Author: மொ. சாதிக் அல் அமீன்

அதிகரிக்கும் வகுப்புவாத வன்முறைகள், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழல், இராணுவமயமாக்கல் போன்றவற்றால் நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக The Institute for Economics and Peace (IEP) கடந்த புதன்கிழமை வெளியிட்ட உலக நாடுகளின் அமைதிக் குறியீட்டிற்காண தரவரிசைப் பட்டியலில் இந்தியா 126வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், வன்முறைக்காகச் செலவழிக்கப்படும் பொருளாதார அளவீட்டில் இந்தியா 86வது இடத்தைப் பெற்றுள்ளது. IEPஇன் அறிக்கையின்படி, இந்தியா கடந்த ஆண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறாமல் எல்லை வன்முறைகளைக் குறைத்துக் கொண்டதன் விளைவாக அமைதிக் குறியீட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.5% முன்னேறியுள்ளது. எனினும், மேலே சுட்டிக்காட்டிய காரணங்களுக்காக இந்தியா அமைதிக் குறியீட்டில் பின்தங்கிய நாடாகவே கருதப்படுகிறது. இந்த அமைதிக்குறியீடானது 2023ம் ஆண்டின் உலக மக்கள் தொகையில் 99.7% மக்கள் வாழும், அதாவது 163 நாடுகளை ‘சமூகப் பாதுகாப்பு, உள்நாடு – சர்வதேச மோதல்கள், இராணுவமயமாக்களின் அளவு’ போன்ற…

Read More

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (CERT) இணைந்து ஜூன் 20 அன்று புதுடெல்லியிலுள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியாவில், கல்வியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கும், கல்வித்துறையில் சம வாய்ப்புகளை ஏற்ப்படுத்தவும் உடனடி நடவடிக்கையெடுக்கக் கோரி ‘ஷிக்‌ஷா சம்வாத் 23’ எனும் நாடு தழுவிய கவன ஈர்ப்பு பிரச்சார இயக்கத்தைத் துவங்கியுள்ளது. இவ்வியக்கம் சரிந்துவரும் முஸ்லிம்களின் உயர்கல்வி சேர்க்கை வீதத்தை குறைப்பதையும் அனைவரும் கல்வி பெறுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் நிவேதிதா மேனன் “பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும், வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு மாற்றும் காரணியாக இருக்கக்கூடிய கல்வி அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எப்படியோ AISHE ஆய்வறிக்கை உன்மைநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது, உயர்கல்வி சேர்க்கையில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டோர் முறையே 4.2%, 11.9%, 4% முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும்,…

Read More

கல்வி அமைச்சகத்தின் கீழ் அகில இந்தியா அளவில் AISHE நடத்திய உயர் கல்விதொடர்பான ஆய்வறிக்கையில், இந்திய முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களை விடப் பின்தங்கியுருப்பது தெரிய வந்துள்ளது. உயர்கல்வி சேர்க்கையில் பட்டியலின சாதிகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற சமூகத்தினரின் சேர்க்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் முன்னேறியுள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகம் 8% சரிவைச் சந்தித்துள்ளது. அறிக்கையில் சுமார் 1,79,000 முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சரிவிற்கு கொரோனா தொற்று பரவல் ஒரு விதத்தில் காரணமாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகள் திறமையான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதைவிட பத்தாம் வகுப்பு முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறது அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 36%, ஜம்மு – காஷ்மீர் 26%, மகாராஷ்டிரா 8.5%, தமிழ்நாடு 8.1% என கணிசமான சரிவைக் கண்டுள்ளது. தில்லியில், முதுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த ஐந்தில் ஒரு முஸ்லிம் மாணவர் உயர்கல்வியில்…

Read More