பழத்தில் பட்டாசை வைத்து யானையையும் கருவில் இருக்கும் குட்டியையும் கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த மக்கள் கொன்று விட்டனர் என்கிற செய்தி ஊடகங்களில் அனைவரின் இதயங்களையும் அடைந்திருக்கும். பாலக்காடு ஜில்லாவை மலப்புரம் என்று தவறுதலாக ஊடகங்கள் பதிந்தாலும் நிலைமையின் உண்மை தன்மையை ஆராய்வது நம் கடைமை அல்லவா. யானைகள் ஊருக்குள் வருவது இன்று நேற்று துவங்கியது அல்ல. இதனை மனித-விலங்கு மோதல் (Human Animal Conflict) என்று அறிவியலில் சொல்லப்படும்.அதாவது மனிதனுடைய செயல் பாடுகளின் (Anthropogenic activities) மூலம் ஏற்படுகின்ற விளைவுகள் பெரும்பாலும் வன உயிரினங்களை வருத்துகிறது. பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு செல்லும் நாம் வழியில் குரங்குகளுக்கு உணவை வழங்கி பிச்சைக்காரர்களாய் மாற்றி விட்டோம். அதை சாப்பிட்டு குரங்குகள் தன்னுடைய இயற்கையான பழக்கங்களையே மாற்றிக் கொண்டுள்ளது மட்டும் அல்லாமல் சாலை ஓர உயிரிழப்புகளும் இடம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உயிரின இழப்புகளை குறித்த ஒரு பிரிவே (Road Killed…
Author: முனைவர் மு சலாவுத்தீன்
அன்புள்ள நண்பர்களே, தினமும் கொரோனாவினால் எற்படும் இறப்பு மற்றும் அவஸ்தைகளைக் கண்டும் கேட்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போன்ற எண்ணங்களில் உழன்றுகொண்டிருப்பீர்கள்? இந்த வேளையில் நம் மனதை ஆரோக்கியத்துடன் வைப்பது நம் கட்டாய கடமையாகும். இல்லையெனில் மன நோயாளியாக 21 நாட்களுக்குப்பின் வீட்டிலிருந்து வெளியேறவேண்டிய அவல நிலை நம்மில் பலருக்கும் வரலாம். சீனாவில் கொரோனாவை வென்றவர்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டே போராடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய மனதை நலமுடன் வைக்க சில வழிகாட்டுதல்கள்: ஒழுங்கமைந்த தினங்கள்: 21 நாட்கள் விடுமுறை என்பதால் தினமும் காலை, மதியம் உணவு சாப்பிடும் நேரம் முதல் எல்லாம் வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைப்பபேசி என்றும் இல்லாமல், கால அட்டவணை தயாரியுங்கள். இவ்வளவு நாள் இருந்த அட்டவணை வாழ்க்கை தற்பொழுது தகரும் போது, உங்கள் மனதும் தகர்ந்துவிடும். மிகவும் சோம்பேறிகளாக ஆகிடுவீர்கள்.தேவையற்ற விவாதங்களைத்…