இதுவரை நாம் பார்த்த குஜராத்தின் துறை ரீதியான தகவல்கள், அரசாங்கத்திற்குச் சாதகமாகவும், சாதாரண பாமர மக்களுக்குப் பாதகமாகவும் இருந்திருக்கலாம். மேலும் குஜராத் மக்களின் அன்றாட வாழ்க்கையை இத்தகைய துறைகளின் பிற்போக்குத்தனம் மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் குஜராத் மாநிலத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தி காட்டுவதற்கான உந்து சக்தி அம்மாநிலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அழிக்க முடியாத கறையை மறைப்பதற்காகத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 2002 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவிக்கு வந்த முதல் ஆண்டிலேயே குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு படுகொலைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி பெரும்பான்மை இந்து மக்களை, சிறுபான்மை முஸ்லீம் மக்களிடமிருந்து பிரித்துக் காட்டி, தெளிவான திட்டங்களுடன் பிரித்து வாக்கு வங்கிகளாக மாற்றியது. இந்துத்துவ வாதிகள் முஸ்லிம் மக்களின் மீது வைத்திருந்த அருவருப்பை செயலளவில் செய்து காட்டி, முஸ்லிம்களை அவர்கள் பிறந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற சூழ்நிலையை நிரந்தர வடுவாக உருவாக்கியது ஆர்எஸ்எஸ் காவி கார்பரேட் மோடியின்…
Author: முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்
கர்நாடக கல்வித்துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முன் பல்கலைக்கழகப் பொதுத்தேர்வில் (12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இணையானது) மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் தபசும் ஷேக். தபசும் இந்த ஆண்டு கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று, இந்தி, உளவியல், சமூகவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினைக்குள்ளானது ஹிஜாப் தடை என்பதை நாம் அறிவோம். முஸ்லிம் பெண்கள் மீதான இப்படிப்பட்ட உளவியல் ரீதியான நெருக்கடியையும் எதிர்கொண்டு மாநிலத்தின் முதல் மாணவியாக தபசும் ஷேக் வந்திருக்கிறார். இது சங் பரிவாரத்தினருக்கு ஒரு சம்மட்டி அடி என்றால் அது மிகையல்ல. ஹிஜாப் எதிர்ப்பு: இந்துத்துவர்களும் லிபரல்களும் ஹிஜாபுக்கு எதிரான மனநிலை பொதுப்புத்தியில் இருந்து வருவது ஒரு புதிய போக்கு அல்ல. அது மேற்கத்திய காலனிய மனநிலை நீட்சி. மேற்கத்திய நாடுகளில் என்னதான் ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தபோதிலும்…
ஹிந்துத்துவத்திற்கு எதிராக திரைப்படத்திலோ, பாடல்களிலோ, கவிதை வழியாகவோ, கட்டுரை வழியாகவோ தமது கருத்தை வெளிப்படுத்தி விட்டால் போதும் அந்த இயக்குனர்களையோ அல்லது பாடல் ஆசிரியர்களையோ, கவிஞனையோ, எழுத்தாளரையோ தமது நாவிற்கு ஏற்ப வசைப்பாடி தாக்கி துரத்தப்படும் நிலை நிலைநாட்டப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில் 2500 முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்த ஆட்சியாளர்களுக்கு முழுமையான நீதி கிடைத்து விடும் என்று எவ்வாறு கூற முடியும்? “இந்திய திருநாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா சிறுபான்மையானதாக இருந்து பாதிக்கப்படுகிறார்கள்? சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் கூடத்தான் இந்த சமூகத்தில் கொல்லப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள், அவர்களுக்காக நீதி கேட்டு போராட்டம் நடத்தலாமே! ஏன் திரும்பத் திரும்ப இந்த முடிந்து போன விஷயத்தையே பேசிக் கொண்டு அரசியல் செய்கிறீர்கள்” என்று நல்லவர்களைப் போல வியாக்கியானம் பேசிக்கொண்டு வரும் மனிதர்களும் அங்கு இருக்கிறார்கள். இவர்களது நோக்கம் எல்லாம் “நடந்தது, நடந்து முடிந்து விட்டது, இனி மாற்றத்தை நோக்கி செல்லலாம்” என்பதுதான், ஏனெனில் இனக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இவர்களது…
ஒரு சமுதாயம், மிகச் சிறந்த சமுதாயம், மிக மிகச் சிறந்த வாழ்க்கை முறையை நிரந்தர சொத்தாக வைத்துள்ள சமுதாயம், சத்திய பாதையை லட்சிய நோக்காக கொண்ட சமுதாயம், தற்காலிக ஆசைகளின் மத்தியில் தூய கொள்கையைக் கொண்ட சமுதாயம், எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கப்பட வேண்டும்? கால ஓட்டத்தின் சுழற்சியில் 1400 வருடங்கள் கடந்துவிட்டன. தூய கொள்கை தூய வடிவில் தான் இருக்கிறது. இறைவனுடைய கட்டளைகளை தான் கட்டுமர கட்டையில் கடத்திவிட்டோம். காவி பயங்கரவாதிகள் கல்வித் துறையில் நுழைந்து விட்டார்கள் காவல்துறை பயங்கரவாதிகள் காவிச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். நீதிமன்ற நீதிமான்கள் பேனா முனையின் வலிமையை குறைத்து கொண்டிருக்கிறார்கள், சட்டத்துறை நிபுணர்கள் சட்டத்தை சட்டைப்பையில் வைத்து, வட்டத்தை வரைவது போல வார்த்தைகளை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.மிகச் சிறந்த கொள்கை கொண்ட சமுதாயத்தின் செயல்வீரர்கள் தனது சத்திய மார்க்கத்தை நிலைநாட்டவும் இறைவனின் கட்டளைகளின் மூலம் மனித சமுதாயத்தை மீட்டெடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.…
ஆர் எஸ் எஸ், பாஜகவினர் போன்ற காவி கும்பல் கூறக்கூடிய வளர்ச்சி என்பதை சற்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் நமக்கு தானாகவே புரியும். இவர்கள் தனியார்மயத்தை ஊக்குவிப்பதுடன் அதனுடன் ஹிந்துத்துவத்தையும் கலந்து அதனை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களுக்கு முன் எடுத்து வைக்கும் போது அந்த பெயர், சிந்தனை ரீதியாக, சித்தாந்த கருத்தைப் போல வீரியம் பெற்றுவிடுகிறது. குஜராத் மக்கள் மீண்டும், மீண்டும் மோடி அரசை பதவியில் அமர்த்துவதற்கான காரணம் அம்மாநிலத்தின் பெரும்பான்மையான இந்து மக்கள் ஹிந்துத்துவ கருத்தியலுக்கு அடிமையாக இருப்பதாலாகும், ஆனால் இந்த ஹிந்துத்துவ கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது தகுந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட மோடி அரசு தன் மீதோ தன் அரசின் மீதோ வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் ‘குஜராத் உடைய கௌரவத்தின் மீதான தாக்குதல்’ என்றும், ‘குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்’ என்றும் ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைத்திருக்கின்றனர்.குஜராத்தை குறித்து ஏதேனும் ஒரு…
மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி… இன்று நாம் பார்க்கவிருக்கும் வளர்ச்சி மோடி முதலமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குஜராத்தின் பாதையை முன்மாதிரி பாதையாக மாற்றியமைத்த ஆஸ்தான வளர்ச்சி… வேறு என்ன ? பொருளாதார வளர்ச்சி தான். பொருளாதார ரீதியாக குஜராத் எம்மாதிரி வளர்ச்சி பெற்றது என்பதை பார்ப்பதற்கு முன் ஒரு விந்தையான உண்மையை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன், ஏனெனில் அது இந்த கட்டுரைக்கும் அவசியமானது… எந்த ஒரு வளர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதற்காக திட்டங்கள் வரையறுத்து, அந்த திட்டங்களுக்கு பெயர் வைப்பது முக்கியமானது, ஏனெனில் அதை வைத்து தானே நாம் இன்ன இன்ன திட்டங்கள் இன்ன இன்ன வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டது என்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால் பாஜகவை பொறுத்தவரை இது கொஞ்சம் வித்தியாசமானது, இவர்கள் ஒரு வளர்ச்சியை ஏற்படுத்த முயன்றால் அந்த வளர்ச்சிக்கான பெயர்களே அந்த வளர்ச்சி முடிவில் என்னவாகப் போகிறது என்பதை நமக்கு உணர்த்திவிடும். இந்த…
Modi fail in Gujarat
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகள் அண்மையில் தென் மாநிலங்கள் – குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா – போன்ற மாநிலங்கள் எவ்வாறு முன்னேற்றமடையவில்லை என்றும், பாஜக தான் ஆட்சி செய்த மாநிலங்களில் எவ்வாறு வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்றும் இந்த தென் மாநிலங்கள் தாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பவை குறித்தான உரைகள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். பாஜக தான் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி அதிக அளவில் பிரகடனம் செய்கின்றனர், குறிப்பாக பிரதமர் மோடி முன்பு முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை வைத்து ‘குஜராத் மாதிரி’ இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மாதிரியை காட்டிலும் அதிக அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது, மேலும் உலக அளவிலான ‘நகர மாதிரி’களுக்கு இணையான அளவில் குஜராத் வளர்ச்சி கண்டுள்ளது என்பதாக 2013-2014 கால வாக்கில் மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தினர். இதன் விளைவாக பாஜகவிற்கு மிகுந்த செல்வாக்கு…