும், காணொளி காட்சிகளிலும் உங்களையும் என்னையும் போன்ற சில நபர்கள் வெளிப்படையாக மது கொல்லப்படுவதற்கு முன்பாக மலையாளத்தில் அவரிடம் கேளிக்கை கேள்வி கேட்பதும், சிரித்தபடி சுயமி எடுத்து வெளியிடுவதுமாக பல செய்திகள் செவியில் ஒலித்தது. மது கேரளத்தை சார்ந்த ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். ஆதிவாசி என்பது தெற்கு ஆசிய உள்நாட்டு மக்களை குறிக்கும் சொல். இவர்களுக்கு மலைவாழ் மக்கள் என்றும் அழைப்பதுண்டு. அவரை திருடர் என்று…