உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த போர் மூன்றாவது வாரமாக இன்னமும் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களில் இந்திய மாணவர்களும் அடக்கம் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. ஆம் உயர்கல்விக்காக சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரேனில் தங்கி பயில்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இந்த மக்கள் தங்கள் மருத்துவ கனவு எப்படியாவது நிறைவேறி விடாதா என்ற நம்பிக்கையில் அயலகம் தங்கி கற்கின்றனர். துரதிஷ்டவசமாக உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் இவர்கள் சந்தித்த இன்னல்களையும், அரசு இயந்திரம் இதை கையாண்ட விதத்தையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. போர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போர்மேகம் மூல்வதை அனைவராலும் உணர முடிந்தது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேற நிர்பந்தித்து அறிக்கைகள் விட்டனர். தலைநகர் கியிவில் உள்ள இந்தியத் தூதரகம் பிப்ரவரி 15 ஆம் நாள் அன்று மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறலாம் ( ‘may consider…