குடியரசு தின அணிவகுப்பு தேவையில்லாத ஆணி, பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கிற ஒரு நாள் கூத்து என்பதை விளக்கி இரண்டு நாட்கள் முன்பு ஒரு பதிவு எழுதினேன். நாம் பண்டிகை கொண்டாடுவதில்லையா, அதுபோலத்தான் இதுவும் என்று வழக்கம்போல சில அரைவேக்காடுகள் வந்தன. பண்டிகை என்பது அவரவர் சொந்தக் காசில் (அல்லது சமூக நிர்ப்பந்தங்களால் கடன் வாங்கிய காசில்) அவரவர் விருப்பப்படி நாமே கொண்டாடுவது. ஆனால் இந்தக் குடியரசு தினம் என்பது நம் வரிப்பணத்தில், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தேவைகளுக்காகவும் நம் உழைப்பிலிருந்து பிடுங்கப்பட்ட பணம் சுயவிளம்பரங்களுக்காக வீணடிக்கப்படுவது. அப்படியும் அந்த அணிவகுப்பு விழாவினால் சாதித்தது / சாதிப்பது என்ன என்று பார்த்தால் ஒரு மயிரும் கிடையாது. அந்த அணிவகுப்பில் காட்சிப் படுத்தும் விஷயங்களுக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தாலும் எதுவும் கிடையாது. எப்படி என்பதை பிறகு பார்ப்போம். இப்போது ஊர்திகளைப் பற்றிப் பார்ப்போம். குடியரசு தின அணிவகுப்பே வேண்டாம் என்கிறபோது எந்த…