கடந்த ஆண்டு அக்டோபர் 7, 2023 ஹமாஸ் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியது முதல் இஸ்ரேலுக்கு 17.9 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று ஒரு சர்வதேச அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளது. பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனம் தயாரித்த “அக்டோபர் 7, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செலவு” என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கை இஸ்ரேலின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் விரிவான ஆதரவைக் காட்டுகிறது. இதன் மூலம் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகளின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது இருப்பை வலுப்படுத்திவருவதன் தீவிர தன்மையை நாம் தெரிந்து கொள்ள இயலும். அமெரிக்கா 6.8 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு இராணுவ நிதியுதவிக்கும் (FMF), 5.7 பில்லியன் டாலர்களை அயர்ன் பீம் போன்ற ஏவுகணை பாதுகாப்பு…
Author: முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்
முஸ்லிம்களின் மீதான அநீதிக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்துத்துவவாதிகளின் பல நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. ஆம் அவர்கள் இவ்வளவு நாள் இந்து மக்களைக் கிளர்ச்சியூட்டி அரசியல் செய்து வந்த இராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் நாள் திறக்கப்படுகிறது. 2.7 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இராமர் கோயில் 2019 பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து அதன் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. கொரானாவின் காரணமாகப் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதனைக் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இக்கோயிலைக் கட்டுவதற்கு முதலில் 1800 கோடி தேவைப்படும் என்று கணித்த நிலையில் கட்டி முடிப்பதற்குள் 3000 கோடி ஆகியிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களே இதற்கான நன்கொடையைத் திரட்டுவதற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குப் பல சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன! அதிலும்…
அர்ஜுன் ரெட்டி எனும் வக்கிரக் கதாநாயகனை வைத்து வெற்றிப் படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த வக்கிரப் படைப்பு தான் இந்த அனிமல். படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ஆரம்பம் முதலே நாயகனின் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லத் தொடங்குகிறது படத்தின் கதை. அனிமலின் கதை என்னவென்றால் படத்தின் கதாநாயகனான ரன்விஜய் சிங் (ரன்பீர் கபூர்) இந்தியாவின் முதல் பணக்காரரான பல்பீர் சிங்கின் (அனில் கபூர்) ஒரே மகன். தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் விஜய் சிங் சிறுவயது முதலே பணக்காரனாக இருப்பதால் அவனுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது. தந்தையின் பாசத்தைத் தவிர, தந்தையின் அன்பிற்காக ஏக்கம் கொள்கிறான். ஒருகட்டத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே தந்தைக்கு அரணாக நின்று எதிரிகளைப் பழிவாங்கத் துடிக்கிறான். இறுதியாகத் தந்தையைக் கொலை செய்ய நினைக்கும் எதிரிகளைப் பழி வாங்கினாரா? ஏக்கத்தில் இருக்கும் ரன்விஜய் தந்தையின் அன்பைப் பெற்றாரா? என்பதே மீதி கதை.…
23 மார்ச் 2003, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் சுக்குநூறாக உடைத்த நாட்களில் ஒன்றாகும். அன்று ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் 140 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து, ஒரு பில்லியன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்கினார். சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் மக்களிடையே ஒரு வதந்தி பரவத் தொடங்கியது, அது உண்மை என்ற பதத்தை ஏற்படுத்தியது. அந்த வதந்தி என்னவென்றால்: பாண்டிங்கின் பேட்டில் ஒரு ஸ்பிரிங் (Spring) இருந்தது, அது அவருக்கு அதிக ரன்கள் அடிக்க உதவியது, இதுவே இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது என்ற கூற்று காட்டுத்தனமாகப் பரவியது, ஆனால் இந்தியா தோற்றுவிட்டதற்கான காரணத்தை ஜீரணிக்க முடியாமல் சிக்கித் தவித்த பல ரசிகர்களுக்கு இந்த வதந்தி குறிப்பிட்ட சில காலங்களுக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கக் கூடும். இது 90களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மாயை மட்டுமே ஒரே…
இந்தியாவில் மக்களை அதிதீவிர பதட்டத்தில் வைத்திருக்கும் இரண்டு நாட்கள் உள்ளன. ஒன்று தேர்தல் நாட்கள்; மற்றொன்று ஊர்வலத்தைக் கொண்டிருக்கும் இந்துப் பண்டிகை நாட்கள். ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் அமைதியாகக் கொண்டாடும் சாதாரண இந்து மக்களை விட்டுவிடுங்கள், அவர்கள் எவ்வித நயவஞ்சக எண்ணங்களும் இன்றி வழக்கமான பண்டிகை நாட்களாக அவற்றைக் கடந்து விடுகின்றனர். ஆனால் காவி பயங்கரவாதிகள் நடத்தும் ஊர்வலங்கள் அப்படியல்ல; அதில் கலவரங்கள் ஏற்படாவிட்டால் தான் அது வியப்புக்குரிய ஒன்று. இந்து பயங்கரவாதிகள் தங்களின் ஊர்வலங்களில் எப்படி பிரச்னை, கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு சமீபத்திய ஹரியானா மாநிலத்திலுள்ள மேவாத் மாவட்டத்தின் நூஹ் பகுதியில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பிரஜ்மண்டல் யாத்ரா (கிருஷ்ணரை பற்றிய பாதயாத்திரை) என்பது ஆண்டுதோறும் ஜூலை 31ஆம் தேதி ஹரியானாவின் மேவாத் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. இது VHP நிர்வாகிகளால் 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு…
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதன் அரசியல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் மக்கள் அனைவருக்கும் பயனளிக்காத திட்டங்களைக் காட்டிலும் சமூகத்தின் ஒருசார் பிரிவினரின் குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. அதனை பொதுமக்கள் அரும்பாடுபட்டு, போராட்டங்கள் நடத்தி, அது தடியடியாக, அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக மாற்றமடைந்து பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு அவை திரும்ப பெறப்படும் இதுவே வழக்கம். ஆனால் சமீபத்தில் வெளியாகி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சில இதற்கு விதிவிலக்காக திகழ்கின்றன. பொதுமக்களின் போராட்டங்கள் விவாதங்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டி அநீதமாக, அடக்குமுறையின் பெயரில் கடந்த ஆகஸ்ட் 5, 2019இல் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 9 அன்று முஸ்லிம்களின் நிலமாக இருந்த பாபர் மசூதி இருந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு போன்ற பாஜகவின் நீண்ட கால அநீதமான வாக்குறுதிகள்…
நாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டி, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த உமர் காலிதை சிறையில் அடைத்து நேற்றுடன் 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. முஸ்லிம் சிறுபான்மையினர் மீது பாரபட்சம் காட்டும் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தியதற்காகவே உமர் காலித், ஆளும் பாஜக அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் முழு பழியையும் முஸ்லிம் ஆர்வலர்கள், மாணவ தலைவர்களின் மீது சுமத்திய மத்திய அரசு, உமர் காலிதை UAPA என்ற பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்தது. உமர் காலிதை சிறைக்கு அனுப்ப பாஜக அரசாங்கம் செய்த அத்துமீறல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், நம்பகத்தன்மையற்ற சாட்சிகள் போன்றவற்றை வைத்து, பொய்யான வாதங்களைப் பயன்படுத்தி, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் மூலம் அவரை திகார் சிறைக்கு அனுப்பியது. ஜனநாயக முறையில் சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதன்…
21 ஆம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக மாறிவிட்டது சமீபத்தில் நடந்த ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து. ரயிலில் பயணித்தவர்களில் குறைந்தபட்சமாக 270 இறந்திருக்கின்றனர் 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். உள்ளூர் வாசிகள் முதல் உலக மக்கள் வரை நாடு மொழி இன மத பேதமின்றி அனைத்து விதமான மக்களும் தங்களது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள். தன்னார்வமாக ஏறக்குறைய இளைஞர்கள் 2000 பேர் ரத்ததானம் வழங்கி இருக்கின்றனர். உள்ளூர் மக்களில் பலரும் தங்களது புறத்திலிருந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். உலகமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும், ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்திய அவ்வேளையிளும் இந்துத்துவாதிகள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? வேரென்ன இந்த விபத்தைச் சாதமாகக் கொண்டு வழக்கம் போல தங்களது விஷமத்தனமான கருத்துகளை மக்களின் மத்தியில் பரப்ப முயன்றிருக்கின்றார்கள். இந்திய நாட்டில் எங்கு எந்த தவறு நடந்தாலும், அதனை வாய்ப்பாகக் கொண்டு இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பு பிரச்சாரத்தை எப்படிப் பரப்புவது என்று…
கடந்த செவ்வாயன்று வெளியான ஆய்வு ஒன்று ‘தொண்ணூறுகளின் முற்பகுதியிலிருந்து உலகின் பெரிய ஏரிகள், நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சுருங்கிவிட்டன, முக்கியமாகப் பருவநிலை மாற்றம், விவசாயம், நீர் மின்சாரம், மனித நுகர்வுக்கான நீர் பற்றாக்குறை பற்றிய விவசாயிகளின் கவலைகளும் தீவிரமடைந்துள்ளன’ எனக் கூறுகிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான காஸ்பியன் கடல் முதல் தென் அமெரிக்காவின் டிடிகாக்கா ஏரி (Lake Titicaca) வரை இருக்கக் கூடிய உலகின் மிக முக்கியமான சில நன்னீர் ஆதாயங்கள் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக ஆண்டுக்கு சுமார் 22 ஜிகா டன்கள் என்ற மொத்த விகிதத்தில் தண்ணீரை இழந்திருப்பதாகச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான லேக் மீட்டின் அளவை விட 17 மடங்கு அதிகம். சயின்ஸ் இதழின் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மேற்பரப்பு நீர்வியலாளர் ஃபாங்ஃபாங் யாவ், இயற்கை ஏரிகளின் சரிவிற்கு 56% காலநிலை வெப்ப மயமாதலும் மனித நுகர்வும்…