Author: சல்மான் ஆசிப் (சட்டக் கல்லூரி மாணவர்)

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு சூழ்ந்த தற்கால அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளிடமும், பொதுவான கட்சிகள், அமைப்புகளிடமும் சில குரல்கள் எழுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதை ஆளும் பாஜக அரசு அழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூக்குரலிடுகின்றனர். ஆனால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அது உருவான வரலாற்றிலும் எவ்வாறு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளது வாஞ்சிநாதன் சித்ரா எழுதிய ‘இந்திய மக்களாகிய நாம்’ புத்தகம். 1905 வங்காளப் பிரிவினை, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, பசுப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் வேட்டையாடப்பட்ட முஸ்லிம்கள், இந்திய தேசியம் எப்படி இந்து தேசியமாக கட்டமைக்கப்பட்டது போன்ற பல முக்கியமான அம்சங்களை இந்நூல் விவாதிக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு ஏன் வலிமை குன்றிய மாநில அரசுகளையும், வலிமைமிக்க மத்திய அரசுகளையும் உருவாக்கியது? மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் போன்ற குரல்கள் மழுங்கடிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன? இதற்கும் இந்தியா…

Read More